Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Wednesday, February 26, 2014

Info Post
ஒரு காலத்தில் இணையத்தளம் என்பது அச்சு ஊடகத்திற்கு விளம்பரப் பதாகை போல இருந்தது. இணையத்தில் இதழுக்கான தளத்தில் விளம்பரம் இட்டு அச்சு இதழை விற்றனர். ஆனால் இணையத்தின் ஆற்றல் மெல்ல மெல்ல இதழ்களை ஈர்க்கத் தொடங்கியது. இரண்டும் வெவ்வேறு வெளி என்றுணர்ந்து இரண்டிலும் பெரிய ஊடகங்கள் காலூன்றியுள்ளனர். தினசரி, வாராந்திரி, மாந்தாந்திரி என்று பெரு இதழ்கள் எல்லாம் விலையில்லாமலோ, விலைவைத்தோ இணையத்தில் உள்ளன. 



பல அச்சு சிற்றிதழ்கள் இணையத்தில் பெயரளவிலும் ஒரு இணையப்பக்கம் கொண்டிருப்பதில்லை. அதைவிட தகவல் தொடர்பிற்கு ஒரு மின்னஞ்சலும் இல்லை. சில இதழ்கள் ஆர்வமுடன் இணையத்தளம் தொடங்கினாலும் கொண்டுசெல்வதில் சிக்கல் கொண்டு கைவிடப்படுகின்றன. ஒன்றிரண்டு இதழ்கள் பேஸ்புக்கில் பக்கத்தைத் திறந்து இதழின் அட்டைப்படத்தை வெளியிட்டதுடன் நின்றும் விடுகின்றன. முதலில் இணையத்திலுள்ள சிற்றிதழ்களைப் பார்ப்போம்.
பல்சுவை இதழ்கள்:
கிழக்கு வாசல்
தன்னம்பிக்கை
பத்ரி அவர்களின் ஆழம்
ஜெ.பி.யின் முழக்கம்
காவியம் மாத இதழ்
ரௌத்திரம்
அமுதசுரபி
புதிய பார்வை
உரத்த சிந்தனை

சட்டம்:
பொதுவாகச் சட்டம் சார்ந்த விடயங்களில் வெகுஜன ஈடுபாடு குறைவே. அதன் காரணமாக சட்ட இதழ்களும் பரவலாக இல்லை. அரிதாகச் சில வழக்குரைஞர் முயற்சியால் மாவட்டம் அல்லது மாநிலம் அளவில் எண்ணக்கூடிய அளவில் சில சட்ட இதழ்கள் வெளிவருகின்றன. அதில் இணையத்தில் இரண்டு இதழ்கள் காணக்கிடைக்கின்றன.
சட்டக்கதிர்
கோவை சட்ட விழிப்புணர்வு இதழ் 

மகளிர்:
சமையல், வீட்டு அலங்காரம், குழந்தை வளர்ப்பு என்று அகத்திணை சார்ந்த சமூகத்தின் மிகமுக்கிய பொறுப்புகள் சுமக்கும் மகளிர்களுக்கான இதழ்கள் சில உள்ளன. இணையத்தில் காணக் கிடைக்கும் இதழ்கள்
திருமதி கிரிஜா ராகவனின் லேடீஸ் ஸ்பெசல்
www.ladiesspecial.com  நல்ல புத்தக அனுபவத்துடன் வெளிவருகிறது.
தங்கமங்கை
http://thangamangai.com/


சிறுவர்:
சிறுவர் இதழ்கள்:

ஆன்மீக இதழ்கள்:
விவேகானந்தரின் இராமகிருஷ்ண மடத்தின் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்
தமிழ்ச் சைவப் பேரவையின் சார்பில் வெளிவரும் நால்வர்நெறி மாத இதழ் 
திருவாரூரிலிருந்து வெளிவரும் சிவவொலி மாத இதழ் 
தெய்வமுரசு

தொழில்துறை இதழ்கள் 
தொழில் உலகம் 
பில்டர்ஸ் லைன். ஓராண்டுக்கு முந்தைய இதழ்களை மட்டும் இலவசமாகப் படிக்கலாம்.

உணவுநலம் மாதஇதழ் 
மருத்துவ மலர் மாத இதழ் 

விவசாயம்:
இணையத்தில் மிகவும் குறைவாக செய்திகள் கொண்டுள்ள துறை விவசாயம். அத்துறை சார்ந்த இரு இதழ்கள் இணையத்தில் கிடைப்பது சிறப்பானது.

விவசாய உலகம் 
சந்தை மாத இதழ்.

சமுதாய இதழ்கள்
சமரசம்
நம்பிக்கை - மலேசியாலிருந்து இஸ்லாமிய மாத இதழ்
இனிய திசைகள்
மலையகத் தமிழர்களின் வாராந்திரி -சூரியகாந்தி

விளையாட்டு:
விளையாட்டு உலகம் மாத இதழின் சில கட்டுரைகள் இணையத்தில் உள்ளன.

கல்வி :

சினிமா:
திரும்பும் இடமெல்லாம் சினிமா செய்திகள் இருக்கும் இணையத்தில் சினிமா அச்சு இதழ்களும் கரம் விரிக்கின்றன.
சினிமா எக்ஸ்பிரஸ் www.cinemaexpress.com/

அரசியல்
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் பிறைமேடை மாதமிருமுறை
மதிமுகவின் சங்கொலி
அஇஅதிமுகவின் டாக்டர் நமது எம்.ஜி.ஆர் 
மேலும் உள்ள தமிழ் இதழ்களை தமிழ்ப்புள்ளி இணையதளத்தின் படிப்பகத்தில் பார்க்கலாம். சிற்றிதழ்கள் இணையத்தில் செய்தவையும் செய்யக்கூடியவையும் அடுத்தப் பகுதியில் தொடரும்...

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தேவையானதை மட்டும் bookmark செய்து கொண்டேன்... நன்றி...

Rathnavel Natarajan said...

தமிழ்ச் சிற்றிதழ்களும் இணையமும் - இஅருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.நன்றி நீச்சல்காரன்.

Rathnavel Natarajan said...

தமிழ்ச் சிற்றிதழ்களும் இணையமும் - இஅருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.நன்றி நீச்சல்காரன்.

இ.பு.ஞானப்பிரகாசன் said...

அருமையான தொகுப்பு நண்பரே! நன்றி! ஆனால், எனக்கு மிக மிகப் பிடித்த இதழும், தமிழ்ப் பற்று, சமூகச் சிந்தனை ஆகியவற்றில் தலைசிறந்து விளங்குவதுமான 'கீற்று' இதழை விட்டுவிட்டீர்களே! தற்பொழுது சமூக விரோதிகள் சிலரால் அந்த இதழ் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், விரைவில் வெளிவரும்.

அப்புறம், நான் பணியாற்றும் இதழும், தமிழ் இணைய உலகத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே இயங்கி வருவதுமான 'நிலாச்சார'லையும் விட்டுவிட்டீர்கள்! தவிர, திண்ணை, கூடல், வார்ப்பு, தென்செய்தி என இன்னும் நிறைய இருக்கின்றன. அடுத்த பதிவில் சேர்த்துக் கொள்ளுங்களேன்!

Neechalkaran said...

இ.பு.ஞானப்பிரகாசன்,
எனது புதிய தேடல் கருவியில் அண்மைய சிக்கிய தளங்களைத் தான் இப்பதிவில் பகிர்ந்துள்ளேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள இதழ்கள் எல்லாம் ஏற்கனவே அறிமுகமானது என்பதால் குறிப்பிடவில்லை. இருந்தும் படிப்பகப் பக்கத்தில் மேலும் இதழ்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளேன்.

இ.பு.ஞானப்பிரகாசன் said...

//நீங்கள் குறிப்பிட்டுள்ள இதழ்கள் எல்லாம் ஏற்கனவே அறிமுகமானது என்பதால் குறிப்பிடவில்லை// - ஓ அப்படியா? சரி, சரி.

Unknown said...

www.meelaivu.blogspot.com

Unknown said...

உங்களின் தொகுப்பு மிக அருமையாக உள்ளது. உங்கள் முயற்சிகள் யாவும் பாராட்டுக்குரியவை. இன்றைய (21.08.2015) தி இந்து தமிழ் நாளிதழில் உங்களது முயற்சிகள் பற்றி செய்தி வந்தள்ளது. வாழ்த்துக்கள்! நன்றி.

K. ASOKAN said...

பத்திரிகைகளின் தொகுப்பு மிக அருமையாக உள்ளன பாராட்டுகள். நண்பர் திண்டுக்கல் தனபால் அவர்களின் கருத்து சிறப்பு