Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Thursday, April 18, 2013

ஆ....... ன....... ந்.... தம்.... என்று காபி குடித்தவாறே புதிர்களை அவிழ்த்து ஆனந்தமாகயிருந்த நீங்கள் டொக்.. டொக்.. என்று கணினி பித்தான்களைத் தட்டும் வேளையில் விளையாடமுடியவில்லையா? பேனாவில்லாமல் புதிர்களை அவிழ்க்க முடியாமல் முழிப்பவரா? மூளை சுறுசுறுப்பாக இருக்க புதிர்களை நேசிக்கும் புத்தகப் புழுக்களா? உங்களுக்கான ஒரு சொற்... பொறுங்கள். எழுத்துக்களுக்கு நடுவே மறைக்கப்பட்ட வார்த்தையைக் கண்டுபிடிக்கும் நல்லவரா? தலைகீழாகவும் படிக்கும் வல்லவரா? உங்களுக்கான ஒரு சொற்புதிர் இணையத்தில் அறிமுகமாகியுள்ளது. புதிர்களை அவிழ்க்க மட்டுமல்ல முடுச்சுக்களைப் போடவும் முடியும். இதன் மூலம் சொந்தமாகப் புதிர்களையும் நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.
 
தமிழில் சொற்புதிர்களுக்கான செயலிகள் வந்து கொண்டேவுள்ளன. குறுக்கெழுத்துப் புதிர்களுக்கு புதிர்மயம் என்ற தளம் உள்ளதையறிவீர்கள் அந்த வரிசையில் சொல் தேடல் புதிருக்கான ஒரு தளம் இதோ. சிதறிக்கிடக்கும் சொற்குவியளுக்கு மத்தியில் ஒளிந்திருக்கும் அந்தவொரு வார்த்தையைக் கண்டுபிடிப்பது என்பது தாய் முகம் பார்த்த சிசு போன்ற ஆனந்தம் வழங்கவல்லது. இங்கும் எழுத்துக்கள் சிதறியிருக்கும், கண்டுபிடிக்கவேண்டிய வார்த்தை இடமிருந்து வலமாகவோ, வலமிருந்து இடமாகவோ, மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ அமர்ந்திருக்கும். தற்போதைக்கு மூன்று நிலைகளில் எளிமையான அல்லது கடுமையான புதிர்களைத் தேர்வு செய்து ஆடலாம். ஒவ்வொரு முறையும் சொற்கள் புதிய விதமாக ஒளிந்து கொள்ளும். புதிர் அமைப்பதில் வல்லவர் என்றால் நீங்களும் சுவாரசியக் குறிப்புகளுடன் அதன் பதிலை எனக்கு அனுப்பலாம். பயனர் புதிர்களில் உங்கள் புதிர்களும் புடைசூழும்.
சொற்புதிர் -தளமுகவரி

முதல்முறை நுழைகையில் உங்கள் பெயரை வாங்கிக்கொள்ளும். இதனால் நீங்கள் மீண்டும் அதே கணினியில் திறக்கும் போது பழைய மதிப்பெண்கள் மீண்டும் நிலைவரும். பயனர் புதிர் அல்லது தமிழ்ப்புள்ளியின் புதிர் என ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து தயார் பித்தானை அழுத்தவும். குறிப்பு மேற்புறமாகக் காட்டப்படும், மதிப்பெண்கள் அதனருகே காட்டப்படும். ஒளிந்திருக்கும் வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தையும் சரியாகச் சொடிக்கினால், மதிப்பெண்கள் உயர்ந்து, விடையைக் காட்டிவிடும். புதிது பித்தானை அழுத்த அழுத்த அடுத்த அடுத்த அவிழாதப் புதிர்கள் தொடர்ந்து வரும். ஒருமுறை வந்த வடிவில் மறுமுறை விடைகள் வராது. ஒவ்வொரு முறையும் விடைகள் வெவ்வேறு வடிவில் மாறிக்கொள்ளும்.

 இல்லை, இல்லை, நானே புதிரமைத்து, நானே புதிரிடுவேன் என்பவர் என்றால், இந்தப் புதிர்ப்பட்டறையில் சென்று புதிர்களை வடிவமைத்து அதற்கான நிரல் துண்டத்தை எடுத்துச் செல்வீர்களாக. கீழுள்ள படத்தில் உள்ளவாறு கேள்விக் குறிப்புகளை '#'குறியீட்டுடன் கொடுக்கவும். பதிகளை அடுத்தப் பெட்டியில் ஒவ்வொரு எழுத்தையும் காற்புள்ளி(comma) இட்டுப் பிரித்து வரிக்கு ஒன்றாகக் கொடுத்தால் பட்டறையில் புதிர் ரெடி. கீழ் காட்டப்படும் பெட்டியில் உள்ள நிரலை[code] எடுத்து உங்கள் தளங்களில் இட்டு பதிவிடலாம்.
 

 இவ்வளவு தூரம் வந்துட்டேங்க கீழ உள்ள புதிரை அவிழ்த்துவிட்டு போங்களேன்


2 comments:

பூங்கோதை said...

This is very nice! Can I get the number of letters for the 4 of the clues above? Clueless,Poongothai

நீச்சல்காரன் said...

கேள்வியும் பதிலும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தொடராக வரும்.
விலையில்லா முட்டைகள் கிடைக்குமிடம் - விடை ஐந்து எழுத்து
உலகத்தின் கடைசி மனிதனின் பெயர் - விடை மூன்று எழுத்து
மழை அடிக்கும் காலிங் பெல் - விடை இரண்டு எழுத்து
விளையாடும் கடவுள் - விடை நான்கு எழுத்து
பூமிக்கு மிக அருகில் பிரகாசிக்கும் நட்சத்திரம் - விடை ஆறு எழுத்து

புதிர்கள் ஐந்திற்கும் உவமை, நையாண்டி என்கிற ரீதியில் சிந்திக்கலாம். நேரடி விடைகளாக இருப்பதறிது