Pages - Menu

Monday, October 25, 2010

பதிவுலகப் புள்ளிவிவரம்

*இந்த தகவல் குறிப்புகள் 2010 அக்டோபர் 22 வரை திரட்டப்பட்டவை மற்றும் பிளாக்கர் தளங்கள் மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டவை.

இதுவரை தமிழில் 487590 பதிவுகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் 44 தமிழ் வலைப்பூக்கள் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான பதிவுகள் இட்டுள்ளது.
அடுத்து 90 தமிழ் வலைப்பூக்கள் ஐநூற்றிற்கும் மேல் பதிவு இட்டுள்ளது.
இதில் முதல் வரிசைப்படி,
5695 கடலூர் மாவட்ட செய்திகள் majakarthi cuddalore-news.blogspot.com
4822 தமிழ்த்தேசியம் Tamilsvoice tamilthesiyam.blogspot.com
4199 தமிழ் முஸ்லீம் தெய்வமகன் thamilislam.blogspot.com
4113 ஈழம் செய்திகள் kavishan kavishan.blogspot.com
4089 VanniOnline வன்னியன் www.vannionline.com
3988 எழில் எழில் ezhila.blogspot.com
3839 தரவு ۞உழவன்۞ www.tharavu.com
3260 தமிழ் ஓவியா தமிழ் ஓவியா thamizhoviya.blogspot.com
3127 IdlyVadai - இட்லிவடை IdlyVadai idlyvadai.blogspot.com
2985 what hot now?.fast tamil news with video::best tamil blogs for youngers::Student, mayan isoorya.blogspot.com


மறுமொழிகள் என்றுப் பார்த்தால் மொத்தம் 2791329 மறுமொழிகள் தமிழில் உரையாடப்பட்டுள்ளது.
அதில் 33 வலைப்பூக்கள் மட்டும் பத்தாயிரத்திற்கும் அதிகமான மறுமொழிகளைப் பெற்றுள்ளது.
அடுத்ததாக 541 வலைப்பூக்கள் ஆயிரத்திற்கும் மேல் பெற்றுள்ளது.

IdlyVadai - இட்லிவடை 34328
வலைச்சரம் 32124
துளசிதளம் 28854
வகுப்பறை 28412
Dondus dos and donts 27139

பதிவர்கள் என்றுப் பார்த்தால் 5143 பதிவர்கள்* பதிவிடுகிறார்கள். அதில் 1747 பதிவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை தங்கள் வாசகருக்கு வெளிப்படையாகக் கொடுத்துள்ளனர்.

பதிவிற்கு ஏற்ற மறுமொழிகள் என்கிற விகிதத்தில் கிட்டத்தட்ட பதிவொன்றிற்கு 100 மறுமொழிகள் சராசரியாகப் பெற்றுள்ளவர்கள் மூவர் உள்ளனர்.
112.4444444 அண்ணாமலையான் அண்ணாமலையான்
107.5769231 பட்டிகாட்டான் ( பட்டணத்தில்) Jey
99.89189189 ஸ்டார்ட் மியூசிக்! பன்னிக்குட்டி ராம்சாமி


ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவு தளங்கள் செயல்படாமல் நின்றுபோய் விடுகின்றன. சில சமயம் மட்டும் தளங்கள் பெயர்மாற்றத்தால் இந்த தடங்கல் ஏற்படும். மற்ற சமயங்களில் பல தனிப்பட்ட காரணங்களால பதிவர்கள் வலைவுலகை தவிர்கிறார்கள் எனலாம்.
2004ல் 29
2005ல் 137
2006ல் 356
2007ல் 346
2008ல் 587
2009ல் 507
என்ற எண்ணிக்கையில் பல தளங்கள் புதிய பதிவுகளின்றி பழைய நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டிருக்கின்றன.



6500க்கும் மேல் சேகரிக்கப்பட்ட பிளாக்கர் தளங்கள் மற்றும் 540 க்கு மேல் சேகரிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் தளங்கள் ஆகியவற்றின் தொகுப்புகள் இங்கே உள்ளன. புதிய புதிய எழுத்துக்களைத் தேடிப்படிக்கலாம். விடுபட்ட தளங்களை தேடிக் கொடுக்கலாம்.

http://tamilpoint.blogspot.com/p/tamil-blogs.html

தமிழ்மணம், tamilblogs.blogspot.com மற்றும் http://tamilpadhivu.blogspot.com/2010/03/blog-post_11.html ஆகிய இடங்கள் தான் பிரதானமாகக் கொண்டு வலைப்பூக்கள் திரட்டப்பட்டு தானியங்கி மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டது.

ஒரேப் பக்கத்தில் எத்தனைப் தளங்கள் வேண்டுமோ அதற்கிணங்க வலதுப்புற மேல் பகுதியில் அமைத்துக் கொள்ளலாம்
தலைப்புவாரியாகவோ, எண்ணிக்கைவாரியாகவோ வரிசைப்படுத்த அதன் தலைப்பை சொடுக்கலாம்.
அடுத்த பக்கத்தில் மேலும் பல விபரங்களுடன் பிளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ் தளங்கள் உள்ளன்.


விசித்திரமான பதிவர்களின் பெயர்கள், வலைப்பூவின் பெயர்கள், அதில் குறிப்பிடப்படும் உப தலைப்புக்கள் என சுவாரசியத்திற்குப் பஞ்சமில்லை. இன்று பதிவிடுபவர்கள் தவிர ஒரு காலத்தில் பதிவிட்டுக் கொண்டிருந்தவர்களின் பதிவுகளை மீண்டும் படிக்கச் சேகரித்ததில் ஒரு இதம். நீங்களும் படித்துப்பாருங்கள்.

Disclaimer:ஒவ்வொரு தளத்தின் செய்தியோடையை[feeds] தகுந்த வடிகட்டியுடன் இந்த தகவல்கள் எடுக்கப்பட்டது. கூகுளின் feeds அதிகமான அளவுப் போகும் போதும் சிற்சில எண்ணிக்கை குறைகள் ஏற்படலாம் என்றும் கொள்க.

17 comments:

  1. 1000க்கும் மேலான இடுகைகள் இட்டத்தில் குழும வலைப்பதிவுகள் நிறைய உண்டு, எனக்கு தெரிந்து 1000 இடுகைகளை கடந்துள்ள தனிபதிவர்களில் எனது மற்றும் துளசி கோபால், டோண்டு இராகவன் மற்றும் டிவி இராதா கிருஷ்ணன் வலைப்பதிவுகள் உண்டு.

    என்னுடைய இடுகை எண்ணிக்கை 1270 பின்னூட்ட எண்ணிக்கை 27197

    உங்கள் தொகுப்பு சரி ஆனால் முழுமையானதாக இல்லை.

    :)

    ReplyDelete
  2. ஜோதியில் நம்ம துளசிதளம் இருக்கே!!!!

    கோவியார் சொன்னதுக்கு ஒரு ரிப்பீட் போட்டுக்கறேன்.

    தகவல்கள் திரட்டிக்கொடுத்ததுக்கு நன்றி.

    ReplyDelete
  3. nall muyarchi ...
    good post ...

    ReplyDelete
  4. வாவ். ரொம்ப நல்லம். Use this free Short Url http://tamilblogs.tk . Thanks. எவனோ ஒருவன்.

    ReplyDelete
  5. பிரமாதம்.
    ஒரே பதிவில் இவ்வளவு தகவல்களா?
    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  6. மிகவும் பயனுள்ள தகவல் தொகுப்பு நண்பரே..!

    ReplyDelete
  7. @Cable Sankar said..
    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அண்ணே

    கோவி.கண்ணன் அவர்கள்களே உங்கள் கருத்து ஏற்புடையதுதான் ஆனால் அழிக்கப்பட்ட மறுமொழிகள் மற்றும் டிராப்டில் உள்ள பதிவுகள் இந்தக் கணக்கில் வராது.
    இதன் மூலம் ஆதாரத் தகவல் கூகுளின் feeds உங்கள் பக்க தகவல்களை எடுத்துத் தந்தது.
    http://govikannan.blogspot.com/feeds/posts/summary

    ReplyDelete
  8. @துளசி கோபால்
    உங்கள் தளம் தான் அதிக இடுகை எனநினைத்தேன் ஆனால் திரட்டியப்பின்தான் தெரிந்தது பல குழுப் பதிவு தளங்கள் முந்திவிட்டது. இருப்பினும் தனி நபர் தளங்களில் நீங்கள்தான் அதிக இடுகை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. //கோவி.கண்ணன் அவர்கள்களே உங்கள் கருத்து ஏற்புடையதுதான் ஆனால் அழிக்கப்பட்ட மறுமொழிகள் மற்றும் டிராப்டில் உள்ள பதிவுகள் இந்தக் கணக்கில் வராது.
    இதன் மூலம் ஆதாரத் தகவல் கூகுளின் feeds உங்கள் பக்க தகவல்களை எடுத்துத் தந்தது.
    http://govikannan.blogspot.com/feeds/posts/summary//

    இதில் எனக்கு ஆர்வம் இல்லை என்றாலும் அது காட்டும் கணக்கு தவறு என்பதை மீண்டும் குறிப்பிடுகிறேன். நான் மேலே குறிப்பிட்டு இருந்த எண்ணிக்கை அழிக்கப்பட்ட மறுமொழிகள் மற்றும் டிராப்டில் உள்ள பதிவுகள் அற்ற விவரங்கள் மட்டுமே.

    ReplyDelete
  10. @கோவி.கண்ணன்
    மீண்டும் தெளிவுபடுத்தியதற்கு நன்றி. கூகுளின் feeds எண்ணிக்கைப் படி எண்ணிக்கை மிகத்துல்லியமாக இல்லை என்பதை உங்கள் அனுபவப்படி ஒப்புக்கொள்கிறேன்.

    ReplyDelete
  11. @அன்பரசன்
    @சி.பி.செந்தில்குமார்
    @பிரவின்குமார்
    @Ramesh Karthikeyan
    கருத்துக்களுக்கு நன்றிகள்

    ReplyDelete
  12. @இராஜராஜேஸ்வரி பொதுவாக முடிந்தவரை அனைத்து தளங்களையும் திரட்டினேன் உங்கள் தளம் விடுபட்டிருந்தால், http://tamilpoint.blogspot.com/p/tamil-blogs.htmlஇந்த முகவரியில் தளத்தை இணைக்க ஒரு பகுதிவுள்ளது அதன் வழியாக புதிய தளத்தை தெரிவியுங்கள்.

    ReplyDelete
  13. எப்பேர்ப்பட்ட முயற்சி!!!

    ReplyDelete
  14. Very nice. sir kindly help me to find present data for my research article
    baba.josephine@gmail.com

    ReplyDelete

"கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
உங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது