Pages - Menu

Monday, November 8, 2021

தமிழுக்கான புதிய கூகிள் குழு

வளரும் தொழில்நுட்பத்தில் தமிழைப் புகுத்த எந்தளவிற்குத் தொழில்நுட்பம் தேவையோ அதைவிட அதிகமாக அத்துறையில் மனிதவளத்தை அதிகரிக்க வேண்டும். கணித்தமிழுக்கு மனிதவளக் குழாம் உருவாக்கும் தேவை உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர்  ஐரோப்பிய நிறுவனம் ஒன்று சரியான நபர்கள் கிடைக்காததால் தமிழில் தங்கள் சேவையை வழங்கவில்லை என்று சொன்னார்கள். அது உண்மையும் கூட. மொழிபெயர்ப்பாளர்கள், உள்ளடக்க எழுத்தாளர்கள், புத்தாக்க எழுத்தர் என்று பல்வேறு பணிகள் இணையத்தால் அபரிவிதமாக வளர்ந்துவருகின்றன. அந்தத் திறனை மேம்படுத்தவும் சரியான வாய்ப்புகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கவும் இத்தகைய செய்திகளைப் பகிர ஒரு பொதுக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. 

கணித்தமிழ் வேலைவாய்ப்பு என்ற இந்த கூகிள் குழுவில் தமிழும் கணினியும் தெரிந்த ஒருவருக்குப் பொருளாதாரப் பயனளிக்கும் செய்திகளை இதில் பகிரலாம். நீங்களும் பயனடையலாம். உங்கள் நிறுவனங்களில் இத்தகைய பணிவாய்ப்பிருந்தால் பகிரலாம். சிறிய தட்டச்சு முதல் பெரிய ஊடக மேலாண்மை வரை தமிழ் சார்ந்த வேலைவாய்ப்புப் பதிவுகளைப் பகிரலாம். சிறிய வலைப்பதிவு போட்டி தொடங்கி பன்னாட்டுப் பணி வாய்ப்பு வரை இணையத்தில் தமிழ்சார்ந்து இயங்குபவர்களை இது ஊக்குவிக்கும்.  திறனாளர்களையும் தேவையுள்ளோர்களையும் இணைக்கும் சிறு முயற்சி. ஆர்வமுள்ளவர்களிடமும் பகிருங்கள். 

https://groups.google.com/g/kanitamizhjobs

அனைத்துத் தொழில்நுட்பத்தையும் தமிழில் வழங்க மனிதவளம் குறையாக இருக்கக்கூடாது என்பதே நோக்கம். இதுபோல ஏற்கனவே உள்ள வேறு முக்கிய கூகிள் குழுக்கள் கீழே உள்ளன. கணினித் துறையில் ஆர்வமுள்ளவர்கள் பின்தொடர வேண்டியவை

கணினித் தமிழ்த் தன்னார்வலர்களின் குழு

https://groups.google.com/g/freetamilcomputing (1379)

தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் குழு

https://groups.google.com/g/tva_kanitamil_valarchi (112)

உத்தமம் அமைப்பின் குழு

https://groups.google.com/g/kanittamiz (51)


தமிழ் சார்ந்து உரையாட முக்கிய பேஸ்புக் குழுக்கள்

https://www.facebook.com/groups/col.aayvu - சொல்லாய்வு

https://www.facebook.com/groups/tamilsol - சொல்

https://www.facebook.com/groups/179849046077378 - நோக்கர்

வேறு குழுக்களையும் மறுமொழியில் இட்டுப்பகிரலாம். 

1 comment:

"கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
உங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது