தினத்தந்தியின் கன்னித்தீவை படித்துக் கொண்டிருக்கும் போது சிறுவர்மலரின் அதிமேதாவி அங்குராசு கதைக்கு தாவியாரா? ஹாய் மதனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அரசு பதிலுக்கு சிரித்ததுண்டா? தினமணியின் தலையங்கத்தைப் படிக்கையில் தினமலரின் டீ கடை பெஞ்சுக்கு போனதுண்டா? அடுத்தவர் அந்த பேப்பரை படித்து முடிக்கும் வரை இந்த பேப்பரில் உள்ள கண்ணீர் அஞ்சலில் படத்தையே மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களை படிப்பகங்களின் பார்த்திருக்கலாம். ஒரே நேரத்தில் உலகமே உங்களுக்கு லெட்டர் போட்ட பிரமையை உருவாக்குவது படிப்பகங்கள். திருவிழாக்காலத்திலும் திருகு குழாய் பிரச்சனை காலத்திலும் எல்லா பத்திரிகை செய்திகளையும் ஒரே இடத்திலிருந்தவாறு படிக்கும் சுகமே தனி. பெரும்பாலோர் நூலகங்களில் அனுபவித்திருக்கலாம், சிலர் மரத்தடி பதிப்பகங்களில் அனுபவித்திருக்கலாம். அத்தகைய ஒரு அனுபவத்தை இணையத்தில் தரமுடியாது இருப்பினும் ஓரளவு அதன் பயனை விரும்புகிறவர்களுக்காக இணைய பத்திரிகைகள் பலவற்றை ஒரே இடத்தில் தொகுக்கப் பட்டுள்ளது.
இணைய தமிழ் படிப்பகம் உதயம்
Posted by
நீச்சல்காரன்
.
Monday, December 12, 2011
14
comments
அசல் reply வசதி ப்ளாக்கரில் வேண்டுமா?
Posted by
நீச்சல்காரன்
.
Sunday, December 4, 2011
9
comments
update://பிளாக்கரே இவ்வசதியை தற்போது வழங்குவதால் இந்தப் பதிவையும்/நிரல்களையும்{javascript} தவிர்க்கலாம்.///
ப்ளாக்கரையும் வேர்ட்பிரசையும் ஒப்பிட்டு பார்க்கும் எந்தவொரு கணத்திலும் பிளாக்கர் மறுமொழிப் பகுதி என்றுமே பின்னாலிருப்பதை உணரமுடியும். காரணம் வேர்ட்பிரசில் யாருக்கு பதில் அளிக்கின்றோமோ அவருக்கு நேரடியாக கீழே நமது கருத்தைச் சொல்லமுடியும் ஆனால் இதுவரை ப்ளாக்கரில் அந்த வசதியில்லை அதனால் தான் பலர் @ போட்டு அந்த நபரை குறித்து பதில் அளிப்பார்கள். இதற்கு மாற்றாக ஏன் பிளாக்கர் இவ்வசதியை ஏற்படுத்தவில்லை என்பது தெரியாது. விரைவில் அவ்வசதியை ஏற்படுத்தும் அதுவரை reply செய்ய உங்கள் கீ போர்ட்க்கு உதவ ஒரு பிளாக்கர் மறுமொழி நீட்சி அறிமுகம் செய்யப்படுகிறது.









14 comments:
Post a Comment