tnfishermanஐ அடுத்த கட்டத்திற்கு நகர்த்தமுடியுமா?

. Saturday, January 29, 2011
5 comments

கடந்த பதிவில் கூறியதைப் போல நமக்குள் நம்மை கொண்டு போக அந்த வழிமுறைகள் பொருந்தும். ஒவ்வொரு இணைய தமிழரையும் தொட்டுவிடும். இனி அடுத்த நிலையென்ன? டிவிட்டரில் இந்தியாவின் டிரன்ட் சிகரத்தை அடைந்த நாம் ஏன் உலகரங்கில் அடைய ஏன் மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறோம்?
பில்லியன்களில் ஒருவனாய் கத்துவதை விட ஆயிரத்தில் ஒருவனாய் கத்தினால் சப்பதம் கேட்காமல் போகாது. எப்படி? இணையத்தில் உள்ள ஒரு லட்ச தமிழர்களும் ஒருமித்த கருத்தை வைத்து கத்தினால் சதவிகித அடிப்படையில் ஆயிரம் பேர்தானே போட்டிக்கு. மேலும் சர்வதேச அளவில் 18வது பெரிய மொழியாகிய நாம் செய்யாவிட்டால் வேறு யாரு செய்வார்கள். இனி ஒவ்வொரு படியிலும் அனைவரும் இணைந்து நம்மை நாமே தூக்கிக் கொள்ள வேண்டும். சரி எங்கெல்லாம் ஸ்பீக்கர் கட்டலாம் என்று முடிவெடுங்கள். இங்கே சில கருத்துக்கள்

5 comments:

இணையத்தில் மீனவர்களுக்கு என்ன செய்யலாம்?

. Friday, January 28, 2011
18 comments


மீனவர்கள் யாரிவர்கள்? எங்கோ நாலு அறைக்குள் பட்டன்கள் தட்டும் நம்மால் என்ன செய்யமுடியும்?

இணையத்தின் ஒன்று விட்ட பெரியப்பா மகன்களான ஊடகங்கள் தற்போது இணையத்தில் ஒன்றிவிட்டது தெரியுமா? ஊடகங்கள் அச்சப்பட்டு எடுத்துவைக்காத சொச்ச செய்திகளை மக்கள் மிச்சமில்லாமல் படிப்பது இணையத்தில்தான். மாற்று ஊடகங்கள் பெருகிவிட்ட நிலையில் மாற்றமில்லாமல் ஊடகமாக இரண்டாண்டுகளுக்கு முன்பே இணையம் தன்னை பிரகடனப்படுத்திவிட்டது. தீர விசாரிக்க வேண்டாதளவு கண்ணால் பார்த்துவிட்டீர்கள், காதால் கேட்டும் விட்டீர்கள் இனி தீர்வு எழுதிவிடுங்கள். உங்கள் கருத்துக்களையும் ஆதரவையும் முன்வையுங்கள். ஏற்கனவே மாபெரும் கூட்டம் இணையத்தில் டிவிட்டரை விலைக்கு வாங்காத குறையாக கத்தத் தொடங்கிவிட்டது, அதன் எதிரொலிகள் வலைப்பூக்களிலும் உங்கள் எண்ணப்பூக்களிலும் மலரத்தொடங்கிவிட்டது; செவி கொடுத்த ஊடகங்களும் இப்போது செப்பத் தொடங்கிவிட்டது. இந்தக் கதறல்கள் மென்னணு புள்ளிகளாக சர்வரில் வீற்றிருந்தாலும் சாகாத வரமுடன் சந்ததியினருக்கு ஏதோவொன்றை விழிப்பூட்டிக் கொண்டுதான் உள்ளது. சரி எந்தெந்த வழிகளில் ரோடுபோடலாம்? இதோ சில புள்ளிகள் தொடரலாம்...

18 comments:

கூகிள் ரீடர் தெரிந்தும் தெரியாததும்-II

. Monday, January 24, 2011
14 comments

பதிவை ரீடரில் விட்டால் ஓட்டுக்கள் விழாது என்று பாதிப் பதிவை மட்டும் ரீடரில் நம்மில் சிலர் விடுவதுண்டு, இந்த நிலையில் தான் ரீடரில் ஓட்டுச்சுட்டிக்கான தேவை வந்தது. ரீடரில் படித்தவாறே ஓட்டிடும் வசதி இருந்தால் எப்படியிருக்கும்? முக்கியமாக அலுவலகத்தில் ப்ளாக் தடை செய்யப்பட்டவர்களுக்கு. தற்போதுள்ள ஓட்டு நடைமுறையில் தமிழ்மணத்தை இணைப்பது காதைச் சுற்றி மூக்கை தொடுவது போலாகும். அதைத் தவிர ஓட்டுப்பட்டை வழங்கும் சில திரட்டிகளுக்கு மட்டும் ரீடருக்கான ஓட்டுச் சுட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.
இணைத்தப் பின் இப்படி தெரியும்
கூடுதல் செய்தி:
இந்த ஓட்டுச்சுட்டி மின்னஞ்சல் வாசகருக்கும் செல்லும்

14 comments:

கேள்வி-பதில் [மொபைல் போர்டபிளிட்டி-MNP]

. Friday, January 21, 2011
12 comments

அலைபேசி எண் பெயர்ச்சி முறை இந்தியாவில் அமல் ஆகிவிட்டதென்பது தெரியும் ஆனால் அது சம்மந்தமான அடிப்படை சந்தேகங்கள் இருந்தால் இப்பதிவு உதவலாம்.

அலைபேசி எண் பெயர்ச்சி [MNP] என்றால் என்ன?
அலைபேசியின் எண் மாறாமால் உங்கள் சேவை நிறுவத்தை மாற்றும் முறை. அதன் பின்னர் புதிய நிறுவனத்தின் கீழ் கட்டணங்களை செலுத்தி சேவையைப் பெறலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் முக்கியத்துவம் கருதி தரமான போட்டி தொலைதொடர்பு துறையில் நடக்கலாம்.

12 comments:

டாட் டிப்ஸ் (மார்கழி 30)

. Thursday, January 13, 2011
9 comments

கூலித் தொழிலாளியின் மகன் நீரில் இயங்கும் புது வகை சைக்களைக் கண்டுபிடித்தார், 2G தொழிற்நுட்பத்தில் புதுவகை வாகனப் பூட்டு கண்டுபிடித்தார், தார் சாலைகளில் இருந்து மின்சாரம் எடுக்கும் முறைக் கண்டுபிடித்தார் என்று மாணவர்கள் பற்றிச் செய்திகள் வருவதுண்டு. ஆனால் அவர்கள் மீது உலகத்தின் வெளிச்சம் பட்டதா? டியுப் லைட் வெளிச்சம் மட்டும் பட்டிருக்கலாம். அதற்கு ஒரு ஒளியாக, மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட

9 comments:

கூகிள் ரீடர் தெரிந்தும் தெரியாததும்-1

. Sunday, January 9, 2011
7 comments

எனது அலுவலகத்தில் பிளாக்ஸ்பாட் தடை செய்யப்பட்டுள்ளதாக அழுது கொண்டிருக்க, வினித் மட்டும் கவலைப்பாடாமல் புகுந்து விளையாடிவருகிறான். அவனிடம் எப்படிப் பதிவுகளைப் படிப்பாய் என்றால் கூகிள் ரீடர் என்கிறான். சரி பதிவுக்கு வந்த கருத்துக்களை எப்படிப் பார்ப்பாய் என்றால் கூகிள் ரீடர் என்கிறான். பதிவை எப்படி போஸ்ட் பண்ணு வாய் அதான் மெயிலும் தடைப்பட்டுள்ளதே என்றேன் பூரிப்புடன், கூகிள் ரீடர் என்றான் சிரிப்புடன். விடுவேனா, உடனே நீ படிக்கும் தளத்தில் RSS feeds அளவாக இருந்தால் எப்படி முழுவதும் படிப்பாய் என்று சிதம்பர ரகசியத்தை கேட்ட திருப்தியிலிருக்க அவனோ அதற்கும் கூகிள் ரீடர் என்று சொல்லிப் பறந்து விட்டான்.

அடுத்து உள்மனசின் பாராளுமன்ற கூட்டுக்குழுவை வைத்து கூகிள் ரீடரை சோதிக்கத் தொடங்கினேன். ஆம், கூகிள் ரீடர் இந்த வார்த்தை அலுவலகத்தில் படிப்பவர்கள், இண்டர்நெட்டை சிக்கனமாக உபயோகிப்பவர்கள், ஒரே இடத்தில் பல பதிவுகளை படிக்க நினைப்பவர்கள் என பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டதாம். இதைப் பற்றித் தெரியாதவர்கள் வாழ்க்கையும் எதிர்புறமாகப் புரட்டிப் போடுதாம்.[நியூட்டன் 3 விதி]

7 comments:

Follow by Email


Share/Save/Bookmark