பொதுவாக ஒரு படைப்பை உருவாக்கும் போதும் எதிர்பாராத விதமாக சில வேளை பயனுள்ள இதர படைப்புகள் உருவாகும். அதனை ஆங்கிலத்தில் spinoff என்போம் அது போல கோலசுரபியின் மூலம் விளைந்த சில படைப்புகளைப் பகிர இக்கட்டுரை.
வடிவப் பொருத்தப் புதிர்களுக்கு (Fitting Shapes Puzzle) கோலங்களிலிருந்து சிறந்த உள்ளீடுகளைப் பெறலாம். உதாரணமாக கோலத்தின் அடிப்படையான வடிவங்களை பகடைக் காயில் இட்டுப் பல காய்களை ஒன்றொன்று ஒன்றாக வைத்து வடிவங்களைக் கோர்க்கலாம். 3டி அச்சிலோ வார்ப்பிலோ இதுபோலப் பல பகடைகளை உருவாக்கி விளையாட்டுப் பொருட்களைச் செய்யலாம். கோடுகளைக் கொண்ட இந்த வடிவமும் சுவாரசியமாக பொருத்தும் புதிருக்கு உகந்தது.
குழந்தைகள் கோலங்களை வரைந்து பழக எளிய செயல்முறைப் பயிற்சிக்கான ஒரு மின்னூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. அது தற்போது புதுப்பிக்கப்பட்டுக் கூடுதல் வடிவங்கள் வண்ணம் தீட்டும் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள சிறுவர்களிடம் அச்சிட்டுக் கொடுக்கலாம்.
கோலசுரபியைக் கைப்பேசியில் எளிதில் பயன்படுத்தும் வண்ணம் கையடக்க ஒத்திசைவுடன் உள்ளது. ஆர்வமிருந்தால் அதன் முகவரியை கைப்பேசியின் முதல்திரையில் சேமித்துக் கொள்ளலாம். இதன் மூலம் கோலசுரபியை ஒரு குறுஞ்செயலி போலப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். ஆண்ட்ராட் இயங்குதளமென்றால் அதில் உள்ள குரோம் உலாவியில் திறந்து, வலது மேல் முனையில் உள்ள மூன்று புள்ளியைச் சொடுக்கி "Add to homescreen" கொடுத்துக் கொள்ளலாம்.
சிறப்பு...
ReplyDelete