Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Sunday, July 24, 2011

ஸ்பேம் எனப்படுவது சம்மந்தமில்லாத/ஆபத்தான வர்த்தக பின்புலம் கொண்ட தகவல்கள் நமது இணைய பெட்டகத்தில் வந்து குவிவதாகும். ஸ்பேம் அஞ்சல் தொடங்கி, ஸ்பேம் மெசேஜ், ஸ்பேம் கமெண்ட், ஸ்பேம் லிங்க்,என பல வடிவங்களில் வந்துவிட்ட இவை ஸ்பேம் டிவிட்களாகவும் படையெடுக்கிறது. சிலசமயம் நமக்கு வரும் ஸ்பேம்களைவிட நம்மால் மற்றவருக்கு செல்லும் ஸ்பேம்கள் கர்ண கொடூரமானவை.
முக்கியமாக டிவிட்டரில் நடப்பவையை இரண்டு வகையாக்கலாம், நம் கண்ணெதிரே அனுமதிவாங்கி ஸ்பேம்கள் அனுப்புபவை,மற்றொன்று தமக்குத் தெரியாமல் அனுமதிவாங்கி ஸ்பேம்கள் அனுப்புபவை. சில தளங்களில் login செய்ய டிவிட்டர் கணக்கை கேட்கும், நாமும் சரி என்று அனுமதி அளித்து பயன்படுத்திவிட்டு வருவோம். இரண்டாவது தெரியாத ஒருதளத்திற்குள் நுழையும் போது டிவிட்டர் கணக்கை கேட்பவை பெரும்பாலும், சுருக்கப்பட்ட முகவரியாகவும், DM மெசேஜ்களாகவும் இருக்கும். அங்கே நாம் கவனிக்க மறப்பவை 'access and update' என்கிற வசதி. இது வேறொன்றுமில்லை, அந்த தளத்திற்கு நீங்க update செய்யும் உரிமையை வழங்குகிறீர்கள். பிரபல தளங்களாக இருந்தால் பிரச்சனையில்லை டுபாக்கூர் என்றால் ஸ்பேம்கள் ராஜ்ஜியம்தான். கணக்கின் settings->applications சென்று கவனித்தால் இதுவரை யாருக்கெல்லாம் கணக்கை வாடகைக்கு விட்டுள்ளீர்கள் எனத் தெரியும். read only accessக்கு பிரச்சனையில்லை read and write access - read,write and direct message access என்றால் கவனமாக இருக்கவும் தேவையில்லை எனத் தெரிந்தால் revoke access பட்டனைத் தட்டி விரட்டிவிடுங்கள். தேவையில்லாத DMகளை சொடுக்காமல் தவிர்க்கவும்.


மிழ் வாக்கியங்களை படிக்கும் தானியங்கிகள் உண்டா என்ற தேடலுக்கு ஒரு விருந்து கிடைத்துள்ளது. இங்கு தமிழ் வாக்கியங்களை ஒலி வடிவில் மாற்றிக் கொடுக்கிறது. இயல்பான ஒலியை எதிர்பார்க்க முடியாவிட்டாலும் ஏமாற்றாமல் பேசிகிறது.
http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/

ணையத்திற்குள்ளும் ஒழுங்குகள் பின்பற்ற வேண்டும் என்று தெரியும் ஆனால் அவற்றை பழக்க போக்கில் மீறமுற்படுவோம். "இணைய வாக்கு போரில் சமாதானகோடியே வெற்றிகொடி"; "குழந்தைகளோடு இணையத்தில் உலாவுங்கள்;, "மறப்போம் மன்னிப்போம் என்பது இணையத்தில் இல்லவே இல்லை", "சமூக தளங்களுக்குள் நுழைவதற்கு முன் அதன் அடிப்படை அறிவைதேடிக்கொள்" என வாழைபழத்தில் ஊசிஏற்றி சொல்கிறது. கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டிய etiquette
http://eetiquette.com

PDF கோப்புகளை பிரிக்க மற்றும் இணைக்க ஒரு நல்ல தளம் sciweavers அது மட்டுமல்லாது, படங்களிலிருந்து மொழியை பிரித்து[image to text] தரும் வசதியும் இதுவரை தெரியாத அறியாத யுனிக்கோட் குறியீடுகளை சாட்டிங், டிவிட்டிங்க்கும் தருகிறது.
http://www.sciweavers.org

சென்ற பதிவின் நீட்சியாக இன்ஸ்டால் செய்த க்ரோம் நீட்சிகளை நீக்குவது எப்படி என்பவர்கள், உங்கள் க்ரோம் உலாவியின் வலது மூலை controls-> tools-> extensions-> சென்றால், uninstall செய்து கொள்ளலாம் அல்லது தற்காலிகமாக disable செய்தும் கொள்ளலாம். எதிர்பாராத விதமாக விகடன் தனது செய்தி ஓடையை மாற்றிக் கொண்டுள்ளதால் பழைய 'நம்ம நியூஸ்பேப்பர்' பயன்படுத்துபவர்களுக்கு விகடன் செய்திகள் வராது. அதனால் நீட்சி புதிப்பிக்கப்பட்டுள்ளது. மறு இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
நம்ம நியூஸ்பேப்பர்












இந்த வெர்ஷுவல் தமிழ் எழுத்துருக்கள் அடுத்தப் பதிவில் அறிமுகமாகும்

3 comments:

நீச்சல்காரன் said...

░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░▓▓░░░░▓░░░▓▓▓░▓▓▓░▓▓▓▓▓░░░▓▓▓▓▓░░░░░▓▓▓▓▓░░░▓░░░░▓▓░░
░▓░░▓░░░▓░░▓░░░▓░░░▓░░▓░░░░░▓░░▓░░░░░░▓░░▓░░░░▓░░░▓░░▓░
▓░▓░░▓░░▓░▓▓░░▓░▓░▓░▓░▓░░░▓▓▓▓▓▓▓▓░░▓▓▓▓▓▓▓▓░░▓░░░▓░░▓░
▓░▓░░▓░░▓░▓░▓░▓░▓░▓░▓░▓░░░▓░░░░▓░░▓░▓░░░░▓░░▓░▓░░░▓░░▓░
░▓░░▓▓▓▓▓░░▓░░░▓░░░▓░░▓░░░░▓▓▓▓░░▓░░░▓▓▓▓░░▓░░▓▓▓▓▓▓▓▓░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

M.R said...

நல்ல தகவல்கள் நண்பரே

மாய உலகம் said...

நல்ல தகவல் நண்பரே... நன்றி பதிவுகளை தொடருங்கள் தொடர்கிறேன்..