பிளாக்கர் அண்மையின் தனது பிளாக்கர் சேவை வலைப் பூக்களின் மேல் நிலைக் களப்பெயர்களை[top level domain] சில நாடுகளுக்கு ஏற்றார்போல மாற்ற ஆரம்பித்துள்ளது. முக்கியமாக இந்தியாவும் இருப்பதால் இந்திய எல்லைக்குட்பட்ட இணையத்தின் வழியாக வருபவர்களுக்கு வலைப்பூக்கள் .in என்ற இறுதியொற்றுடன் வலைப்பூக்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. அமைப்பு ரீதியாகப் பார்த்தால் உண்மையில் பிளாக்கர் தளம் இத்தகைய டொமைன் மாற்றத்தை வழிமாற்றியின்[Redirect] மூலமே செய்கிறது. அதாவது .com என்பதுதான் வழங்கியின் மூலப் பெயர் உதாரணத்திற்கு உங்கள் செய்தியோடைகள்{RSS feeds} எல்லாம் .comலிருந்தே செயல்படுகிறது. ஆனால் வெளிப்புறத்தில் மட்டுமே .in செயல்படுகிறது. இதனால் பழைய இணைப்புகளோ பழைய முகவரியோ தவறாகாது அதுவும் செயல்படும். அதற்காகத்தான் /ncr என்ற பதமும் உள்ளது. http://neechalkaran.blogspot.com/ncr என்று வருவதன் மூலம் இந்த நாட்டு பின் ஒட்டுகளைத் தவிர்க்கலாம். ஆனால் நடைமுறையில் தமிழ்த் திரட்டிகளின் இணைப்புகளை பெற எல்லா வாசகரும் பயன்படுத்துவதென்பது எளிதல்ல. அலெக்சா மதிப்பு நாடுகள் வாரியாக பிரிக்கப்படலாம். உண்மையில் அப்படி குறைந்தாலும் இதனால் சராசரி தமிழ்ப் பதிவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. முன் கூறியது போல அலெக்சா என்பது அக்கருவிப் பட்டை பொருத்திய பயனர்களின் எண்ணிக்கைதான் என்பதால் கூகுளோ அல்லது இதர தேடு தளங்களோ பார்வையாளர்வரத்தை[visitors traffic] கணிக்க அலெக்சாவைப் பயன்படுத்துவதில்லை.
தமிழ்த்திரட்டிகளும் பிளாக்கர் டொமைன் மாற்றமும்
Posted by
நீச்சல்காரன்
.
Wednesday, February 1, 2012
11
comments









11 comments:
Post a Comment