Pages - Menu

Sunday, March 17, 2013

பிரத்தியேகத் தமிழ்ச் செயலிகள் 2

HTML தமிழ்த் தட்டச்சுக்கருவி

இணையத் தொடர்பில்லா உங்கள் அலுவலக அல்லது இரவல் கணினிகளில் exe கோப்புகளைத் தரவிறக்கி தமிழில் தட்டச்சு இடமுடியவில்லை என்று நினைப்பவரா நீங்கள்? அல்லது எளிய ரக HTML வடிவத் தட்டச்சுச் செயலிகளைத் தேடுபவரா நீங்கள்? அல்லது நாவி -ஒற்றுப் பிழை திருத்தியைத் தரவிறக்கிப் பயன்படுத்த ஆசை கொண்டவரா? உங்களுக்காக பிரத்தியேகத் தமிழ்த் தட்டச்சுக் கருவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.


இது எளிய html வடிவில், சுமார் 110kb அளவுடைய இந்தச் செயலியை எளிதில் தரவிறக்கிக் கொள்ளலாம். அல்லது txt வடிவில் நிரல்களை மின்னஞ்சல் வழியாகக் கடத்திச் சென்று html என்கிற பின்னோட்டுடன் சேமித்துக் கொள்ளலாம். இணையத் தொடர்பில்லா அலுவலகத்தில் மின்னஞ்சல் வழியாக இதனை எளிதில் கொண்டு சென்று தமிழில் தட்டச்சிடலாம். கூடுதல் வசதிக்கு நாவி(தற்போதைய பதிப்பு வரை) பிழை திருத்தியும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பயன்படுத்தும் அதே வசதியுடன் இல்லத்திலும் பயன்படுத்தலாம்.

இதன் நிரல்கள் .html வடிவில் இங்கே தமிழ் எழுதி

பயனர் பொன்மொழி கட்ஜெட்

உங்களுக்கு விருப்பமான பொன்மொழிகள் அல்லது வாசகங்கள், அல்லது செய்தித் துணுக்குகள் முதலியவை உங்கள் வலைப்பதிவுகளில் தான்தோன்றியாக ஒவ்வொரு முறையும் மாறும் கட்ஜெட் வேண்டுமா? அடிக்கடி மாற்றிக் கொள்ளவும் விருப்பமா? உங்களுக்கான பிரத்தியேக கட்ஜெட் இதோ

புதியவருக்கான செய்முறை விளக்கம்:
நோட்பேட்(notepad) செயலியைத் திறந்து,
உங்கள் பொன்மொழிகளை எண்களோ, குறியீடுகளோ இல்லாமல் வரிசையாக ஒவ்வொரு வரியில் இட்டு,
.txt என்ற வடிவில், Encoding UTF-8(வேறு encoding என்றால் உலாவி சார்ந்து தமிழெழுத்துப் பிரச்சனை வரும்) என்று சேமித்துக் கொள்ளவும்,
code.googe.com அல்லது sites.google.com/ போன்ற கோப்பு சேமிப்பு இணையங்களில் அந்த .txt கோப்பைப் பதிவேற்றிச் சேமிக்கவும், எதில் வேண்டுமானாலும் இணையேற்றலாம் ஆனால் இறுதியாக அதன் முகவரி .txt என்று முடியும் விதத்தில் அமையும் சரியான முகவரியை எடுத்துக் கொள்ளவும்.
அதன் முகவரியை கட்ஜெட்டின் Text file Url என்கிற பெட்டியில் உங்களது பொன்மொழிக் கோப்பு முகவரியை இட்டுக் கொள்ளவும்.
ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகள் என்றாலும் காற்புள்ளி (,) இட்டு கொள்ளலாம் உதாரணம்: http://sample.com/p/one.txt,http://sample.com/p/two.txt,http://sample.com/p/three.txt என்று இடவும்
கட்ஜெட்டின் நீள அகலத்தைத் தேர்வு செய்து பக்கத்திலேயே நிரல்கள்(code) உள்ளன அதனை எடுத்தும் உங்கள் வலைத்தளத்தில் இணைக்கலாம். அல்லது
நீங்கள் பிளாக்கர் வலைத்தளம் என்றால் http://ethirneechal.googlecode.com/files/Quote.xml என்ற முகவரியை layout -> Add gadget -> Add your own என்ற இடத்தில் இட்டு நேரடியாக இணைத்துக் கொள்ளலாம். விரும்பிய போது பொன்மொழிகள் பக்கத்தை நீங்கள் திருத்திக் கொள்ளலாம், அல்லது புதிய பக்கத்தைச் சேர்த்து அதன் முகவரியை கட்ஜெட் நிரலுடன் சேர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் தானாக பொன்மொழிகள் மாறிக் கொள்ளும். மாதிரி கட்ஜெட்:

2 comments:

  1. பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  2. எல்லாருக்கும் பயன்படும்படியான ஒரு மென்பொருளை உருவாக்கியமைக்குப் பாராட்டுகள்...

    நாவியைத்தான் நான் பிழை நீக்கத்திற்காகப் பயன்படுத்துகிறேன்... என் ஆய்வுக்கும் புத்தகத்திற்கும் பயன்படுத்திகொண்டு வருகிறேன்...

    அதுவும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் முறையையும் தந்துள்ளது கண்டு மகிழ்கிறேன்...

    மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் மீண்டும் ஒரு முறை நன்றி கூறிக் கொள்கிறேன்.

    ReplyDelete

"கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
உங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது