இணையத்தில் தினமும் அதிகத் தமிழ்ப் பக்கங்கள் உருவாக்கிவரும் இணையத்தளங்கள் என்றால் அது பத்திரிக்கைகளின் இணையத்தளங்களே. அதேவேளையில் அதிகப் பயன்பாட்டுத் தளங்கள் என்றால் அது சமூக ஊடகங்களே. வெற்று அரட்டைகளுக்கு மாற்றாக அவ்வப்போது நல்ல விசயங்களும் சமூகத்தளங்களில் வெளிவருகின்றன. வலைபாயுதே, வலைப்பேச்சு முதல் நெட்டுக்குத்து வரை பல ஊடகங்களில் கவனிக்கப்படும் நுண்பதிவுகளே டிவிட்டரில் எழுதப்படும் கீச்சுகள். உடனுக்குடன் மக்களால் எழுப்பப்படும் சிந்தனைகள், வித்யாசமான கற்பனைகள் சமூகப்பார்வைகள் எனப் பல அம்சங்களைக் கொண்டுள்ள இந்தக் கீச்சுகள் பலரால் பல்லாயிரக் கணக்கில் எழுதப்பட்டு வருகின்றன. அவற்றில் சிறந்த அல்லது பிரபலமானவற்றைத் திரட்டித் தரும் ஒரு திரட்டியாக RT_tamil தானியங்கி செயல்பட்டுவருகிறது. அது ஒரு நாளில் எழுதப்படும் லட்சக்கணக்கான கீச்சுகளை அலசி அதில் அதிகம் பிரபலமானவற்றை எடுத்து வாசகருக்குத் தருகிறது.
தரமாகக் கிச்சுகளை மட்டும் சேகரிக்க வேண்டுமென்றால் மனித ஆற்றல் பலமடங்கு தேவைப்படும், ஆனால் பிரபலமான கீச்சுகளைச் சேகரிக்க இணைய தானியங்கிகளே போதுமானது. இருந்தாலும் அடிக்கடி தனது வியூகங்களை மாற்றியமைத்து முடிந்தவரை தரமான கீச்சுகளைத் தானியக்கத்தில் தரவே முற்படுகிறது. சிலசமயங்களில் எதிர்பாராத வழுக்களால் தானியக்கம் தடைப்படுவதும் உண்டு ஆனால் விரைவில் மீட்கப்பட்டு மீண்டும் இயக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வாசித்தும், பகிர்ந்து கொண்டும், பின்தொடர்ந்தும், மென்சன் செய்தும் வாசகர்கள் இந்தத் தானியங்கியின் தரத்திற்குத் தொடர்ந்து அங்கிகாரம் அளித்துவருகிறார்கள். தொடக்கத்தில் 100 கணக்குகளுடன் தொடங்கி பின்னர் படிப்படியாகத் தானியக்கத்தால் அதிகரித்து இன்று அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் RT_Tamilஐ தடை செய்தவர்கள் நீங்கலாக 14ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்க் கணக்குகளைக் கவனிக்கிறது. அதிலிருந்து தினமும் சுமார் 120 முதல் 180 வரை பிரபலமான தமிழ்க் கீச்சுகளைத் தினமும் அடையாளப்படுத்தி வருகிறது.
சென்றாண்டு பிறந்த RT_tamil என்ற டிவிட்டர் தானியங்கி (BOT) கணக்கு இன்றுடன் ஓராண்டைப் பூர்த்தி செய்துள்ளது. இதுவரை 51 ஆயிரம் தமிழ்க் கீச்சுகளுக்கு மேல் மறுகிச்சு செய்து 1250க்கும் மேல் நேரடி பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ள இந்த தானியங்கி 2013 ஜூலை 20ம் தேதியே நிரலாக்கம் பூர்த்தி அடைந்து தனது முதல் தானியக்கக் கீச்சு வெளியிட்டது, அடுத்த இரு தினத்தில் முதல் மறுகிச்சையும் வெளியிட்டு தமிழ் டிவிட்டர் உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் பயணத்தில் உறுதுணையாக இருப்பது கூகிளின் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் மற்றும் டிவிட்டரின் ஏ.பி.ஐ தொழிற்நுட்பங்களே ஆகும்.
இந்தத் தானியங்கியால் திரட்டப்பட்ட தமிழ்க் கீச்சுக் கணக்குகளின் பட்டியல் ஓன்று இங்குள்ளது. இதன் மூலம் உங்களுக்கு விருப்பமான கணக்குகளை அடையாளம் கண்டுகொள்ளலாம். மேலும் தினமும் வெளிவரும் தமிழ்க் கீச்சுகளில் பிரபலமான 20 கீச்சுகள் தினமும் கீச்சுப்புள்ளி தளத்தில் பகிரப்படுகின்றன. இதன் மூலம் டிவிட்டர் கணக்கில்லாதவரும் படிக்கலாம். இதன் கீச்சுகளை இத்தளம் போல வலைப்பூவில் நேரடியாக இணைத்துப் படிக்க, கீழுள்ள நிரல்களைப் பயன்படுத்தலாம்.
<a class="twitter-timeline" href="https://twitter.com/RT_tamil" data-widget-id="362866475784089600">Tweets by @RT_tamil</a> <script>!function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0],p=/^http:/.test(d.location)?'http':'https';if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=p+"://platform.twitter.com/widgets.js";fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,"script","twitter-wjs");</script>
வரும் நாட்களில் இதன் பயணம் மேலும் வலுபெற உங்கள் ஆலோசனைகளைக் குறிப்பிடுங்கள். மேலும் இதில் பிடித்த மற்றும் பிடிக்காத செயல்பாடுகளையும் குறிப்பிடுங்கள். கூடுதலாக, டிவிட்டரில் நீங்கள் விரும்பும் தமிழ் சார்ந்த தானியக்க யோசனைகள் இருந்தாலும் கூறுங்கள், எதிர்காலத்தில் புதியப் புதியத் தமிழ்நுட்பங்கள் வளர உதவும்.
டிவிட்டரும் ஒரு தானியங்கியும்
Info Post
5 comments:
வாழ்த்துகள்
RT_Tamil பணி தொடரட்டும்
மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.
தாமதமான, ஆனால் அன்பார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
நல்லது..
நல்லது..
Post a Comment