Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Wednesday, August 25, 2010

மடிப்பு கசங்கிய வயதான தாள்களின் மேல் கேள்விப் பசிக்கு தேடிய காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இளைமையான வலைப் பக்கங்களின் மேயத்தொடங்கி விட்டோம்.

புத்தகங்களுக்கு நிகராக வலைப் பக்கங்களில் அகராதிகளும் அகரமுதலிகளும் படையெடுக்கத் தொடங்கி விட்டன. கணிசமான இணையப் பயனாளர்களும் அதனைப் பயன்படுத்தி வருகின்ற வேளையில் முக்கிய அகராதிகளை ஒருங்குப்  படுத்தும் ஒரு சிறு முயற்சியாக இந்த கஜெட்டை உருவாக்கியுள்ளேன்.
ஒரு வலைப் பக்கத்தை படித்துக் கொண்டுயிருக்கையில் ஒரு வார்த்தைக்கு பொருள் தேட வேண்டி வரும்போது பிரதான அகராதிகள் பக்கத்திலிருந்தால் எப்படியிருக்கும்? அப்படியொரு முயற்சியாக

பயன்படுத்தும் முறை:
இதில் நேரடியாக தமிழ் சொற்களைத் தட்டச்சு செய்யலாம். அல்லது வேண்டிய சொல்லை இணைத்தும் கொள்ளலாம்.
அடுத்து வேண்டிய அகராதியை தேர்ந்தெடுத்து 'செல்' பொத்தானை அழுத்தவும்.
முகக்கியமான மற்றும் தொழிற்நுட்ப ரீதியில்  இணைக்கமான அகராதிகள் இணைக்கப்பட்டுள்ளது.

முடிந்தளவு பிழைகளை களையப்பட்டுள்ளது மேலும் பிரதான உலாவிகளில் சிறப்பாக செயல்படுகிறது. கட்ஜெட் பாதிக்காமல் இதை புதிப்பிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மேலும் பயனர்சார் வசதி மேன்பாட்டு ஆலோசனைகளும் குறைகளும் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

உடனடியாக தேடிக்கொள்ள இந்த அகராதி கட்ஜெட்டை உங்கள் கூகிள் முகப்புப் பக்கத்தில் இணைத்துக்கொள்ள இங்கு செல்லவும்

தேவைப்பட்டால் உங்கள் வலைப் பக்கத்தில் இணைக்கும் முறை:
கட்ஜெட்டை பெற இந்த நிரலியை நேரடியாக எடுத்தும் போட்டுக் கொள்ளலாம்.
அல்லது இங்கு

சுருக்கமான கட்ஜெட்டை பெற இந்த நிரலியை நேரடியாக எடுத்தும் போட்டுக் கொள்ளலாம்.
அல்லது இங்கு


அல்லது
பிளாக்கர்.காம் ->design ->Page element சென்று Add Gadget பட்டனை அழுத்தவும், இப்படி ஒரு ஜன்னல் திறக்கும்
அதில் Add Your Own பட்டன் மூலம் இந்த ஜன்னலை திறந்து கொள்ளுங்கள்.
இங்கே குறிப்பிட்ட பெட்டியில் இந்த முகவரியைப் இணைக்கவும்   http://hosting.gmodules.com/ig/gadgets/file/105066904960012479556/Neechalkaran_tamildictionaries.xml
சுருக்கமான கட்ஜெட்டை பெற http://hosting.gmodules.com/ig/gadgets/file/105066904960012479556/Neechalkaran-tamildictionaries.xml
அடுத்த சன்னலில் வேண்டிய தலைப்பையும் உயரத்தையும் இட்டு சேமித்துக் கொள்ளலாம்.

இதன் மாதிரியை இப்பக்கத்தின் கீழே பயன்படுத்தலாம்.

தொடர்புடைய இடுகை:
முன்னர் சேகரித்த அகராதிகளின் பட்டியலில் மேலும் சில அகராதிகள் சேர்த்துள்ளேன். வேண்டியவர்கள் அறிந்து கொள்ளுங்கள்.

updates:
கூகிள் பட்டியலில் இந்த கட்ஜெட்கள் இணைந்துவிட்டது.
ver 1
ver 2
ver 3

9 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான பகிர்தல்..
தேவையான சேவையும் கூட..
எனது வலைப்பக்கத்தில் இணைத்துக்கொண்டேன்..
நன்றி நண்பா.

அன்வாஸ் முஹம்மத் said...

நன்றி இந்த அறிய தகவலுக்கு

எஸ்.கே said...

மிக அருமையான பதிவு நன்றி!

அணில் said...

சூப்பரு!!!!....

என்னது நானு யாரா? said...

அருமை நண்பா! உங்களின் உழைப்பு மிகவும் நல்ல பலன்களைத் தரும். எல்லோருக்கும் பயனுள்ள அகராதி தேடு பொரிக்கு மிக்க நன்றி

நீச்சல்காரன் said...

முனைவர்.இரா.குணசீலன்,
அன்வாஸ் முஹம்மத்,
எஸ்.கே,
ந.ர.செ. ராஜ்குமார்,
என்னது நானு யாரா?
கருத்துக்களுக்கு நன்றிகள்

venkai said...

நன்றி தமிழா..

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பகிர்தல்..

nagoreismail said...

உங்களின் பதிவு ஒவ்வொன்றுமே புதிதாக கற்றுக் கொள்ள வைக்கிறது. உபயோகமாகவும் இருக்கிறது. வாழ்த்துகள். நன்றிகள்