இந்த திரட்டியில் ஒருமுறை இணைத்தால் போதும் நாம் இடும் பதிவுகள் தானாக திரட்டப்படும்.
பதிவர்களுக்கு தெரிந்து தெரியாமலும் வரும் பிரச்சனை என்னவென்றால் தங்களது பதிவுகள் திரட்டியில் வரும் போது அவர்கள் பெயரோ அல்லது பதிவின் பெயரோ தெரியாமல் இருக்கலாம். இன்னும் சிலரின் பதிவுகள் திரட்டிக்கே வராமல் இருக்கலாம். இது எப்படி முடிகிறது? பொதுவாக தளத்தின் பதிவுகளை செய்தியோடையின் வழியாக தமிழ்மணம் திரட்டுகிறது. அந்த ஓடை அடிப்பட்டால் அன்றி இந்த பிரச்சனை வருவது குறைவு.
பழைய டெம்ப்லட்
புதிய டெம்ப்லட்
படத்தில் உள்ளபடி feeds அடைபட்டாலோ அல்லது Post Feed Redirect URL பகுதியில் தவறான முகவரி கொடுத்தாலோ இந்த தளத்திலிருந்து எந்த ஒரு செய்தியும் திரட்டிக்குப் போகாது பதிவும் திரட்டப்படாது.சில சமயம் பதிவுகள் இணைக்கும் போது "புது இடுகை எதுவும் காணப்படவில்லை” என்று வந்தால் உங்கள் feed முகவரியில் தான் பழுது, மேலே சொன்ன வழிகளைச் செய்துவிட்டு ஐந்து பத்து நிமிடங்கள் கழித்து மீண்டு முயன்று பார்த்தால் பதிவை சேர்க்கமுடியும். சரி, இங்கே சரியான feedburner முகவரி கொடுத்தாலும் பெயர்கள் விடுபடுகிறதென்றால் அதற்குக்காரணம் செய்தியோடையின் வகை RSS1.0 RSS2.0 Atom போன்ற வகைகளே காரணம். அதற்கு முன் நீங்கள் கொடுத்த feedburner முகவரி சரிதான என உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். {கீழே சுட்டிக் காட்டப்பட்ட பகுதியில் உள்ள முகவரி}
ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானது. எனவே feedburner உபயோகிப்பவர்கள் தமிழ் மணத்தில் எந்த தகவலும் தடங்கலில்லாமல் கிடைக்க feedburner -> optimize-> convert format ATOM0.3 கொடுக்கவும். வேறு ஏதாவது மாற்றிக் கொடுத்திருந்தால் பெயர்கள் விடுபட வாய்ப்புள்ளது.
கீழ் உள்ள படம் இரண்டு ஓடைகளின் ஒப்பிடு. ஒன்றில் பதிவரின் பெயர் பகுதி விடுபட்டுள்ளதை காணலாம்.
இதற்கு அடுத்த பிரச்சனை feedburner உபயோகிப்பவர்கள் பக்கத்தில் தமிழ் மண ஓட்டுபாட்டை மந்தமாக இருப்பது. இதனால் ஓட்டுப் போடமுடியாமல் போகும். அடிப்படையில் feedburner புள்ளிவிவரக் கணக்கிற்காக பக்கத்தின் முகவரியுடன் இன்னும் சில மாறிலிகளை கொடுத்திருப்பதால் இப்பிரச்சனை.உதா.?utm_source=feedburner&utm_medium=feed&u என்று இருக்கும் இதை நீக்க analyze-> configure stats->
Item views
Item link clicks
Item enclosure downloads என்ற மூன்றையும் தேர்வு செய்யாமல் சேமிக்கவும். ஆனால்இப்படி செய்வதன் மூலம் படிப்பவர்கள் புள்ளிவிவரங்களை சேமிக்கமுடியாது என்பதையும் நினைவில் கொள்ளலாம்.
சிக்கலே இல்லாமல் இருக்க இந்த Post Feed Redirect URL பகுதியை காலிசெய்வது ரெண்டு கோடி புண்ணியம் ஆகும்.
தமிழ் மணத்தின் கீழ் பகுதியில் உள்ள வகைப்பாட்டில் பதிவுகள் சேர அந்தந்த குறிச்சொற்களை பயன்படுத்தவும். சிலருக்கு அந்த குறிச்சொற்கள் தேவையில்லை என நினைத்தால் குறிச் சொற்களுடன் பதிவை திரட்டியில் இணைத்துவிட்டு பிறகு குறிச் சொற்களை பதிவிலிருந்தும் நீக்கிக் கொள்ளலாம்.
ஈழம், சினிமா, இசை, நகைச்சுவை, அரசியல், அனுபவம், புனைவுகள், சமையல், நிகழ்வுகள், பொருளாதாரம், தொழில்நுட்பம் ஆகியவை நிரந்திர குறிச்சொற்களாக உள்ளன.
வாசகர்களுக்கு
ஒரு பதிவை திரட்டியிலிருந்தே முழுவதும் படிக்கமுடியும் என்பது தெரியுமா? [இதன் முதல் கேள்விக்கு இன்னொரு பதில்] இந்த print பட்டனை சொடுக்குவதன் மூலம் அந்தப் பதிவை முழுதும் படிக்கலாம். ஆனால் அந்தத் தளத்தில் ஓடை பாதியாக இருந்தால் பாதி பதிவை மட்டும் படிக்கமுடியும்.
முறையே அடுத்துள்ள பட்டனை pdf வடிவில் பதிவை சேமித்துக் கொள்ள உதவும், அடுத்த பட்டன் பதிவைப் பற்றி புகார் அளிக்க உதவும்.
நிர்வாகத்தினருக்கு,
ஒவ்வொரு பிரிவுக்கும் அதில் வரும் பதிவுகளை செய்தியோடையாக[feeds] கொடுக்கலாம். இதன்மூலம் அந்தந்தப் பிரிவை விரும்பிப் படிப்பவர்கள் தொடர்ந்து படித்திடமுடியும்.
ப்ளாக்கரில் இன்னொரு ட்ரிக் உள்ளது. Post Feed Redirect URL பகுதியில் தேவையான மற்றதளத்தின் ஓடையைக் கூடக் கொடுத்து, புதிதாக வேற தளத்தையும் திரட்டியில் இணைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஒவ்வொரு தளத்தின் default செய்தியோடைக்குப் பதிலாக summary செய்தியோடையை சேகரித்துக் கொண்டால் மேற்கூறிய feedburner பிரச்சனையும் போலிப் பதிவுகள் பிரச்சனையும் தீரலாம்
மைன்ஸ் ஓட்டு போடுபவர்களுக்கு,
அண்ணன் கூறியது போல இத்திரட்டியின் ஓட்டு முறைகளால் பாதிப்பு வருகிறது அதேவேளையில் இப்படி சொல்லாமல் தளத்தில் இணைத்துக் கொண்டால் அதே ஓட்டு முறைகளால் பிரபலப் படுத்தலாம். குத்தப்படும் மைனஸ்களை ப்ளஸ்ஆக்கலாம். இந்தப் பதிவுக்கு மைனஸ் ஒட்டுக்களை குத்திப்பார்க்கவும். இச்சலுகை இந்த தளத்தில் உள்ள இந்த பதிவுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்று சொல்லி சபை கலைகிறது.
Disclaimer:தமிழ் மணத்தின் உள்கட்டமைப்புப் பற்றி அதிகாரப் பூர்வமாக எதுவும் தெரியாது. இப்பதிவில் பதிந்தவையெல்லாம் எனதனுபவமே!
டெக்னிக்கலாக மைனஸ் குத்தியவர்களுக்கு சபாஸ்
தெரியாமல் குத்தியவர்கள் இனி உஷார்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
.
Updates:
தமிழ் மணத்தின் ஓட்டு உரலியை தனியாகப் பயன்படுத்த தற்போது தடை செய்யப்படுலதால் அவ்வகை ஒட்டுக் குழப்பங்கள் தீரலாம்.
தமிழ்மணம் ஒவ்வொரு வகைக்கும் தனியா ஓடைகளை வழங்குகிறது ரீடரின் மூலம் பின் தொடரலாம்
அருமை நண்பரே,
ReplyDeleteஎன்னைப் போன்ற பலருக்கும் இந்த தகவல்கள் உதவியாய் இருக்கும் சூப்பர் அசத்தல் பதிவு
பகிர்வுக்கு நன்றி நண்பரே
பூங்கொத்துடன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDelete[im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/001S052_gnm-1.gif [/im]
[im] http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/00eF052U1b81.gif[/im]
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு. ஹேப்பி நியூ இயர்.
ReplyDeleteஇந்தப் பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் இருந்தது. நல்ல வழி காட்டி இருக்கிறீர்கள்..
ReplyDeleteநன்றி எதிர்நீச்சல்:))
[im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/00eF052U1b81.gif[/im]
ReplyDeleteநன்றி மாணவன்
ReplyDelete@komu மற்றும் நிகழ்காலத்தில் கருத்துக்கு நன்றிகள்.
தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்...
ReplyDeleteரொம்பவே ஆச்சரியப்படுத்திட்டீங்க. வாழ்த்துகள்.
ReplyDeleteபயனுள்ள பதிவு. இது குறித்து நுட்ப உதவி கேட்போருக்கு இனி இவ்விடுகையையும் குறிப்பிட்டு எழுதுகிறேன்.
ReplyDeleteநன்றி,
(தமிழ்மணம் குழு சார்பாக)
//
ReplyDeleteஒவ்வொரு பிரிவுக்கும் அதில் வரும் பதிவுகளை செய்தியோடையாக[feeds] கொடுக்கலாம். இதன்மூலம் அந்தந்தப் பிரிவை விரும்பிப் படிப்பவர்கள் தொடர்ந்து படித்திடமுடியும்.
//
Tamilmanam already has this feature. It has tag based feed for each tag. Please check this one...
http://www.tamilmanam.net/tags/feed/கற்றவை
In each of the tags page, it has a RSS icon from where you can access the feed
http://www.tamilmanam.net/tag/கற்றவை
இரா. செல்வராசு (R.Selvaraj)
ReplyDeleteகருத்திட்டு ஊக்கப்படுத்தியமைக்கு நன்றிகள்.
தற்போது நடைமுறையில் உள்ள ஓட்டு முறை மாற்றங்கள் வரவேற்கத் தக்கவை.இருப்பினும் இப்பக்கத்தில் உள்ளது போல மைனஸை செயலிழக்க செய்யவாய்ப்புள்ளது [என காட்டவே இந்தப்பதிவில் மட்டும் இணைத்துள்ளேன்] என்றும் கருத்தில் கொள்ளுங்கள்.
நன்றி.
@Anonymous,
ReplyDeleteஅட ஆமாம், எனது IE உலாவியில் மட்டும் அந்த feedsயை சோதித்துப் பார்த்து ஏமாந்துவிட்டேன்.
தகவலுக்கு நன்றி.
@ஜோதிஜி
ReplyDeleteஉங்கள் கருத்து என்னை முன்னோக்கி சொலுத்துகிறது நன்றி
@ம.தி.சுதா வாழ்த்துக்களும் நன்றிகளும்
@இனியவன் முதல்வரவிற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்
புது வருஷத்துல சூப்பர் ஹிட் போச்ட் போட்டுட்டீங்க ,வாழ்த்துக்கள்.இது நிறைய பேருக்கு யூஸ் ஆகும்
ReplyDeleteபயனுள்ள பதிவு.......
ReplyDeleteபயனுள்ள பதிவு.......
ReplyDelete[ma]பயனுள்ள தகவல்.. நன்றி நண்பரே!!!![/ma]
ReplyDelete[ma][im]http://www.imagehousing.com/image/403921[/im][/ma]
This comment has been removed by the author.
ReplyDeleteதமிழ்மணத்தில் என் பதிவுகள் தெரிவதே இல்லை...பதிவு போட்டதும் முகப்பில் வருவது இல்லை மற்யு மொழி திரட்டுவது,வாசகர் பரிந்துரையிலும் வருவதும் இல்லை..நீங்கள் சொன்னபடி .3 என ரீடரில் திருத்தி விட்டேன்..அப்புறம் இரண்டு நாட்களாக ரீடரை நீக்கி பதிவிட்டு பார்த்தேன் பலன் இல்லை ..ஒரு ஐடியா சொல்லுங்கள் என் மெயில் ஐடி;sathishastro@gmail.com
ReplyDeletehttp://sathish777.blogspot.com
தமிழ்மணம் ஓட்டு பட்டை வேலை செய்கிறது..ஓட்டு போட முடிகிறது...நான் பிற தளங்களில் மறுமொழி இடுவதை காண்பிக்கிறது..என் தளத்தில் யாரேனும் மறுமொழி இட்டால் காண்பிப்பதில்லை...பதிவிட்டதும் முகப்பில் வருவதில்லை..இதை செக் செய்ய..தமிழ்மனம் அறிமுகபடுத்தியுள்ள..டிராஃபிக் ரேன்க் இல் என் யூஆர் எல்லை கொடுத்தேன்...உங்கள் பதிவு திரட்ட முடியவில்லை என்று பதில் வருகிறது
ReplyDelete@ஆர்.கே.சதீஷ்குமார்
ReplyDeleteநண்பரே,
உங்கள் Post Feed Redirect URL பகுதி இன்னும் அழிக்கப்படாமல் இருக்கிறது. அதுபோல atom0.3 இல்லாமல் RSS 2.0 வாக உள்ளது.
நீங்கள் வேறு எதையாவது மாற்றி விட்டுருப்பீர்கள் என நினைக்கிறேன்.
மெயில் விடுகிறேன் விவாதிக்கலாம்.
நல்ல பதிவு,இது போன்ற விளக்கப் பதிவுகள் இன்னும் வர வேண்டும்
ReplyDeleteஉங்கள் தளத்தில் எழுத்துக்கள் மட்டும் பெரியதாக இருந்தால் எல்லோருக்கும் படிக்க இன்னும் எளிமையாக இருக்கும்
ReplyDeleteநண்பருக்கு நன்றி கலந்த வணக்கங்கள். தங்களின் பதிவுகள் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDelete@ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteதமிழ்மணத்தில் என் பதிவுகள் தெரிவதே இல்லை...பதிவு போட்டதும் முகப்பில் வருவது இல்லை மற்யு மொழி
ஜோதிடப்பதிவுகள்க்கு அனுமதி இல்லைன்னு சொன்னாங்கன்னு சொன்னீங்களே?
[@]c1207165155190333480[/@]அண்ணே அது பழைய மறுமொழி
ReplyDeleteதாங்களாக முன்வந்து உதவும் தங்கள் பெருந்தன்மை பெரிதும் மதித்துப் போற்றத்தக்கது.
ReplyDeleteதங்கள் வழிகாட்டுதலின்படி என் புதிய இடுகையை இணைக்க மீண்டும் முயல்வேன்.
பலன் கிடைத்ததும் தங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
மிக்க நன்றி நண்பரே.
This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் நண்பரே , மேல் கூறிய வழி முறைகளை பயன்படுத்தி பார்த்துவிட்டேன் .இன்னமும் தமிழ் மணத்தில் புது இடுகைகள் காணப்படவில்லை என்று தான் வருகிறது .
ReplyDeletehttp://nathiyinvaliyilorunaavai.blogspot.com .இது என்னுடைய வலைதள முகவரி .வேறு வழிகளை விளக்கிக்கூறவும்
@Srini Vasan,
ReplyDeleteதற்போது உங்களின் சில இடுகைகளை நான் தமிழ் மணத்தில் இணைத்துள்ளேன். http://tamilmanam.net/tamil/blogger/Srini%20Vasan
நீங்கள் feedburnerல் செய்துள்ள அமைப்புகளை யூகிக்க முடியவில்லை அதனால் blogger settings -> Other -> Post Feed Redirect URLல் feedburner முகவரியை நீக்கிவிடுங்கள்
இன்னமும் புதிய இடுகைகள் காணப்படவில்லை என்று தான் வருகிறது .அது பற்றி மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன் .எப்படி இணைக்கலாம் என்று வழி கூறுவீர்கள் என நம்புகிறேன். நீங்கள் செய்ய உதவிக்கு நன்றி !
ReplyDeleteவணக்கம் நண்பரே ,
ReplyDeleteஇன்னமும் அதே நிலையில் தான் இருக்கிறது.முன்பு நீக்கிவிட்டு முயற்சி செய்தேன் முடியவில்லை ,அதனால் மீண்டும் இன்னைதேன் .இப்பொழுது நீக்கி விட்டேன் .உங்களுடைய புரிந்துணர்வுர்க்கு நன்றி