ஆடுபுலி ஆட்டம் நாட்டார் விளையாட்டுகளில் முக்கியமானது. சாதுர்யமும் சமயோசிதமும் கொண்டு விளையாடப்படுவதால் வயது ஒரு தடையில்லை. தமிழகம் மட்டுமின்றி அவரவர் மொழியில் ஆட்டுக்கும் புலிக்கும் பெயர்வைத்து இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் விளையாடியுள்ளனர். வங்கத்தில் பாக் பண்டி, பஞ்சாப்பில் ஷிர் பகர், நேப்பலில் பாக் சால், மலேசியாவில் மெயின் தபல் எம்பத் என ஒரே விளையாட்டை கொஞ்சம் கட்டங்களின் வடிவத்திலும் காய்களின் எண்ணிக்கையிலும் மாறுபட்டாலும் ஒரே வெட்டு ஒரே குத்து அதே ஆட்டம் தான். யார் விளையாடிக் கொண்டிருந்தாலும் புலி நமது தேசிய விலங்கு ஆகையால் இவ்விளையாட்டின் தாயகம் இந்தியாவாக இருந்திருக்கலாம்.
இப்போது ஆட்டத்திற்கு வருவோம்... இச்செயலி தமிழக ஆடுபுலி வடிவத்தில் 15 ஆடுகளும் முன்று புலிகளும் கொண்டுள்ளது. இச்செயலியில் நீங்களும் உங்கள் நண்பரும் விளையாடலாம் அல்லது கணினியுடன் ஆடுபுலி விளையாடலாம். ஆடு/புலியை காய்களை சொடிக்கி, கட்டங்களின் [intersection]சந்தியைச் சொடுக்கி காய்களை நகர்த்த வேண்டும். கோடுகள் கூடும் சந்திகள் காய்கள் வைக்குமிடம். தனக்கு அருகில் உள்ள ஆட்டை புலி வெட்டித் தாண்டும். வெட்டுப்படாதவாறு ஆடுகளை வைத்து நகர்த்தி புலியை சிறை பிடிக்க வேண்டும். ஆடுகள் எல்லாம் வெட்டப்பட்டால் புலி வென்றதாககும். புலியை நகரவிடாமல் மறித்தால் ஆடு வென்றதாகும். ஆட்டத்தின் தொடக்கத்தில் முன்று புலிகளும் களத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆடாக நீங்கள் விரும்பிய சந்திகளில் களமிறக்கலாம். ஆடு,புலி என மாறி காய்கள் நகர்த்த வேண்டும்
ஆடுபுலி ஆட்டத்தின் ரூல்ஸ் என்று கேட்டால்,
1)புலியும் ஆடும் நான்கு புறத்திலும் ஒரு கட்டம் தான் நகரும். ஆனால் புலி தனக்கு அருகில் ஒரு ஆடும் அதற்கு அடுத்த சந்தி காலியாகவும் இருந்தால் ஆட்டை வெட்டிவிட்டு இரண்டு கட்டம் நகரும்.
2) ஓரங்களில் உள்ள ஆட்டை புலியால் வெட்டமுடியாது காரணம் புலி வெட்ட வேண்டுமானால் புலி-ஆடு-காலிஇடம் என்று வரிசையில் இருந்தால் மட்டுமே வெட்டமுடியும். புலி-ஆடு-ஆடு என்று இருந்தால் புலியால் வெட்டமுடியாது.
3)புலியை மடக்க மிகக் குறைந்த பட்சம் எட்டு ஆடுகளாவது வேண்டும். அதற்கு குறைவான ஆடு களத்தில் இருந்தாலும் ஆடு தோற்றதாகவே கருதப்படும். 11 ஆடுகளுக்குக் கீழ் குறைந்தாலே வெல்வது கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடிப்பாருங்கள் ஆலோசனைகள் இருந்தாலும் தாருங்கள்
Game Starts..
ஹஹ! சூப்பரு!
ReplyDeleteரம்மியும்,ஆடுபுலி ஆட்டமும் எனக்கு கைவராத கலைகள்.இருந்தும் ஆடுகளத்தில் இப்பொழுதும் ஒரு கண்.
ReplyDeleteமனுசனும் மனுசனும்தான் நிஜமாவே ஆடுறாங்களே!நான் கணினியுடனே ஆடுகிறேன்.அதுதான் ரத்தம் சிந்த வைக்காமல் இருக்கும்.
ReplyDeleteநீச்சல்காரரே!நம்ம ஆட்கள் பதிவில் கெடா வெட்டுவதை விட இங்கே வந்து ஆடலாம்.வெல்வது என்னவோ புலிகளே!
ReplyDeleteநல்ல ஆட்டம்.. ஆனால், தரையில் கோடு போட்டு ஆடுவதற்கு இணையத்தில் ஆடுவது இணையாகாது!
ReplyDeleteநிச்சயம். ஓரளவிற்குதான் இணையத்தில் அதன் சாரத்தை பெறமுடியும்
Delete
ReplyDelete"நல்லா தான் இருக்கு ஆட்டம் ! ஜோர் ! வாழ்த்துக்கள் ! அப்படியே நம்ம சைடும் வந்து போங்க !"
நல்ல முயற்சி,
ReplyDeleteI've shared the link in some of my puzzle groups.
Pls add Human(puli)Vs Comp(Aadu) also
ReplyDelete
ReplyDeleteஆடு புலி ஆட்டம் விளையாட்டு , சுவாரஸ்யம் நிறைந்த ஒரு விளையாட்டு.
தமிழர் விளையாட்டான இந்த ஆடு புலி ஆட்டம் (Goats or Tigers) விளையாட்டு செயலியை முழுக்க 3டி உருவாக்கத்தில் நீங்கள் விளையாட முடியும்.
www.manam.online/Technology/2016-AUG-21/Goats-or-Tigers-App-review
ஆட்டத்தை ஆடு. புலியுடன் ஆடு. போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு.ஆடுகள் மோதட்டும் புலியோடு.
ReplyDelete