Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Wednesday, May 24, 2023

Info Post

பொதுவாக ஒரு படைப்பை உருவாக்கும் போதும் எதிர்பாராத விதமாக சில வேளை பயனுள்ள இதர படைப்புகள் உருவாகும். அதனை ஆங்கிலத்தில் spinoff என்போம் அது போல கோலசுரபியின் மூலம் விளைந்த சில படைப்புகளைப் பகிர இக்கட்டுரை.


வடிவப் பொருத்தப் புதிர்களுக்கு (Fitting Shapes Puzzle) கோலங்களிலிருந்து சிறந்த உள்ளீடுகளைப் பெறலாம். உதாரணமாக கோலத்தின் அடிப்படையான வடிவங்களை பகடைக் காயில் இட்டுப் பல காய்களை ஒன்றொன்று ஒன்றாக வைத்து வடிவங்களைக் கோர்க்கலாம். 3டி அச்சிலோ வார்ப்பிலோ இதுபோலப் பல பகடைகளை உருவாக்கி விளையாட்டுப் பொருட்களைச் செய்யலாம். கோடுகளைக் கொண்ட இந்த வடிவமும் சுவாரசியமாக பொருத்தும் புதிருக்கு உகந்தது.



கடந்த ஆண்டு மிகை மெய்ம்மை(Augmented Reality) நுட்பத்தில் கோலங்களை விரும்பிய இடங்களில் இட்டுக் கொள்ள சில முப்பரிமாண மாதிரிகள் வெளியிடப்பட்டன. மிகை மெய்ம்மை என்பது விரும்பிய இடத்தில் நாம் விரும்பும் உருவங்களை காட்சிப்படுத்தும் நுட்பம். பொதுவாக அழிந்த உயிரினங்கள்/கற்பனை உலகம் போன்றவற்றை நமக்கருகே நடக்கவிட்டு பார்க்கமுடியும். இதற்கான பிரத்தியேக செயலிகள், கருவிகள் பல சந்தையில் உள்ளன. அதில்  3டி வடிவங்களை உள்ளீடு தந்து பயன்படுத்த முடியும். அதற்காகவே கோலங்களின் முப்பரிமாண மாதிரிகளை உருவாக்கி, கட்டற்ற முறையில் வெளியிடப்பட்டுள்ளன. https://sketchfab.com/neechalkaran ஆர்வமுள்ளோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.



குழந்தைகள் கோலங்களை வரைந்து பழக எளிய செயல்முறைப் பயிற்சிக்கான ஒரு மின்னூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. அது தற்போது புதுப்பிக்கப்பட்டுக் கூடுதல் வடிவங்கள் வண்ணம் தீட்டும் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள சிறுவர்களிடம் அச்சிட்டுக் கொடுக்கலாம்.



கோலசுரபியைக் கைப்பேசியில் எளிதில் பயன்படுத்தும் வண்ணம் கையடக்க ஒத்திசைவுடன் உள்ளது. ஆர்வமிருந்தால் அதன் முகவரியை கைப்பேசியின் முதல்திரையில் சேமித்துக் கொள்ளலாம். இதன் மூலம் கோலசுரபியை ஒரு குறுஞ்செயலி போலப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். ஆண்ட்ராட் இயங்குதளமென்றால் அதில் உள்ள குரோம் உலாவியில் திறந்து, வலது மேல் முனையில் உள்ள மூன்று புள்ளியைச் சொடுக்கி "Add to homescreen" கொடுத்துக் கொள்ளலாம்.