க்ரோம் நீட்சி[Chrome Extension] என்பது க்ரோம் உலாவியில் பதிக்கப்படும் கூடுதல்/புதிய வசதி எனலாம். ஃபயர் ஃபாக்ஸின் add-on போல...
க்ரோம் உலவியில் இதுவரை தமிழ் எழுதிகளுக்கான பல நீட்சிகள் வந்திருக்கின்றன ஆனால் அகராதி மற்றும் தமிழ் செய்திகளுக்கான நீட்சிகள் ஏதாவது ஒரு தளம் சார்ந்ததாகவே வந்துள்ளன. அதனால் இந்த புதிய இரண்டு நீட்சிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
"மொழி துலக்கம் கொணர க்ரோம் நீட்சியைக் கைகொண்டவர்க்கு
நாங்கூழ் இட்ட கழனியாக செழுமையான விடயம் கிட்டும்"
இப்படி யாராவது அரியவகை பழங்காலப் பாடலென கிறிக்கிக் கொண்டிருக்கும் வேளையில் பொருள் தெரியாமல் திணறியதுண்டா? அல்லது
Good frend for Iesvs sake forbeare,To digg the dvst encloased heare
என்று இணைய ஷேக்ஸ்பியர் உங்களிடம் பேசும் போது பொருள் தெரியாமல் திணறியதுண்டா? உங்களுக்கான நீட்சி 'நம்ம டிக்ஸ்னரி' -இதுவொரு இருமொழி[தமிழ்/ஆங்கிலம்] நீட்சி. உங்கள் ப்ரைவுசரில் காணும் எல்லா தளங்களிலும் இதனைப் பயன்படுத்தலாம்.
படித்துக் கொண்டிருக்கையிலே புரியாத வார்த்தையை கர்சர் மூலம் தேர்வுசெய்து[select] மௌசை வலது சொடுக்கு செய்தால் அங்கே எழு அகராதிகள் தயாராக வந்து நிற்கும் வேண்டியவற்றை தேர்வு செய்து பொருளை படித்துக் கொள்ளலாம். உங்கள் மின்னஞ்சல்,செய்தித்தாள்கள், வலைப்பூக்கள், கூகுள் தேடுதளம் என்று எல்லா இடத்திலும் இதனைப் பயன்படுத்தலாம். தற்போதைக்கு http://dev.neechalkaran.com/p/dictionary.html வில் உள்ள முக்கிய எழு தளம் மட்டும் நீட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது, வாசகர் விருப்பத்திற்கிணங்க விரிவுபடுத்தப்படலாம்.
க்ரோம் உலவியில் ஒரு முறை இன்ஸ்டால் செய்தால் போதும், புதிய அகராதிகள் சேர்க்கப்படலோ அல்லது பழைய அகராதி பழுது பட்டாலோ அப்போது அடுத்த வெர்ஷன் வெளியாகலாம் அதை மறு இன்ஸ்டால் செய்து புதிப்பிக்கலாம்.
இன்ஸ்டால் செய்ய: கூகிள் இணைய அங்காடி
காலை எழுந்தவுடன் இணையதள செய்தித்தாள் படிக்கும் நபரா நீங்கள்? உங்கள் க்ரோம் நீட்சியிலே முக்கிய தமிழ் செய்தித் தாள்களின் செய்திகள் வந்து நிற்க வேண்டுமா? ஒரே இடத்தில் பலதள செய்திகளைக் காண வேண்டுமா? உங்களுக்கான நீட்சி 'நம்ம நியூஸ்பேப்பர்'. பிரபல தமிழ் பத்திரிக்கைகளின் செய்திகளை கொண்டுவரும்; தமிழ்நாடு,இந்தியா,உலகம்,இலங்கை,விளையாட்டு,வணிகம் ஆகிய பிரிவுகளில் திரட்டும்; உலவியின் வலது மூலையில் உள்ள ஐகானை சொடுக்கி வாசித்துக் கொள்ளலாம்;
இதையும் ஒருமுறை நிறுவினால் போதும், புதிய செய்தி தளங்கள் சேர்க்கப்பட்டாலோ அல்லது பழைய செய்தி தளம் பழுது பட்டாலோ அப்போது அடுத்த வெர்ஷன் வெளியாகும் அதை மறு இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
இன்ஸ்டால் செய்ய: கூகிள் இணைய அங்காடி
இரண்டு நீட்சிகளின் நிறை குறைகளை கருத்திடலாம். ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது.
பிற்சேர்க்கை:
இன்ஸ்டால் செய்த க்ரோம் நீட்சிகளை நீக்குவது எப்படி என்பவர்கள், உங்கள் க்ரோம் உலாவியின் வலது மூலை controls-> tools-> extensions-> சென்றால், uninstall செய்து கொள்ளலாம் அல்லது தற்காலிகமாக disable செய்தும் கொள்ளலாம்.
தொடர்புடைய இடுகை:
தமிழ் அகராதிகள் / அகரமுதலிகள்
இணைய தமிழ் படிப்பகம்
நல்ல பயனுள்ள தகவல்
ReplyDeleteஇன்று என் வலையில்
ReplyDeleteஎன்ன கன்றாவி இது ?
வடை எனக்கா ?
ReplyDeletegood
ReplyDeleteநன்றி "என் ராஜபாட்டை"- ராஜா மற்றும் நண்பன்.
ReplyDeleteஉபயோகமான தகவல் நன்றியுடன் வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteஇன்று எனது வலைப்பதிவில்
ReplyDeleteநவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..
நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்
http://maayaulagam-4u.blogspot.com