Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Sunday, January 9, 2011

எனது அலுவலகத்தில் பிளாக்ஸ்பாட் தடை செய்யப்பட்டுள்ளதாக அழுது கொண்டிருக்க, வினித் மட்டும் கவலைப்பாடாமல் புகுந்து விளையாடிவருகிறான். அவனிடம் எப்படிப் பதிவுகளைப் படிப்பாய் என்றால் கூகிள் ரீடர் என்கிறான். சரி பதிவுக்கு வந்த கருத்துக்களை எப்படிப் பார்ப்பாய் என்றால் கூகிள் ரீடர் என்கிறான். பதிவை எப்படி போஸ்ட் பண்ணு வாய் அதான் மெயிலும் தடைப்பட்டுள்ளதே என்றேன் பூரிப்புடன், கூகிள் ரீடர் என்றான் சிரிப்புடன். விடுவேனா, உடனே நீ படிக்கும் தளத்தில் RSS feeds அளவாக இருந்தால் எப்படி முழுவதும் படிப்பாய் என்று சிதம்பர ரகசியத்தை கேட்ட திருப்தியிலிருக்க அவனோ அதற்கும் கூகிள் ரீடர் என்று சொல்லிப் பறந்து விட்டான்.

அடுத்து உள்மனசின் பாராளுமன்ற கூட்டுக்குழுவை வைத்து கூகிள் ரீடரை சோதிக்கத் தொடங்கினேன். ஆம், கூகிள் ரீடர் இந்த வார்த்தை அலுவலகத்தில் படிப்பவர்கள், இண்டர்நெட்டை சிக்கனமாக உபயோகிப்பவர்கள், ஒரே இடத்தில் பல பதிவுகளை படிக்க நினைப்பவர்கள் என பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டதாம். இதைப் பற்றித் தெரியாதவர்கள் வாழ்க்கையும் எதிர்புறமாகப் புரட்டிப் போடுதாம்.[நியூட்டன் 3 விதி]


ஒவ்வொரு வலைப்பூவும் அல்லது ஒவ்வொரு தளமும் தனது பதிவுகளை எளிதாக மற்ற தளங்களுக்குச் செல்ல RSS என்கிற சமிங்கைகளாக வெளியிடும். அவற்றை பிரித்துப் படிக்க உதவும் ஒருவகை படிப்பான் இந்த கூகிள் ரீடர். இது போல சில ரீடர்கள் இருந்தாலும் இதைப் போல பல்நோக்குப் பார்வையில்லை எனலாம்.

ஒரு தளத்தை இரண்டு வகையாக இங்கு இணைத்துப் படிக்கலாம், ஒன்று நேரடியாக add subscription பட்டன் மூலம் ஒரு தளத்தின் செய்தியோடையைக் கொடுத்து இணைப்பது. மற்றொன்று பிளாக்கரில் பின்தொடரும் வலைப்பூக்கள் தானாகவந்து இணைவது. தளங்கள் எல்லாம் இடப்புறம் பட்டியலாகவும் அதன் பக்கங்கள் வலதுபுறம் விரிந்தும் இருக்கும். பொதுவாக வலைப்பூக்களை இணைக்க அதன் செய்தியோடையைப் பயன்படுத்தலாம்
பிளாக்கர் வலைப்பூக்கள் கீழ்க்கண்ட வரைமுறையில் இருக்கும்
http://ethirneechal.blogspot.com/feeds/posts/default பதிவுகளுக்கு
http://ethirneechal.blogspot.com/feeds/comments/default மறுமொழிகளுக்கு
http://ethirneechal.blogspot.com/feeds/posts/default/-/tagsname அதன் லேபிளுக்கு[விருப்ப லேபிள்களை போட்டுக் கொள்ளலாம்]
வேர்ட்பிரஸ்க்கான வரைமுறை
http://neechalkaran.wordpress.com/feed பதிவுக்கு
http://neechalkaran.wordpress.com/comments/feed/ மறுமொழிக்கு
ஒவ்வொரு தளத்தின் பதிவுகளை வரிசைப்படுத்தி படிக்க ஏதுவாகக் காட்டும், ஒவ்வொரு பதிவின் கீழும் மீண்டும் படிக்க நினைக்கும் பதிவுகளை keep unread கொடுத்து குறித்து வைத்து மீண்டும் படிக்கலாம், பிடித்தப் பதிவுகளை share செய்து கொள்ளலாம், மின்னஞ்சலும் செய்யலாம், tag பகுதியில் ஒரு குறிச்சொற்கள் கொடுத்து பலப் பதிவுகளை இணைக்கலாம். அதாவது வெங்காயம் சம்மந்தப்பட்ட பதிவுகளை எல்லாம் onion என்று tag செய்து விட்டால் onion என்ற லேபிளுக்கு கீழ் இந்தப் பதிவுகள் வரிசைப்படுத்தப்படும் [சமைக்கும் பொது ஒரு ஹெல்ப்]

அடுத்து சில தளங்களை மட்டும் ஒரு குழுவாக்கி[folder] எளிதில் தொடரலாம். இதுபோக கூகிளும் பிரபலங்களின் அடிப்படையில் சில தளங்களை பரிந்துரைக்கும், நாமும் தேடிக் கொள்ளலாம்.
அப்புறம் என்ன செய்யும்?


http://blogsearch.google.com/blogsearch_feeds?q=<உங்கள் விருப்பம்>&hl=en&output=atom
என்கிற வடிவில் உங்களுக்கு வேண்டிய வார்த்தையைப் போட்டு உதாரணத்திற்கு
http://blogsearch.google.com/blogsearch_feeds?q=spectrum&hl=en&output=atom
என்று புதியதாக ஒரு சப்ஸ்கிரைப்ஷன் செய்தால் உலகம் முழுவதும் உள்ள தளங்களில் spectrum பற்றி செய்தி வந்தாலே உங்கள் ரீடரில் அவை மின்னும். இந்த ஐடியாவில் தான் ஒரு முறை தண்ணீர்ப்பற்றிய தமிழ் வலைப்பதிவுகளை திரட்ட முடிந்தது.

சில தளங்கள் ரீடரில் ஒருபகுதியை மட்டுமே அனுமதிப்பதுண்டு ஆனால் அலுவலகங்களில் பணிபுரிபவர்களால் அந்த ப்ளாக் சென்று படிக்க முடியாவிட்டால்
http://fivefilters.org/content-only/makefulltextfeed.php?url=http://neechalkaran.blogspot.com/rss.xml
http://fivefilters.org/content-only/makefulltextfeed.php?url=http://neechalkaran.wordpress.com/feed
வேண்டிய பெயரைப் போட்டுக்கொள்ளலாம்.
இந்த முகவரியைப் பயன்படுத்தி சப்ஸ்கிரைப் செய்தால் முழு பதிவையும் படிக்க முடியும்.

ஒவ்வொரு பிளாக்கர் வலைப்பூவிகும் மின்னஞ்சல் வழியாக பதிவிடலாம் என்பது அறிந்திருப்பீர்கள். {அறிய நினைப்பவர்கள் Dashboard ->settings ->Email & Mobile -> Email Posting Address பகுதியை நிரப்பி தனியான மின்னஞ்சல் முகவரியை எடுத்துக் கொள்ளவும்.}
ரீடரில் ஆங்காங்கே உள்ள email பட்டன் மூலமாக அஞ்சல் அனுப்பினால் ரீடர் சம்மந்தமான வேறு தகவலும் வரும்.அதனால், http://www.google.com/reader/view/#friends-manager-page இந்தப் பக்கத்திலுள்ள ஈமெயில் பட்டனை கொடுத்து அதன் வழியாக பதிவை வலைப்பூவின் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
இதனால் மெயிலும், ப்ளாக்கரும் தடை செய்யப்பட்ட இடத்தில் இருந்தாலும் பதிவுகளை பதிவு செய்யமுடியும்.

இந்த ரீடர் எப்படி பதிவர்களுக்கு வலைதளங்களில் பயன்படுகிறது என்றும், இன்னும் சில தகவலும் அடுத்த பகுதியில் தொடரும். கூகிள் ரீடர் -11

7 comments:

மாணவன் said...

மிகவும் பயனுள்ள தகவலை தெளிவாகவும் சிறப்பாகவும் எழுதியிடுக்கீங்க அருமை நண்பரே

பகிர்வுக்கு நன்றி

cheena (சீனா) said...

அன்பின் நீச்சல்காரன் - பகிர்வினிற்கு தெளிந்த விளக்க்கங்களுக்கும் ந்ன்றி. நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் நீச்சல்காரன் - பகிர்வினிற்கு தெளிந்த விளக்க்கங்களுக்கும் ந்ன்றி. நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

சாந்தி மாரியப்பன் said...

பயனுள்ள தகவல்..

ஹுஸைனம்மா said...

நானும் ரீடர் நேயர்தான். ரொம்ப உதவியா இருக்கு இந்தப் பதிவு. மிக்க நன்றி. அடுத்த பதிவையும் எதிர்பார்க்கிறேன்.

நீச்சல்காரன் said...

@மாணவன்,
@cheena (சீனா),
@அமைதிச்சாரல்,
@ஹுஸைனம்மா
கருத்துக்களுக்கு நன்றிகள்.

Iran blog said...

Thanks.