Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Saturday, May 8, 2010

இணையத்தில் அதிகம் உலாவுபவராக இருந்தாலும் அதிக வேலைப்பளு உள்ளவராகயிருந்தாலும் தங்களின் தூக்க நேரத்தை தியாகம் செய்யவேண்டிவரும். அதுவும் ஓரளவுக்கு மீறிப் போனால் உங்கள் ஆயுளை உங்கள் வேலைகளுக்காக பணையம் வைக்கவேண்டிவரும் என சமீபத்திய ஆய்வு குறிப்பொன்று கூறுகிறது. குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டும் அதேபோல அதிகபட்சம் 9 மணி நேரம் தான் தூங்க வேண்டும் என்கிறது. உங்களை விட உங்கள் பிரியமானவர்களுக்காகவாவது உங்கள் நலனில் அக்கறை செலுத்துங்கள்.



வெகுவிரைவில் அரசு பொது தேர்வு முடிவுகள் வெளிவரவுள்ள நிலையில் மாணவர்கள் தேர்வு முடிவுக்காக ஆர்வமாக இருப்பதையறிந்து நமது தினமலர் நாளிதழ் ஒரு புது வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன தொழிற்நுட்பத்தை எப்போது தனது வாசகருக்குத் தரமுனையும்  தினமலர் இம்முறை தேர்வு முடிவுகளை உங்கள் மொபைலுக்கு அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக சிறப்பு பக்கத்தின் மூலம் மாணவர்களின் அடையாள எண் மற்றும் தொலைபேசி எண்களை பெற்றுவருகிறது. உங்களுக்குத் தெரிந்தவர்கள் மற்றும் தேவையானவர்களுக்கு இந்த சேவையை சொல்லி வீட்டிலிருந்தே இலவசமாக முடிவுகளை பெற்றுப்  பயன்பெறச்செய்யுங்கள்.


பேஸ்புக் சர்ச்சை 
அண்மையில் பேஸ் புக் மீது தகவல் பாதுகாப்பு கோளாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  நீங்கள் உங்கள் நெருக்கமானவருடன் செய்யும்  லைவ் சாட்டிங்கை உங்கள் வேறொரு நண்பர் அதை காணமுடிகிறவாறு தகவல் பாதுகாப்பில் ஓட்டை விழுந்துள்ளது. அந்த சர்ச்சை எழுந்த அடுத்த சில மணிகளிலே லைவ் சாட்டிங் வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்ததுள்ளது. பொதுவாக பேஸ்புக் மீதுள்ள குறைகளாக கருதுவது, அந்த கணக்கிலிருந்து ஒருவர் முழுவதுமாக வெளியே வரமுடியாது; அதன் சேவை விதிகளில் உள்ள குளறுபடிகள்; அடிக்கடிவரும் இத்தகைய தகவல் பாதுகாப்பு ஓட்டைகள் என சொல்லலாம். அதனால் பேஸ்புக் பயனாளிகள் கொஞ்சம் கவனித்து நடந்து கொள்ளவும் 


வன் எழுத்துக்களை மென் எழுத்துக்களாக மாற்றும் வசதியை goggle எனப்படும் கூகிள் கைபேசி தற்போது வழங்குகிறது. இதன் மூலம் அச்சடிக்கப்பட்ட எழுத்துக்களை அப்படியே மொபைல் திரையில் எழுத்துக்களாகவே படம் பிடிக்கலாம். நீங்கள் தேவையான வற்றின் மீது மொபலின் காமிராவை சற்று நேரம் காட்டினால் அது ஆய்வு செய்து எழுத்துக்களாக ஊர்ஜிதம் செய்து உங்களிடம் காட்டும் அவற்றை உங்கள் மொழியில் மொழி பெயர்ப்புச் செய்தும் காட்டும். நீங்கள் புதிய நாடுகளுக்கு போனால் எளிதாக அவற்றின் மொழியை இந்த கைபேசி மூலம் படித்துக்கொள்ளலாம். தற்போது வரை அது 52 மொழிகளில் பெயர்ப்புகளைச் செய்யும் இந்தியா மொழிகளில் இந்தி மட்டும் அடங்கியுள்ளது. விரைவில் தமிழும் வரும் என எதிர்பார்க்கலாம் 

2 comments:

Unknown said...

பயனுள்ள பகிர்வு, வாழ்த்துக்கள்

நீச்சல்காரன் said...

Jaleela Kamal நன்றி சகோதரி