Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Saturday, January 29, 2011

கடந்த பதிவில் கூறியதைப் போல நமக்குள் நம்மை கொண்டு போக அந்த வழிமுறைகள் பொருந்தும். ஒவ்வொரு இணைய தமிழரையும் தொட்டுவிடும். இனி அடுத்த நிலையென்ன? டிவிட்டரில் இந்தியாவின் டிரன்ட் சிகரத்தை அடைந்த நாம் ஏன் உலகரங்கில் அடைய ஏன் மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறோம்?
பில்லியன்களில் ஒருவனாய் கத்துவதை விட ஆயிரத்தில் ஒருவனாய் கத்தினால் சப்பதம் கேட்காமல் போகாது. எப்படி? இணையத்தில் உள்ள ஒரு லட்ச தமிழர்களும் ஒருமித்த கருத்தை வைத்து கத்தினால் சதவிகித அடிப்படையில் ஆயிரம் பேர்தானே போட்டிக்கு. மேலும் சர்வதேச அளவில் 18வது பெரிய மொழியாகிய நாம் செய்யாவிட்டால் வேறு யாரு செய்வார்கள். இனி ஒவ்வொரு படியிலும் அனைவரும் இணைந்து நம்மை நாமே தூக்கிக் கொள்ள வேண்டும். சரி எங்கெல்லாம் ஸ்பீக்கர் கட்டலாம் என்று முடிவெடுங்கள். இங்கே சில கருத்துக்கள்



டிவிட்டர் ஆங்கிலத்திலும் ஆக்கிரமிக்க தொடங்கியப் பின் அடுத்து வலைப்பதிவுகள் ஆங்கிலத்தில் பரவலாக்கப்படவேண்டும். இங்கே நமது எதிர்ப்புக்கள் கச்சிதமாக இருக்க வேண்டும். மாறுபட்ட கோணவிவாதத்தில் வர வேண்டிய இந்த ஆங்கிலப் பதிவுகளை அனைவரும் சேர்ந்து சர்வதேச திரட்டிகளில் பிரபலம் அடைய வைக்க வேண்டும். நூற்றுக் கணக்கான ஓட்டு விழுந்தால் தான் பிரபலம் ஆகும் என்ற நிலையில் நூறு பேர் நம்மிடமில்லையா? ஒரு திருமணத்தை குடும்பமாக இருந்து நடத்துவதில்லையா அதுபோல கொஞ்சம் நேரம் செலவழித்து பதிவிற்கு கணக்கு தொடக்கி ஓட்டிடவேண்டும்.
அந்த திரட்டிகளில் இணைக்கப்பட்ட பதிவுகளின் ஓட்டுச் சுட்டியை பொதுவான இடத்தில் வைத்து அனைவரையும் ஓட்டிடச்செய்யலாம். நாமே ஒரு ஊடக அலையை உருவாக்கி நிலைகொள்ள வேண்டும்.

http://www.stumbleupon.com/
http://www.del.icio.us.com/
http://www.reddi.com/
http://bookmarks.oneindia.in/
http://indianbookmarks.in/


சில பிரபல இணைய பத்திரிகைகளில் விருந்தினராக பதிவிடலாம். அவற்றில் இடுவதால் கூடுதலான கவனயீர்ப்பு கிடைக்கும். நிச்சயம் ஆங்கில பதிவுகள் தான் வேண்டும் பிரச்சனையில்லை மற்றவர்கள் அதை மொழிபெயர்க்கலாம் மொழி தடையில்லை கருத்துதான் தேவை.
http://www.articlerich.com
http://www.212articles.com
http://www.articleclick.com
http://www.articlesbase.com


ஆரம்பத்தில் இந்தப் பெட்டிஷன் தயாரிக்க போதிய காலஅவகாசம் கையிருப்பு இல்லாததாலும், எத்தகைய வரவேற்பு வரும் என்று யூகிக்கமுடியாததாலும் உதவி கோரி அதிகநேரம் காத்திருக்காமல் கையால் ஆனதைப் போட்டு தயாரிக்கப்பட்டுவிட்டது. இது அனுபவப்பட்ட நுட்பமான ஒரு படிவம் ஆக இல்லாவிட்டாலும். உறுதியான எளிமையான கோரிக்கைப் படிவமாக உள்ளது. இதைப் போல வரலாற்று மற்றும் சட்ட ரீதியான படிவங்களை உருவாக்கி இந்த படிவத்திற்கு கணம் சேர்க்கலாம்.இதுவரை எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் ஆதரவு வந்து, நாம் தனி ஆளில்லை என மெய்பிக்கிறது. இனி இந்த பெட்டிஷனை [அதாவது இணைய முகவரியை] கடைநிலை அதிகார வர்கத்திற்கும், பத்திரிக்கையாளர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் அறிமுகப்படுத்தலாம். அதிகபட்ச கையெழுத்து வந்தப்பின் பிரதமருக்கும் அதிர்கட்சியினருக்கு அனுப்புவோம்.

'தேவைகள்' என்கிற புதிய பகுதியை நமது savetnfisherman தளத்தில் தொடக்கி அங்கே என்ன என்ன நடப்பு தேவைகள் உள்ளனவோ அவற்றை பட்டியலிடவும். வாசகர்கள் யார் வேண்டுமானாலும் அவற்றை பூர்த்தி செய்யமுடிந்தால் பலன் நமக்குத்தான். இங்கே மொழி பெயர்ப்புக்கு வந்துள்ள கட்டுரைகள், வாக்கு அளிக்க வேண்டிய சுட்டிகள், சுற்று மின்னஞ்சல் என இன்னபிறவும் உதவிக்காக பட்டியலிடவும் அதனால் தகவல் இடைவெளி குறைக்கப்படும்.

இவையெல்லாம் உட்கார்ந்த இடத்திலிருந்து செய்யக் கூடியவை. இது போக இந்த சிவில் குற்றத்திற்காக வழங்கப்பட்ட கிரிமினல் தண்டனையை வைத்து சட்ட ரீதியாக Public Interest Litigation முன்னெடுக்க எடுக்க நினைத்தால் உங்களுக்கு ஒரு அஷ்டாங்க நமஸ்காரம்

5 comments:

Mugundan | முகுந்தன் said...

முதலில் உங்களுக்கு பாராட்டு;இந்த விசயத்தை
பெட்டிசன் ஆன்லைன் மூலம் கண்டனம் தெரிவிக்க
தூண்டில் போட்டதற்கு.

என்ன கொடுமை,இன்னமும் 1000 தாண்டவில்லை என்பது
கவலைக்குரியது.வீதிக்கு வந்து போராடச் சொல்லவில்லை;
வீட்டுக்குள் கூட முடியவில்லை என்றால் நம்மை விட சொரணையற்ற
இனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

மாணவன் said...

உங்களின் இடைவிடாத உழைப்பிற்கும் முயற்சிக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும் பல....

கண்டிப்பாக அனைவரும் ஒன்றுபடுவொம்... தொடர்ந்து போராடுவோம்...

மாணவன் said...

தமிழினம் அழிகிறது ! தமிழகம் அழுகிறது ! தலைவன் நீ என்ன செய்தாய்...

Unknown said...

வாழ்துக்களும், நன்றிகளும் ஐயா!

ரேவா said...

கண்டிப்பாக அனைவரும் ஒன்றுபடுவொம்... தொடர்ந்து போராடுவோம்..