Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Sunday, November 14, 2010

எனது அலுவலகத்தில் blogspot எல்லாம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு எந்த ப்ராக்சி தளங்கள் இல்லாமல் பதிவுகளைப் படிக்க முடியுமா?
உங்களுக்கான விடைகள் மூன்று.
blogger.com தடை செய்யாவிட்டால் நீங்கள் எந்தவொரு பதிவையும் படிக்கலாம். அதற்கு அந்த பதிவின் postid மற்றும் blogid இருந்தால் போதும் ஆனால் பிளாக்கர் தளமும் அதிகமாக தடை செய்யப்பட்டுள்ளதால் சிறந்த இடம் RSS feedsல் படிப்பதுதான். http://www.rssreader.com/ http://www.feedreader.com/ என பல சேவைகள் உள்ளன. அதில் பிரதானமான கூகிள் ரீடர், இங்கு சந்தாதாரராகிப் படிக்கலாம் அல்லது search பகுதியில் தேடி படிக்கலாம்.
இரண்டாவதாக அந்த தளத்தில் மின்னஞ்சல் சந்தாதாரராகியும் பதிவுகளை நேரடியாகப் பெற்றுப் படிக்கலாம்.
இந்த இரண்டுமே செய்தியோடை[RSS] வழங்கும் தளங்களுக்குப் பொருந்தும் ஆனால் அப்படிஎதுவும் இல்லாத தளங்களுக்கு இருக்கவே இருக்கு ஒரு சேவை http://www.web2pdfconvert.com/ இதன் மின்னஞ்சல் submit@web2pdfconvert.com முகவரிக்கு வேண்டிய தளத்தின் முகவரியை அஞ்சல் பகுதியில் போட்டு அனுப்பினால் போதும் சில நிமிடங்களில் அந்தப் பக்கம் உங்களிடம் pdf வடிவில் வந்துவிடும். இதுபோக சில ஆலோசனைகள்: தடைசெய்யப்பட்ட தளங்களைப் படிப்பது எப்படி?
எல்லாம் சரி மேனேஜருக்கு தெரியாமல் படிக்கவும்.

எனது தளத்தை அதிகமானவர்கள் பார்க்கிறார்கள் ஆனால் அலெக்ஸாவில் ரேங்க் அதிகரிக்க முடியவில்லையே ஏன்?
மிகவும் எளிமை.அந்த தளத்தின் கருவிப் பட்டையை நீங்கள் மற்றும் உங்கள் வாசகர்கள் இணைத்திருந்தால் போதும். அலெக்ஸாவின் கணக்குகள் எல்லாம் இந்தக் கருவிப்பட்டை கொண்டுள்ள பிரவுச்சருக்குத் தான் பொருந்தும். உதாரணத்திற்கு தினமும் இரு நூறு முறை உங்கள் பக்கம் திறக்கப்பட்டாலும் அதில் இருபது பிரவுசரில் அலெக்ஸா இருந்தால் உங்கள் பக்கம் இருபது முறைதான் திறக்கப்பட்டதாகக் கொள்ளும். ஒரே வழி வாசகர்களும் கருவிப் பட்டையை இணைப்பது அல்லது அலெக்ஸாவை மறப்பது.

நான் போடும் பதிவுகளில் சிலவற்றை கூகிள் தேடுதளத்தில் வராமல் தடுக்கமுடியுமா?
கூகுளின் கிராவளர்கள்[crawlers] எப்போதும் நமது தளங்களில் ஊர்ந்துக் கொண்டே இருக்கும். கிடைக்கும் செய்திகளை அப்படியே எடுத்து தனது சர்வருக்குக் கொண்டுச் செல்லும். இதை தடுக்க சில வழிகள் உள்ளது. உங்கள் தளத்தில் robots.txt என்று வைப்பதன் மூலம் தவிர்க்கலாம் ஆனால் நம்மைப் போன்ற பிளாக்கர்களுக்கு அது முடியாததால்
<meta name="robots" content="noindex">
என்கிற வரியை உங்கள் பதிவில் சேர்த்துப் பதிந்தால் போதும். இந்த வரி உங்கள் குறிப்பிட்டப் பதிவை தேடுதளங்களிருந்து[எல்லா தேடுதளங்கள்] காத்திவிடும். இதே வரியை நீங்கள் உங்கள் ப்ளாக் டேம்ளைட்டில் போட்டால் உங்கள் பிளாக் பக்கமே கூகிள் வராது. அதே நேரம் குறிப்பிட்ட பத்தியை மட்டும் மறைக்க விரும்பினால் <!--googleoff: all--> என்று தொடங்கி மறைக்க வேண்டிய வாக்கியங்களை எழுதி <!--googleon: all--> என போட்டு முடிக்கவும். இந்த இரண்டுக்கும் நடுவில் உள்ளவையை கூகிள் எடுத்துக் கொள்ளாது.


என்னை ஃபாலோ செய்பவர்களுக்கு என்னுடைய புது பதிவுகள் தெரிவதில்லை. இதற்கு என்ன ப்ராபளம்?
இதற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு, ஒன்று [கீழே கோடிட்டுள்ள] உங்கள் செய்தியோடையை[RSS feeds] none என்று கொடித்திருந்தால் அதாவது உங்கள் செய்தியோடையை தடை செய்திருப்பதாக அர்த்தம். இதற்கு தீர்வு அங்கே உள்ள allow blog feeds பகுதியில் full அல்லது short தேர்வு செய்யவும்.
இரண்டாவது [அடுத்த கோடிட்டுள்ள] Post Feed Redirect URL பகுதியில் தவறான முகவரியைக் கொடுத்திருந்தால் இப்பிரச்சனை வரும். சரியான முகவரியில்லாவிட்டால் அவற்றை அழித்துவிடுங்கள் அல்லது சரியான முகவரியைக் கொடுங்கள் இப்பிரச்சனை தீரும்.



கேள்வி கெட்டவர்களின் முன் அனுமதியில்லாததால் பெயர்கள் வெளியிடவில்லை. யாருக்காவது உதவும் என்கிற ரீதியில் பதில்கள் தனிப் பதிவாக. கேள்விகள் கேட்டு அனுப்பிய நண்பர்களுக்கு நன்றிகள். சில கஷ்டமான கேள்விகளுக்கு பதில் தெரியாததால் சாய்ஸில் விட்டுவிட்டேன். இணையம், வலைப்பூக்கள் சம்மந்தமான கேள்விகள் இருந்தால் இப்பகுதிக்கு கேட்கலாம்.

அடுத்தப் பகுதி கேள்வி-பதில் [வலைப்பூக்கள்] -II

14 comments:

எல் கே said...

பலருக்கும் தேவையான பதில்கள் நீச்சல். வாழ்த்துக்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

பயனுள்ள பதில்கள்.. பகிர்வுக்கு நன்றி...

சாந்தி மாரியப்பன் said...

பயனுள்ள தகவல்கள்..

எஸ்.கே said...

மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி!

ஜோதிஜி said...

பயனுள்ள தகவல்கள் நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நன்றி நீச்சல்காரன், தகவல்களுக்கு!

நீச்சல்காரன் said...

@LK,
@வெறும்பய,
@அமைதிச்சாரல்,
@எஸ்.கே,
@ஜோதிஜி,
@NIZAMUDEEN
[im]http://sites.google.com/site/neechalkaran/pictures/thanks.JPG[/im]

அன்பரசன் said...

நல்ல தகவல்கள்..

ஆர்வா said...

எல்லாமே மிக உபயோகமான தகவல்கள்...

செல்வா said...

[co="red"][si"red"]உண்மைலேயே எல்லாகேள்விகளும் பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன் .. நீங்க பதிலளித்த விதமும் அருமைங்க ..![/co][/si]

விஷாலி said...

பயனுள்ள தகவல்கள்,நன்றி மற்றும் இந்த தமிழ் கருத்து பட்டையை எவ்வாறு என் தளத்தில் நிறுவுவது என்று சொல்ல முடியுமா நண்பரே.

Anonymous said...

ப்ளாக்கில் இருந்து .காம் டொமைனுக்கு மாறினேன்...ஆனால் ஃபாலோயர்ஸ்க்கு நியூஸ் லெட்டர் அனுப்ப முடியவில்லை...ஃப்ரெண்ட் கனெக்ட் மக்கர் செய்கிறது

சி.பி.செந்தில்குமார் said...

குட்

சமுத்ரா said...

பயனுள்ள பதில்கள்.. பகிர்வுக்கு நன்றி...