Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Thursday, June 30, 2011

தமிழில் அகராதிகள் கணிசமாக இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவை. உதாரணத்திற்கு, ஒரு சொல் எந்த சொற்களுக்குள் எல்லாம் உள்ளது என அறிய விரும்பினால் சிறந்த அகராதிகள் DSAL வழங்கியுள்ள {குறிப்பாக வின்ஸ்லோ} அகராதிகள் ஆகும். ஒரு சொல்லின் தெளிந்த பொருள் மற்றும் அதில் வேற்றுமையுருபு ஏறினால் உருவாகும் பதம் ஆகிவைப் பற்றி அறிய சிறந்த அகராதி tamillexicon. ஒரு சொல்லிற்கு இணையான ஆங்கில சொற்கள் தருவதில் சிறந்த தளம் EUdict. ஒரு சொல் சமகாலத்தில் பாடலாகவும்,குரளாகவும்,பயன்பாட்டு அளவையும் அறிய சிறந்த தளம் அண்ணா பல்கலைக்கழக agaraadhi இப்படி இங்கு குறிப்பிடாத ஒரு தளம் நாளை கூட உதயமாகலாம். அவற்றை எல்லாம் ஒரே இடத்திலிருந்து பயன்படுத்த விருப்பமா? ஒரே புக்மார்க்கில் எல்லாவற்றையும் இணைக்க விருப்பமா? உங்களுக்கான ஒரு அறிமுகம்.


இதில் ஆங்கிலம் மற்றும் தமிழ் அகராதிகள் உள்ளன. அதிகமான ஆங்கில அகராதிகள் இருந்தாலும் முக்கிய அகராதிகளை மட்டுமே இக்கருவிக் கொண்டுள்ளது. அதுபோல தமிழில் சில உள்ளடங்கு வினாவல்[query] செய்யும் தளங்கள் தொழிற்நுட்பக் காரணங்களால் இதில் இடம் பெறவில்லை. இது போக மற்ற தமிழ் தளங்களெல்லாம் இதில் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் தமிழ் விளக்கம் தரும் அகராதிகள் விடுபட்டிருந்தால் தெரியப்படுத்துங்கள்.


புக்மார்க் செய்ய அல்லது நினைவில் நிறுத்த dev.neechalkaran.com/dictionary

உங்கள் ஐ-கூகுளில் இணைத்துக்கொள்ள
Add to iGoogle
பிளாக்கர் தளங்களில் இணைத்துக்கொள்ள
மற்ற தளங்களுக்கான நிரல்கள்.

முக்கிய பிரவுசர்களில் எல்லாம் வேலை செய்கிறது.
இதன் சகோதர கட்ஜெட்டான தமிழ் அகராதி கட்ஜெட்களில் புதிய தமிழ் அகராதிகள் இரண்டு இணைக்கப்பட்டுள்ளது. முன்பே அக்கட்ஜெட்டை பயன்படுத்துபவர்களுக்கு அந்த அகராதிகள் தானாக இணைந்துயிருக்கும். புதியவர்கள் இங்கு சென்று பெற்றுக் கொள்ளலாம்.

பதினெண்கீழ்கணக்கு வகையறாக்களில் 11 அறநூல்கள் இருந்தும் திருக்குறள் மட்டுமே பிரபலமடைந்துள்ளது. இது குறளுக்குக் கிடைத்த மகுடம் என்றாலும் மற்ற நூல்களையும் கூடுமான அளவு உள்வாங்கலாம். இணையத்தில் திருக்குறளுக்கு அதிகமான கட்ஜெட்கள் இருப்பதால் அதை தவிர்த்து மற்ற பாடல்கள் கட்ஜெட்டாக்கம் செய்யப்படவுள்ளது. முதல் கட்டமாக இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது.காரணம் அதன் விளக்க உரைகள் தான் இணையத்தில் கிடைத்தது மற்ற நூல்களுக்கு விளக்கங்கள் யுனிக்கோட் வடிவிலில்லை [கிடைத்தால் பகிர்ந்துக் கொள்ளவும்]

இதை உங்கள் ஐ-கூகுளில் இணைக்க
Add to iGoogle
ப்ளாக்கர் தளங்களில் இணைக்க
மற்ற தளங்களுக்கான நிரல்கள்


தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவச்செய்வோம்.

9 comments:

மாணவன் said...

பயனுள்ள தொழிநுட்ப தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே

நீச்சல்காரன் said...

@மாணவன் நன்றி நண்பா! இன்ட்லியிலும் இணைத்ததற்கு!

rajamelaiyur said...

வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

கூட்டான்சோறு...

AND KRISHNAMOORTHY said...

மிக்க பயனுள்ள தகவலை அளித்தமைக்கு மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் நீச்சலடிக்கும் நண்பரே!!! ஆயினும் இந்த இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் கேட்ஜெட்டில் தேவையானப் பாடல்களையும் அதன் விளக்கங்களையும் காண இயலவில்லையே. என்ன செய்வது ? அவர்கள் வெளியிடும் பாடல் ஒன்றைமட்டுமே காண இயலுமா? மற்றவைகளை எப்படி நாம் காண்பது.?? வழிகாட்ட இயலுமா நீச்சல்காரரே!!! அன்புடன் கே எம் தர்மா..

AND KRISHNAMOORTHY said...

நண்பரே!
ஒவ்வொருமுறையும் நாம் ரெப்ரெஷ் செய்யும் பொழுது பாடல்களின் மாற்றம் நிகழ்கிறது. கண்டு
கொண்டேன் நண்பரே மிக்க நன்றி.

நீச்சல்காரன் said...

கவி அழகன்
@என் ராஜபாட்டை
–––––––––––––‡–––––––––––‡‡‡‡––
––––––––––––––––––––––––‡––––‡–
‡‡‡‡‡––––‡‡‡‡–‡‡‡‡‡––‡‡–‡‡‡––‡–
‡––‡––––‡‡–––‡–––‡––‡––‡–––‡–‡–
‡––‡‡‡––‡–‡–‡–‡––‡––‡––‡–––‡–‡–
‡––‡––‡–‡–‡–‡–‡––‡––‡––‡–––‡–‡–
‡––‡––‡–‡‡–––‡–––‡––‡––‡–––‡–‡–
––––––‡–––––––––––––––––––‡––––
–––––‡–––––––––––––––––‡‡‡–––––
@andkm
பதினெண்கீழ்கணக்கு நூல்கள் வேறு எதற்காவது உங்களிடம் விளக்கமுடன் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் கட்ஜெட்டில் இணைத்துவிடுமோம்.

AND KRISHNAMOORTHY said...

மிக்க மகிழ்ச்சி நண்பரே!!! நான் இப்போதுதான் சுரக்குடுக்கையைக் கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் நீச்சலடிக்க பழகிக் கொண்டிருக் கின்றேன். ஆயினும் ஒருநாள் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்வம் உள்ளது.தங்களைப் போலுள்ளவர் களின்வழிகாட்டுதலின் பேரில் இதனைச் சாதிக்க முடியும் என்றே எண்ணுகின்றேன். மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும்!!!!

Unknown said...

நீச்சல் காரருக்கு, தகவுலுக்கு நன்றி. பூக்மார்க் பண்ணி விட்டேன்

Anonymous said...

"இங்கு குறிப்பிடாத ஒரு தளம் நாளை கூட உதயமாகலாம்."

www.urbantamil.com - UrbanTamil.com - நவீன, சமூக, அகராதி | நகர்ப்புற தமிழ் சொல்லகராதி சேகரிக்க துவங்கியிருக்கிற ஒரு இணைய திட்டம்