Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Monday, December 13, 2010

"சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" என்ற பாரதி அச்சத்திற்கு எச்சமிட்டாற்போல  தொழிற்நுட்பத்தில் தேக்கநிலைதான் மிச்சமுள்ளது. அரசு பணிவாரிய தேர்வுகளில்கூட குறிப்பிட்ட துறை பாடங்களுக்கு கலைச்சொற்கள் பஞ்சத்தால் ஆங்கிலவழி முறைதான் பின்பற்றப்படுகிறது. இவை இப்படியிருக்க இணைய வெளியில் தமிழ் வளங்கள் கணிச்சமாகத்தான் உள்ளது. புதிதாக கணினி உலகிற்கு வருபவர்கள் தமிழில் உள்ள மென்பொருட்கள் பற்றி அறிவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்க இப்பதிவு உதவலாம்.
கூகிள் தமிழ் ஒலிமாற்றிப் பற்றி அநேகமானவர்கள் அறிந்திருக்கக்கூடும். அதன் பரவிறக்க பதிப்பாக Input Method Editor [IME] என்கிற மென்பொருளை வழங்குகிறது. இதில் தமிழ் மூலபதிப்பை தரவிறக்கி விளக்கம் கூறியப்படி நிருவிக்க் கொள்ளலாம். அதன் பின் வேண்டிய இடங்களில் தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யலாம் அவை நோட்பேடோ அல்லது MS வேர்டாகவோ இருக்கலாம். தட்டச்சிடும் ரோமன் எழுத்துக்களின்[English] ஒலிகளுக்குத் தகுந்த தமிழ் எழுத்தை தட்டச்சிடும். சொந்த கணினியாக வைத்திருப்பவர்கள் இதை ஒருமுறை பதிப்பதன் மூலம் வலை தளங்கள் முதல் கணினி படங்கள் வரை தமிழில் அடிக்கலாம்.

நியூ ஹரிஜோன் மீடியா[கிழக்கு பதிப்பகம்] தயாரிப்பில் வெளிவந்த ஒலி பெயர்ப்புக்கருவி. virtual தட்டச்சுப் பலகையும் உண்டு. ஆனால் பழகும் வரை பிரேத்தேகமான ஆங்கில எழுத்துக்களால் சில சமயம் எழுதவேண்டிவரும். தமிழக அரசின் 2009ம் ஆண்டுக்கான கணியன் பூங்குன்றனார் விருது பெற்றது.

கூகிள் வெளியீடுகளுக்கு முன்பே வந்த தமிழ் எடிட்டர். பல துணை கருவிகளுடன் பல வசதிகளுடன் பத்திகள் தட்டச்சு செய்யலாம். தமிழ் மொழி விளையாட்டுக் கருவிகளும் வழங்குகிறது.

இதுவும் தமிழ் சொல்செயலிதான்[word processor] ஆனால் கூடுதலாக unicode லிருந்துமொழிக்கு மாற்றும் வசதி, மற்றும் கட்டணங்களின் கீழ் இன்னபிற வசதிகளையும் வழங்குகிறது.

இது கூகிள் IME போல நிறுவி விட்டால் எல்லா கோப்புகளிலும் தமிழில் நேரடியாக தட்டச்சுயிடலாம். ஒவ்வொரு பதிப்பாக வசதிகளை மேன்படுத்திக் கொண்டேஇருக்கும் இந்த மென்பொருள் கடைசியாக அகஸ்ட் 2010 வரை வெளிவந்துள்ளது.


இ-கலப்பை என்னும் மொழிமாற்றுக் கருவி. அதிகம் மேன்படுத்தப்பட்ட வடிவில் வெளிவருகிறது. இது ஒரு திறமுல மென்பொருளாகும்[open Source] இதை நீங்கள் கூட அபிவிருத்தி செய்யலாம்  

http://www.higopi.com/downloads/
தமிழ் எழுத்துரு மாற்றி, நெருப்பு நரி நீட்சி[extention], மற்றும் தமிழ் வாசிக்கும் மென்பொருள் போன்றவை இந்த தளத்தில் கிடைக்கிறது.
ஒவ்வொரு தமிழ் இணைய பயனரிடம் இருக்க வேண்டிய மென்பொருட்கள். இந்திய மொழிக்கான தொழில்நுட்ப வளர்ச்சி[TDIL] அமைப்பின் கீழ் மத்திய அரசின் மானியத்தின் மூலம் தமிழ் மொழிக்கான ஆபிஸ் சூட்[office suit] தருகிறது. டாக்யூமென்ட், ஸ்ப்ரெட்ஷீட், பிரெசேன்டேஷன், HTML எடிட்டர் மற்றும் படிம கருவிகள் வழங்குகிறது.  
தமிழ் எழுத்துருக்கள், தமிழ் எடிட்டர், தமிழ் அகராதி, தமிழ் உலாவி[browser], தமிழ் OCR[ஸ்கேன் செய்த தமிழ் பக்கங்களிலிருந்து தமிழ் எழுத்துக்களைப் படிக்க உதவும்] போன்ற மென்பொருட்களை வழங்குகிறது. இணைய வழியாகவே தரவிறக்க வசதியுள்ளது. அது போக இணைய இணைப்பில்லாதவரும் பயன் பெறும் வகையில் இலவசமாக* குறுந்தகடையும் வழங்குகிறது. 
குறுந்தகடு[cd] வேண்டுபவர்கள் இந்தப் படிவத்தில் பதிவதன்முலம் பெறலாம்.  வெளிநாட்டினற்கும் குறுந்தகடுகள் அனுப்பப்படுமாம்

http://specials.msn.co.in/ilit/Tamil.aspx
மைக்ரோசாப்டின் தமிழ் மொழியாக்கக் கருவி வலை தளங்களுக்கும், டெஸ்க்டாப்பிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


விற்பனைக்கு வழங்ககப்படும் சில மென்பொருட்கள்[நான் கேரேண்டி இல்லை மக்களே]

அனானியாக இல்லாமல் முறையான தமிழ் மென்பொருட்கள் ஏதேனும் விடுபட்டிருந்தால் தெரியப்படுத்தவும்.

மேலும் தொடர்புடைய இடுகை.
தமிழ் அகராதிகள்

21 comments:

மாணவன் said...

அருமை நண்பரே

பதிவிட்ட அனைத்து மென்பொருள்களுமே மிகவும் பயனுள்ளவை
உங்களின் இந்த மகத்தான சேவைப்பணி தொடர்ந்து மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....

//ஆனானியாக இல்லாமல் முறையான தமிழ் மென்பொருட்கள் ஏதேனும் விடுபட்டிருந்தால் தெரியப்படுத்தவும்.//

எனக்குத்தெரிந்து தமிழ் மென்பொருட்கள் அனைத்தயும் நீங்கள் பதிவிட்டுள்ளீர்கள் இருப்பினும் நண்பர்களுக்கு தெரிந்த தமிழ்மென்பொருட்கள் இருந்தால் கூறட்டும் என்னைப் போன்ற புதியவர்கள் தெரிந்துகொள்ள உதவியாய் இருக்கும்

பகிர்வுக்கு நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல தகவல்.. பகிர்வுக்கு நன்றி..

http://rkguru.blogspot.com/ said...

நல்ல தகவல்

DR said...

http://specials.msn.co.in/ilit/Tamil.aspx இதை விட்டுட்டீங்களே ?

செல்வா said...

[si="50"][co="green"][ma]ரொம்ப நன்றிங்க ..!
சில மென்பொருட்களை அறிமுகம் செய்ததற்கு ..!![/si][/co][/ma]

நீச்சல்காரன் said...

[card="red"]@dinesh
மிக்க நன்றி
நல்ல விஷயத்தை பகிர்ந்துக் கொண்டதற்கு.[/card]

நீச்சல்காரன் said...

@மாணவன்
@அன்பரசன்
@வெறும்பய
@rk guru
@கோமாளி செல்வா
தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கு [im]https://sites.google.com/site/neechalkaran/pictures/thanks.JPG[/im]

ALHABSHIEST said...

பயனுள்ள தவல்களை வழங்கியமைக்கு நன்றி

E.BSM.BHARATHI said...

good, very useful

karuna.com said...

நல்ல தகவல் - மிக்க நன்றி

ஸனு செல்லம் said...

நல்ல தகவல் நன்றி...

மொபைலில் தமிழ் தட்டச்சு செய்ய, வாசிக்க ஏதாவது மென்பொருள் இருந்தால் சொல்லுங்க நண்பரே....

நீச்சல்காரன் said...

@ஸனு செல்லம்,
நோக்கியாவின் 1650, 5130, 2730, மற்றும் சில தொலைபேசிகளில் தமிழ் இயல்பாகவே வழங்கப்பட்டுள்ளது.
அது போக நீங்கள் இந்த வகை நோக்கியா வைத்திருந்தால், இங்கு சென்று இந்த மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளலாம்.

மற்ற வகை தொலைபேசி என்றால் சாரி மக்களே

நீச்சல்காரன் said...

@Siva
@rajibharathi
@karuna.com
மேலுள்ள tamil software போன்ற இனிமையான நன்றிகள்.

ம.தி.சுதா said...

உண்மையில் இன்று நல்ல பிரயோசனமான வலைத்தளம் ஒன்றை கண்டிருக்கிறேன் நன்றி சகோதரம்...
முதலில் இந்த ஓசிஆர் ஐ பதிவிறக்கம் செய்து கொள்கிறேன்...

ம.தி.சுதா said...

இதிலே யுனிகோட்டில் தட்டச்சிட்ட எழுத்துருவை சாதாரண தமிழ் எழுத்துருவாக (பாமினி) மாற்றக் கூடிய மென் பொருள் எது.... அதே போல் சாதாரணமான தமிழில் தட்டச்சிட்டதை யுனிகோட் அகா மாற்றக் கூடிய மென் பொருள் எது... உதவ முடியுமா..?

நீச்சல்காரன் said...

@ம.தி.சுதா,
எனக்குத் தெரிந்து யுனிக் கோட்டை பாமினிக்கு மற்றும் மென்பொருள் இல்லை. ஆனால் இணையத்தில் வழங்கும் சேவை உள்ளது.
http://software.nhm.in/services/converter

thaha229 said...

[ma][im]http://2.bp.blogspot.com/_euWMm6m69J4/TQCOAMnJU1I/AAAAAAAAAEY/E5U6qrLCtVA/s1600/image008.gif[/im][/ma]

mohamed khaiyum said...

????? ?????? www.higopi.com ?????? ??????? ????????????? .

நீச்சல்காரன் said...

@mohamed khaiyum
ஆஹா அற்புதமான தளத்தை அறியத்தந்தீர்கள். மிக்க நன்றி.

ஜெயசீலன் said...

நிச்சயம் ஒருநாள் நமது செந்தமிழ் அனைத்துத் துறைகளிலும் சரித்திர சாதனை நிகழ்த்தும் என்பது மட்டும் தின்னம்.தங்களது முயற்சியை மட்டும் இன்னும் சிறிது துரிதப்படுத்துங்கள்..

Sealsjtcu said...

நல்ல தகவல்