Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Monday, June 7, 2010

ஸ்பான் பூட் கொள்ளையர்கள்.
பொதுவாக நமது மின்னஞ்சல் முகவரிகளை அடுத்தவர்களுக்குக் கொடுக்கவும் பரப்பவும் ஆசைப் படுவோம். நல்லது, ஆனால் அந்த முகவரி  அலுவல் ரீதியாகவோ அல்லது முக்கியமானதாகவோ இருந்தால் தனி கவனம் செலுத்துவது மிக முக்கியம். இணைய வெளியில் தனியாக நாம் பதிவும் மின்னஞ்சல் முகவரிகள் இந்த ஸ்பான் பூட் எனப்படும் இணையத் திருடர்களால் கவரப்படும். உதாரணத்திற்கு xxxxxx@gmail.com என்று ஒரு முகவரியை நீங்கள் இணைய வெளியான வலை தளங்கள் அல்லது வலைப் பதிவுகளில் பதித்தால் இந்த பூட்கள் இந்த மின்னஞ்சலை சரியாக அடையாளம் கண்டு எடுத்துச் சொல்லும். பிறகு உங்களுக்கு ஸ்பான் அஞ்சல்களை அனுப்பி தொந்தரவு செய்யும். அதனாலே தங்களது மின் முகவரியை ஆங்கர் மேற்கோளுடன் பயன் படுத்த பரிந்துரைக்கின்றனர்

Click me இப்படிக் காட்டும் பயனர்களும் இந்த சுட்டியைச் சொடிக்கினால் முகவரி தானாக அவர்களது அஞ்சலில் போய் அமரும். இந்த வழியில் மின்னஞ்சல் நேரடியாக எழுத்துவடிவில் இல்லாததால் ஸ்பான் பூட்கள் இதை திருட நினைக்காது. இதன்முலம் அதிகமான ஸ்பான் தளங்களுக்கு உங்கள் மின்முகவரிகள் செல்வதைத் தடுக்கலாம். ஸ்பான பூட் தொந்தரவை தவிர்க்க இணைய வெளிப் பயன்பாட்டிற்கென்று தனி முகவரிகளையும் வைத்துக் கொள்ளலாம்.

உங்களுக்காக நான் தேடித்தருகிறேன்.
ஆமாம், கணினியில் அதிகம் பரிச்சியம் இல்லாத உங்கள் நண்பருக்கு ஏதாவது கூகுளில் தேட உதவவேண்டுமென்றால் உங்களுக்காக தேடித் தர ஒரு தளமுள்ளது. http://lmgtfy.com/

நீங்கள் தேட வேண்டிச் சொல்லைப் போட்டுக் கேட்டால் ஒரு சுட்டியைத் தரும். அந்த சுட்டியை அப்படியே சுருக்கிக் கேட்டாலும் சுருக்கி இப்படித் தரும் அவ்வளவுதான். http://tinyurl.com/273agyt
இப்போது இந்த சுட்டியை சொடிக்கினாலே நீங்கள் தேடவேண்டியதைத் தேடும். வித்யாசமா இருக்கு

கம்ப்யூட்டரில் போட்டாலும் அளந்து போடு
கம்ப்யூட்டருக்கு போடும் மின்சாரத்தை அளந்து போடுங்கள். இருக்கிற கொஞ்ச நஞ்ச மின்சாரத்தை அளந்து பயன் படுத்த நினைத்தால் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு இலவச மென்பொருளைத் தருகிறது அதை நம்பகத்துடன் பயன் படுத்தலாம். இந்த மென்பொருள் உங்கள் கணினி உட்கொள்ளும் மின்சார அளவைச் சொல்லும். அந்த அளவுகள் ஒரு மணி நேரக்காலத்தில் செலவாகும் மின்சாரத்தை வாட் அளவுகளில் சொல்லும். அதை நீங்கள் எவ்வளவு நேரம் பயன் படுத்துகிறீர்களோ அவ்வளவால் பெருக்கினால் மொத்த மின் செலவைப் பெறலாம். அதன் பெயர் ஜூல்மீட்டர் தரவிறக்க

ஜிமெயில் சித்திரக் கையெழுத்து
ஜிமெயிலில் இறுதியாக இடும் உங்கள் கையெழுத்தை சித்திர வடிவில் இடலாம் அல்லது சித்திரங்கள் சேர்த்து இடலாம். இப்படி
gmail-> settings-> labs சென்று கொள்ளவும் பிறகு "Canned Responses” மற்றும் “Inserting Images" ஆகிய தேர்வுசெய்து கொள்ளவும்.
பிறகு எப்போதும் போல ஒரு மின்னஞ்சலைத் திறந்து உங்கள் பெயர் அல்லது பெயருக்குப் பதிலாக ஏதாவது கையெழுத்துப் படம் அல்லது இதுபோல டிவிட்டர் இணைப்பு எனக் கொடுத்துக்கொள்ளுங்கள். டிவிட்டர் இணைப்பு படத்தை உங்களின் டிவிட்டர் கணக்குக்கு Link பட்டன் மூலம் இணைத்துக் கொள்ளலாம்.
அடுத்து Canned Responses என்ற சுட்டி உங்கள் பக்கத்தில் தெரியும் அதை சொடுக்கி நல்ல பெயர் கொடுத்து save செய்துக் கொள்ளவும். அவ்வளவுதான்.

இனி எப்போது மின்னஞ்சல் அனுப்பினாலும் இந்த Canned Responses சுட்டி மூலம் இந்த சித்திரக் கையெழுத்தை எளிதில் இணைத்துக் கொள்ளலாம்.

5 comments:

Unknown said...

நல்ல தகவல்கள் எனக்கு வந்த ஸ்பாம் தொல்லைகள் தாங்காமல் ஒரு மெயில் முகவரியை இப்போது பயன்படுத்துவது இல்லை.

Unknown said...

Hi,
Super
www.dailypcnews.blogspot.com

Jey said...

தகவலுக்கு நன்றி. தொடர வெண்டுகிறேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

ஜிமெயில் கையெழுத்து தகவலுக்கு நன்றி பாஸ்,,,,

S.Devarajan said...

நல்ல தகவல் தொடரட்டும் உங்கள் பணி.