அச்சில் வந்த தமிழ் நூல்களை உலக அளவில் ஆங்காங்கே மின்னுருவாக்கம் செய்து வருகின்றன, குறிப்பாக தமிழிணைய மின்னூலகம், பொது நூலக இயக்ககம், நூலக.ஆர்க், ரோஜா முத்தையா நூலகம் இப்படிப் பல அமைப்புகள் உள்ளன. அவற்றின் நூல்கள் அனைத்தும் இலவசமாகத் தளத்திலும் வெளியிட்டுவருகின்றனர். வலைவழித் தேடல் நுட்பம் தெரிந்தவர்கள் தேடிப் படிப்பர் ஆனால் சாதாரணப் பயனருக்கும், மாணவர்களுக்கும் தேடிக் கிடைப்பதில்லை. அத்தகையோர்க்குப் பயன்படும் வகையில் அவற்றிற்கான ஒரு அடைவு(directory) உருவாக்கப்பட்டுள்ளது. (யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு நினைவாக ஜூன் 2 இல் வெளியிடப்படுகிறது)
https://oss.neechalkaran.com/books/
இதுவரை முக்கிய ஐந்து தள நூல்களின் பட்டியல் என சுமார் 27 ஆயிரம் உருப்படிகள் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் நூல்கள் எதிர்வரும் நாட்களில் இணைக்கப்படவுள்ளன. நேரடியாகத் தலைப்புவாரியாகவோ, ஆசிரியர்வாரியாகவோ, குறிச்சொல் வாரியாகவோ தேடலாம், தரவிறக்கலாம். ஒரு பக்கத்தில் எவ்வளவு நூல்கள் காட்டவேண்டும் என்பதையும் மாற்றிக் கொள்ளலாம். அந்தந்த நூல்களைச் சொடுக்கினால் தரவிறக்கமும் செய்ய முடியும். இதுவொரு அடைவு, மூல தளத்தின் மாறுதல்கள் இதையும் பாதிக்கக் கூடும் என்பதையும் கருத்தில் கொள்க.
இது அறிவியல்பூர்வமானதாக தொகுக்கப்படாமல் இருக்கலாம் ஆனால் கிடைக்கும் நுட்பத்தில் திரட்டித் தொகுக்கப்பட்டுள்ளது. கிட்ஹப்பில் உள்ளதால் யாரும் எடுத்தும் மேம்படுத்தலாம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அனுப்பலாம். எழுத்தாக்கம் செய்யவும், ஆய்வுகளுக்கும் வாசிப்பனுபவத்தைப் பரவலாக்கவும் இவை உதவலாம்.
நேரடியாகப் படிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட முகவரிகள் உதவும். அரிதான நூல்களைத் தொகுக்கும் முக்கிய ஐந்து அமைப்புகளின் தளங்கள்
https://tamildigitallibrary.in
https://archive.org/details/koviloorandavarlibrary
https://archive.org/details/RojaMuthiah
http://117.239.65.2:8080/jspui
இதர மின்னூல்களைப் படிக்கத் தரும் தளங்கள்
https://projectmadurai.org/
https://ndl.iitkgp.ac.in
http://www.chennailibrary.com/
http://www.ulakaththamizh.in/book_all
http://library.bjp.org/jspui/
http://dvkperiyar.com/?page_id=17537
http://community.ebooklibrary.org
சுட்டிகளை காபி பேஸ்ட் செய்யவேண்டுமா? இங்கு தொட்டால் வேலை செய்யவில்லையே...
ReplyDeleteஅருமை...
ReplyDeletetamildigitallibrary, noolaham, archive, projectmadurai - இவற்றில் சில நூல்களை தரவிறக்கம் செய்து திருக்குறள் கணக்கியல் ஆய்விற்கு பயன்படுத்துகிறேன்... மற்ற இணைப்புகளுக்கும் சென்று பார்க்கிறேன்... நன்றி...
@ஸ்ரீராம், பொதுவாகத் தேவையில்லை. உங்கள் உலாவியில் திறக்கவில்லை என்றால் நகல் எடுத்தும் ஒட்டலாம். சில மணிநேரத்திற்கு முன்னர் பொது நூலக இயக்ககத் தளம் வேலை செய்ய வில்லை. அந்த நூல்களைப் பின்னர் முயன்று பாருங்கள்.
ReplyDelete@திண்டுக்கல் தனபாலன், நன்றி.
மிக்க நன்றி. உங்கள் பணிக்கு மனமுவந்த வாழ்த்துகள்
ReplyDeleteபோற்றுதலுக்கு உரிய முயற்சி
ReplyDeleteவாழ்த்துகள்
Freetamilebooks தளம் இணைக்கப்படவில்லையே. அங்கும் நிறைய நூல்கள் உள்ளன.
ReplyDeleteஅரைக்கம்பத்தில் தொப்புள் கொடி இப்புத்தகம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனை இணைத்தால் நன்றாக இருக்கும்.
ReplyDelete@ஆயுத எழுத்துக்கள்."letters of change".
ReplyDeleteஇவை அனைத்தும் சட்டரீதியாக மின்னுருவாக்கம் செய்யப்பட்ட பெரும்பாலும் அரிய நூல்களின் தொகுப்பு. நீங்கள் குறிப்பிட்ட வகையில் தனி நூலைத் தேடி இணைக்க இயலாது. இணைக்கில் உள்ளது. http://books.arivudaimai.com/product/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3/ நூல் கிடைக்கவில்லை என்பது தவறு.
@Jegadeeswaran Natarajan
அச்சில் வந்த நூல்கள் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.
எமது www.chennailibrary.com (சென்னைநூலகம்.காம்) தளத்தையும் இணைக்கலாமே...
ReplyDeleteகடினமான பணி. வாழ்த்துக்கள். இந்தக் குறையையும் கவனத்தில் எடுக்கமுடிந்தால் நல்லது. பதிப்பான ஆண்டு தனியாக ஒரு காலமில் இல்லாததது (ஆண்டு வரிசையில் ஆய்வாளர்கள் முக்கியமாகத் தேடுவார்கள் என்பதால்) ஒரு பெரும் குறையாக உள்ளது.
ReplyDelete