மீனவர்கள் யாரிவர்கள்? எங்கோ நாலு அறைக்குள் பட்டன்கள் தட்டும் நம்மால் என்ன செய்யமுடியும்?
இணையத்தின் ஒன்று விட்ட பெரியப்பா மகன்களான ஊடகங்கள் தற்போது இணையத்தில் ஒன்றிவிட்டது தெரியுமா? ஊடகங்கள் அச்சப்பட்டு எடுத்துவைக்காத சொச்ச செய்திகளை மக்கள் மிச்சமில்லாமல் படிப்பது இணையத்தில்தான். மாற்று ஊடகங்கள் பெருகிவிட்ட நிலையில் மாற்றமில்லாமல் ஊடகமாக இரண்டாண்டுகளுக்கு முன்பே இணையம் தன்னை பிரகடனப்படுத்திவிட்டது. தீர விசாரிக்க வேண்டாதளவு கண்ணால் பார்த்துவிட்டீர்கள், காதால் கேட்டும் விட்டீர்கள் இனி தீர்வு எழுதிவிடுங்கள். உங்கள் கருத்துக்களையும் ஆதரவையும் முன்வையுங்கள். ஏற்கனவே மாபெரும் கூட்டம் இணையத்தில் டிவிட்டரை விலைக்கு வாங்காத குறையாக கத்தத் தொடங்கிவிட்டது, அதன் எதிரொலிகள் வலைப்பூக்களிலும் உங்கள் எண்ணப்பூக்களிலும் மலரத்தொடங்கிவிட்டது; செவி கொடுத்த ஊடகங்களும் இப்போது செப்பத் தொடங்கிவிட்டது. இந்தக் கதறல்கள் மென்னணு புள்ளிகளாக சர்வரில் வீற்றிருந்தாலும் சாகாத வரமுடன் சந்ததியினருக்கு ஏதோவொன்றை விழிப்பூட்டிக் கொண்டுதான் உள்ளது. சரி எந்தெந்த வழிகளில் ரோடுபோடலாம்? இதோ சில புள்ளிகள் தொடரலாம்...
டிவிட்டர்:
டிவிட்டரில் ஹாஷ் குறியுடன் tnfisherman என்ற குறிச்சொல்லுடன் உங்கள் ஆதரவை மீனவருக்குத் தாருங்கள். அப்படியே சில டிவிட்டுகளைப் படித்து பிறருடன் பகிருங்கள். http://twitter.com/#!/search/%23tnfisherman இதுவரை வந்துள்ள டிவிட்டுகளை இங்கே பார்க்கலாம்.
http://www.savetnfisherman.org/
துரித நேரத்தில் தயாரான துடுக்கான இணையத்தில் உங்கள் பங்களிப்பை வழங்கலாம். உங்கள் எண்ணங்களும், இதற்கான தீர்வுகளும், காரண காரியங்களையும் அரசியல் பார்வையும் கொண்டு கொடுக்கலாம்.
http://www.facebook.com/savetnfisherman http://twitter.com/savetnfisherman கரம் சேரலாம்
மின்னஞ்சல் சங்கிலி:
பிடித்த விஷயங்கள், பிடித்த கருத்துகள் பிடித்த கேலி சித்திரங்கள் என கட்டி தவறவிட்ட இணையவாசிகளுக்கு வழங்கலாம். தவறான அணுகுமுறைகளை களைய அற்புதமான ஐடியாகளை சொல்லலாம். கீழுள்ள படிவத்தையும் மின்னஞ்சலில் சுற்றிவிடலாம்
பெட்டிஷன்:
இந்த துயரை இந்தியா அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இணைய படிவம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை படித்து நீங்களும் கையெழுத்துயிடலாம். http://www.petitiononline.com/TNfisher/petition.html கூடுதலான கோரிக்கைவைக்க விரும்பினாலும் அங்கே கருத்துரையில் தெரிவிக்கலாம். முன்னுரிமை தரப்படும். தற்போதைய குறைந்த பட்ச இலக்கு 1000 கையெழுத்து[போலி கையெழுத்துக்கள் கணக்கில் நிற்கா] இதுவரை வந்துள்ளது. இந்த படிவத்தை முக்கிய செய்தி நிறுவனங்களுக்கும் அரசுக்கும் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. முந்துங்கள்!
வலை பதிவர்கள்:
இதுதொடர்பான கருத்தாக்கங்கள் எழுதத்தொடங்கிவிட்டதால், தொடருங்கள்.டிவிட்டரில் தொடங்கிய அந்த தீயை உங்கள் வலை தளத்தில் இணைக்க விரும்பினால் [இப்பக்கத்தின் வலதுபுறம் போல] Dashboard -> design ->page template ->add a gadget -> HTML/Java script என்ற கட்ஜெட்டில் கீழுள்ள கோடுகளைப் போட்டு சேமிக்கலாம். அதுபோக மேற்கண்ட விஷயங்களையும் சொல்லலாம்.
<script src="http://widgets.twimg.com/j/2/widget.js"></script><script src="http://hosting.gmodules.com/ig/gadgets/file/105066904960012479556/tnfisherman.js"/>
வாசகர்கள்:
http://164.100.47.132/LssNew/members/membershomepage.aspx
மக்களவை உறுப்பினர்கள் விவரம்
http://164.100.47.5/Newmembers/memberlist.aspx
மாநிலங்களவை உறுப்பினர் விபரம்
அப்பெயர்களை சொடிக்கி ஒவ்வொருவரின் மின்னஞ்சல் முகவரிகளைப் பெறலாம். யாருக்கு எப்படி அனுப்பினால் மீனவர்கள் அப்படி பாதிக்கப்படமாட்டர்கள் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு முறைப்படி அனுப்பிவிடுங்கள் ஒரு மின்னஞ்சலை
அடுத்தடுத்து திட்டங்கள் வகுக்க கூகிள் குழுமத்தில் இணையுங்கள் ஆக்கப் பூர்வமாக பேசலாம்.
https://groups.google.com/group/tnfisherman
http://goo.gl/Yb3Sm இந்த இணைப்பில் ஊடகங்களின் இணைப்பை சேகரித்துக் கொடுங்கள். http://goo.gl/gXmR9 ஒரே இடத்தில் எல்லா தகவல்களும் சேமிக்கப்படும். அனைவரும் பயன்படுத்தலாம்.
உங்களால் டிவிட்ட நேரமில்லாவிட்டால் http://tweetfortnfisherman.blogspot.com/p/join-with-us.html ல் இணைத்துவிடுங்கள் டிவிட்டுவதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
tnfishermanஐ அடுத்த கட்டத்திற்கு நகர்த்தமுடியுமா?
இதை எல்லாம் செய்ய நீங்கள் இந்தியராகவோ, அரசியல் வாதியாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இறந்தவர்களை சகோதர உணர்வுடன் பார்ப்பவர்களாக இருந்தாலே போதும்.
மேலும் தகவல்கள் கிடைத்தாலோ நீங்கள் கொடுத்தாலோ பிற்சேர்க்கை கொள்ளப்படும்.
ஆமாம் மீனவர்கள் யாரிவர்கள்?....
தூரத்து தொடர்புடைய இடுகை: எனது புலம்பல்கள்
சரியான நேரத்தில் தெளிவான பார்வையுடன் சிறப்பாக சொல்லியிருக்கீங்க நண்பரே,அருமை
ReplyDeleteஉங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
கண்டிப்பாக மீனவர்களுக்கு நம்மால் முடிந்தவரை உதவியாய் இருக்க வேண்டும் அதற்கு இதுதான் சரியான தருணம்...
//இதை எல்லாம் செய்ய நீங்கள் இந்தியராகவோ, அரசியல் வாதியாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இறந்தவர்களை சகோதர உணர்வுடன் பார்ப்பவர்களாக இருந்தாலே போதும்.//
ReplyDeleteமிகச்சரியாக சொன்னீர்கள் நண்பரே கொஞ்சம் மனிதத்துடன் நடந்துகொண்டாலே போதும்
அடடா மீனவன் செத்தானா பிரதமருக்கு கடிதம் போடு தொகுதி பங்கீடு செய்யனும்னா நேரா டெல்லிக்கு ஓடு
ReplyDeleteசரியான நேரத்தில் சரியான பகிர்வு ...
ReplyDeleteகண்டன பதிவும் போட்டாச்சு என் தமிழனுக்காய்
ReplyDeleteகண்டனக் குரலும் கொடுத்தாகிவிட்டது நண்பரே
இனி கேட்போர் செவிக்கு எட்டட்டும்
நம் குரல்...
முழுக்க வாசித்தேன் அருமை அருமை அருமை
ReplyDeleteகாலங் கடந்த ஞானம்,இருந்தாலும் பரவாயில்லை,இப்பொழுதாவது விழித்துக் கொண்டீர்களே,நீங்கள் இதற்கு முதல்
ReplyDeleteஇப்படி எழுச்சி கொண்டிருந்தால்,எவ்வளவு தமிழ் மக்களைக் காப்பற்றியிருக்கலாம்.இன்னமும் காலம் இருக்கிறது,
ஒன்று படுவோம், ஓரணியில் திரழ்வோம், இலண்டனில் பத்தாயிரம் தமிழர்கள்,காட்டிய தீரத்தை,ஆறுகோடித் தமிழன் அறியாமல், அசைக்க முடியாமல் தூங்குகின்றான்,தட்டி எழுப்பி,தமிழன் உயிர் காப்போம்.
@மாணவன்,
ReplyDelete@இரவு வானம்,
@ரேவா,
@யாதவன்,
@உருத்திரா
அழகாக மருமொழியிட்டு உற்சாகம் தந்தமைக்கு நன்றி
நான் எழத நினைத்ததை கார்ட்டூன் சொல்லியதால் அதை என் ப்ளோக்ல முன்பே போட்டிருக்கேன் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் .
ReplyDeleteஎதை செஞ்சாலும் செவிடன் காதுல கூட ஒரு நாள் கருவி வைத்து கேட்டு விடும் என்று நினைக்கிறேன் இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகள் காதுகளுக்கு மட்டும் கேக்க மாட்டேங்குதே . எங்கேயாவது கமுசன்(கில்மா பெட்டி ) தறாங்கன்னா மட்டும் எப்படி தான் மூக்கு வேர்க்குமோ தெரியல... சொரனக்கெட்ட தமிழக அரசியல்வாதிகளுக்கு, என்னத சொல்றது, பிரச்சன பெருசா ஆச்சுனா உடனே இங்க இருந்து ஒரு கடிதம் எழுதிடுவாரு , அங்கே இருந்து இவருடைய பங்காளி பதில் கடிதம் எழுதுவாரு( இவனுங்க என்ன ஆட்சி நடத்துரானுங்களா இல்ல, மந்திரி பதவி கிடைக்கலன்னா அடுத்த பிளைட்டுள பறந்து உருண்டுகிட்டவது போய் வாங்காம திரும்ப மாட்டாரு ) ,ஒரு கை தடிய பிளைட்டுள இலங்கைக்கு அனுப்பிட வேண்டியது , அவன் குடுக்கற டி, பன்ன நக்கிட்டு வந்துடவேண்டியது ( பச்ச பச்சைய வருது வாயில ) .மீனவர்கள் கடலில் நீந்துவார்களா ?
வாருங்கள் கை கொடுப்போம்
உண்மையான கருத்து.. மீனவர்களுக்கான என் கவிதையை படிக்கவும்.. பகிர்வுக்கு நன்றி..http://veeluthukal.blogspot.com/2011/01/blog-post_29.html
ReplyDeletehttp://nekalvukal.blogspot.com/2011/01/blog-post_29.html
ReplyDeleteஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
செய்து விட்டேன் நண்பரே! முயற்சி வெல்க!!
ReplyDeleteகண்டிக்கப்படவேண்டியவேயே..
ReplyDeletehttp://riyasdreams.blogspot.com/2011/01/tnfisherman.html
இங்கே ஒருவரும் தமிழ்நாட்டு தமிழர்களுக்கும், மீனவருக்கும் எதிராகவும் பொங்கி வெடிக்கிறார். அவரையும் கண்டு கொள்ளுங்களேன்.
ReplyDeletehttp://eksaar.blogspot.com/2011/01/save-tn-fisherman.html
http://eksaar.blogspot.com/2011/01/tnfishermen-conspiracy.html
ReplyDeleteஒன்றுபடுவோம் குரல் கொடுப்போம்!!
ReplyDeleteUse http://hootsuite.com/ site for multiple tweets for single click.
ReplyDeleteSimply register & add your twitter accounts(up to 5), twit!!!
சோஸியல் வலைத்தளங்களில் (பேஸ்புக்கில்…etc) : மீனவர்களின் துயரத்தினை சொல்லும் வீடியோவை பதிவெற்றம் செய்யலாம்
ReplyDeletehttp://vimeo.com/19403179