Pages - Menu

Tuesday, May 18, 2010

சுருக்க முகவரியின் சூத்திரங்கள்

அன்றாட வாழ்வில் பெரிய பெயர்களை நம் தேவைக்கேற்ப சுருக்கி பயன் படுத்துவதுண்டு. பொதுவாக அது மனிதர்களின் பெயராகவும், நிறுவனங்களின் பெயராகவும் அதிகம் அமைவதுண்டு. இன்னும் சொல்லப்போனால் பழைய கிராமங்களின் பெயர்கூட மா.மூ.கோவில்பட்டி போன்று சுவாரசிய பெயர்களின் சிந்தையை கவரும். இத்தகைய பெயர் சுருக்கங்கள் நேரத்தை விரட்டும் அவசர யுகத்திற்கு மேலும் தேவையாகவுள்ளது. இணையவுலகில் அத்தகைய பெயர்ச்சுருக்க நடைமுறைகள் 2002 வாக்கில் வெளியாகின ஆனால் பேஷ்புக்குகளும் டிவிட்டர்களும் நம் வீட்டுக்கதவை அன்று தட்டாததால் ஜனரஞ்சக பயன்பாட்டுக்கு வரவில்லை. முக்கிய நிறுவனங்கள் மட்டும் தங்கள் நீளமான இணையதளப் பக்கமுகவரியை சுருக்கப்பயன்படுத்திக்கொண்டன. இன்றோ மேலும் பல சமூகதளங்கள் மற்றும் தனிநபர் தளங்ககளும் இணையவுலகை அலங்கரிக்கத் தொடங்கியதிலிருந்து சுருக்க பெயருக்கு தேவை அதிகரித்துள்ளது. இந்த சுருக்கப் பெயர்கள் எப்படி வேலை செய்கிறதென்றால், அந்த சுருக்கப் பெயர் போட்டவுடனே அதன் தகவல்தளத்திற்குச்(database) சென்று நிஜ முகவரியைப் பெற்று அந்தப் பக்கத்தை திசைத் திருப்பும்(Redirect)



உதாரணமாக இந்த பக்க முகவரியை இப்படி சுருக்கலாம்.
http://ethirneechal.blogspot.com/2010/04/blog-post.html
http://xrl.us/bhkg7e





இவை சுருக்க மட்டும் தான் பயன் படுமா? இவற்றை சுவாரசியமாகவும் பயன்படுத்தலாம்.
  • எந்தவித சேமிப்புப் பெட்டகமும் கைவசமில்லாத பொது ஏதோவொரு ஒரு கட்டுரையின் முகவரியை சேமிக்க வேண்டுமானால் இந்த சேவையைப் பயன்படுத்தி நமது இஸ்டப்படி (இதுவரையில்லாத பெயராக)  இங்கே  கொடுத்து நினைவில் வைத்துக்கொள்ளலாம்.
  • ஆங்கிலப் பெயர் கொண்ட தளங்கள் மற்றும் பிரபல தமிழ் தளங்களின் பெயர்கள் மனதில் நிற்கும் ஆனால் புதிதாக வரும் தமிழ்ப் பெயர் கொண்ட தளங்களை நினைவு படுத்துவதில் எழுத்துப்பிழைகள் வரலாம். அத்தகைய நிலையில் இந்த சுருக்க தளத்தில் 'நச்' என்று ஒரு பெயர்வைத்து  நினைவில் கொள்ளலாம்.
  • சில தளங்கள் வழக்கத்திற்கு மாறாக புதுப் புது உட்பிரிவுகளின் கீழ் ஒரு செய்தியை பிரசுரித்திருக்கும் அங்கும் இது பயன்படும்.
  • சிலருக்கு ஒரு தனி பெயரில் தளம் நிறுவ ஆசையிருந்திருக்கலாம். ஆனால் அந்த பெயரில் ஏற்கனவே ஒரு தளம் இருக்கிறது என்று வைத்துக்கொண்டால் இந்த சேவை மூலம் ஓரளவுக்கு அவர்களின் ஆசை நிறைவரும். இப்படி கூகிள் பெயரைக் கூட எனக்கு வைக்கமுடியும். http://w3t.org/google



வெறும் செய்தித்தாள்கள், பதிவுகள் என்று மட்டும் இல்லாமல் அகல கால்வைத்தும் பயன்படுத்தலாம்
எ.இ. http://www.google.com/search?hl=en&q=%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF %8D%E0%AE%B8%E0%AF%8D+%2B+site:www.dinamani.com+|+site:www.dinamalar. com&aq=f&aqi=&aql=&oq=&gs_rfai=
  இப்படி கூகிள் தேடல் முடிவையும் சுருக்கி பகிரலாம் பாதுகாக்கலாம்
இ.ஆ. http://onnu.notlong.com   


ஊர் வரைப்படங்களை இப்படி நவீனமாகவும் பகிரலாம் 

வேறு தளங்களின் படங்களுக்கும் பயன்படுத்தலாம்

[[எ.இ. -> எப்படி இருந்த நான் 
இ.ஆ. ->இப்படி ஆகிட்டேன்]]
**************************************************************




உங்கள் தள முகவரி பெரியதாக இருந்தால் இனி கவலை வேண்டாம் இந்த சேவையை பயன் படுத்தி எளிதில் மற்றவருடன் பகிரலாம். இந்த வசதியைத் தரும் முக்கியமான சில தளங்கள். இதில் உங்கள் நீள முகவரியை இட்டால் அதை மாற்றி ஒரு முகவரியைத் தரும் அந்த முகவரியும் நிரந்தரமான முகவரியே.
http://tinyurl.com/
http://metamark.net/
http://bit.ly/



http://doiop.com/  சில தளங்களில்  நமக்கு இப்படித் தான் சுருக்க வேண்டும் என்று  நாமே தேவையான(இதுவரை பயன்படுத்தாத) வார்த்தையைப் போட்டுக்கொள்ளலாம்  




http://shorl.com/
http://notlong.com/    இந்த தளங்களில் அதை கண்காணிக்கும் வசதியுமுள்ளது. தேவைப்பட்டால் உங்கள் முந்தைய முகவரியையும் மாற்றிக்கொள்ளலாம் 


http://6url.com/  இந்த தளம் முகவரியை மூன்று விதத்தில் தருகிறது தேவையானதை எடுத்துக்கொள்ளலாம் 




மற்றும் சில தளங்கள் 





சில உபாதைகள்.,


  1. சுருக்கப்பெயர்களால் உண்மையான் தள பொருள் பார்த்தவுடன் தெரிவதில்லை.
  2. சில சமயம் தேவையில்லாத தளத்திற்கு நீங்கள் ஏமாற்றப்படலாம்.
  3. சுருக்க முகவரிகள் உங்கள் குக்கீசில் சேமிக்கப் படுவதில்லை.
  4. சில சமயம் இந்த சேவை செய்யும் தளம் விளம்பரங்களை தரும். 




இருந்தும் பெயர்ச்சுருக்க கவர்ச்சியால் இந்த சுருக்க முகவரிகள் பிரபலமாகி வருகிறது. இந்த மாதிரியான சிக்கலில் மாட்டாமல் உங்களுக்கு வந்த சுருக்க முகவரியை தரம் சோதிக்க(நீள முகவரியாக) வேண்டுமால் அதற்கும் தளங்கள் உள்ளன.
http://longurl.org/
http://www.unshortn.com
இவற்றில் சுருக்க முகவரியை இட்டால் அதை விரித்து உள்ளதை உள்ளபடிக் காட்டும்.




பொதுவாக டிவிட்டரிலும், பேஷ்புக்கிலும், கூகிள் பஷ்ஷிலும் நண்பர்களால் பகிரப்படும் சுருக்கமுகவரிகளை நம்பலாம். ஆனால் வெளிடத்தில் உள்ள சுருக்கமுகவரிகள் கொஞ்சம் கவனத்தோடு சொடுக்கவேண்டும் காரணம் சிக்கலான தளத்திற்கு கூட இட்டுச்செல்லும். இனி நாம் ரசித்த பக்கங்களை நண்பர்களோடு பகிர சுருக்கமுகவரியை பயன்படுத்தலாம்.

2 comments:

  1. நண்பரே,
    நல்ல கட்டுரை.
    ஒரு முகவரி கொண்ட தளத்திலிருந்து மற்றொரு முகவரிக்கு Redirect செய்யமுடியுமா? வழியிருந்தால் எனக்கு கூறுங்கள்.

    ReplyDelete
  2. இந்த நிரலியை தேவையான தளத்தின் head டாக்கின் கீழே கொடுத்து திருப்பிக்கொள்ளலாம்.<
    meta HTTP-EQUIV="REFRESH" content="0; url=http://www.yourdomain.com/index.html">

    ReplyDelete

"கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
உங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது