Mobile version | RSS Feed |
புதியவை
Loading...

தமிழ்க் கீச்சுகளில் அதிக பிரபலமான கீச்சுகளைத் தொகுத்துத் தரும் (அதாவது ரீடிவிட் மூலம்) RT_tamil, (தமிழ்க்கீச்சு) என்கிற டிவிட்டர் தானியங்கி(BOT) பற்றிய தகவல்கள்

உருவான விதம்:
எல்லாக் கீச்சுகளைத் தொகுப்பதும் படிப்பதும் அயர்ச்சியான ஒருவிசயம். ஒரு நிமிடத்திற்கு சுமார் இருநூறு கீச்சுகள் வெளிவரும் போது அதனை எல்லாம் படிப்பதும் சாத்தியமற்றது. அதே நேரத்தில் உலகில் பலரால் ரசிக்கப்படும் கீச்சுகள் வந்து கொண்டேதான் இருக்கிறது. எனவே தானியங்கி மூலம் மறுகீச்சு/விருப்பமாகிக் கொண்ட கீச்சுகளைச் சேகரிப்பதால் சிறந்த தொகுப்பை உருவாக்கி வாசகருக்கு அளிக்கலாம் என்று நம்பப்பட்டது. ஆனால் RT அல்லது fav என்கிற அளவுகோள்களால் மட்டும் சிறந்த கீச்சுகளை அடையாளப்படுத்த முடியாது என்கிற காரணத்தால் பிரபல கீச்சுகளில் தொகுப்பு என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு முடிந்தளவு சிறந்த கீச்சுகளை தானியக்கத்தில் கொண்டு தருகிறது.


எப்படி இயங்குகிறது?
டிவிட்டர் மற்றும் கூகுளின் தொழிற்நுட்ப உதவியுடன் தமிழ் ஒருங்குறியுடன் வெளிவரும் கீச்சுகளை எல்லாம் கீழுள்ள விதிகளின் படி தணிக்கை செய்து, அதிக மக்களால் விரும்பப்பட்ட கீச்சுகளை அடையாளம் கண்டு மறுகீச்சுயிடுகிறது.
  • கடந்த 48 மணிக்குள் கீச்சப்பட்டவையாக இருக்க வேண்டும்.
  • கீச்சுகளில் பிற ஒருங்குறியைவிட தமிழ் ஒருங்குறி 50%க்கு மேல் இருக்க வேண்டும்.(அதாவது அதிக பிறயெழுத்துக்கள் அல்லாத தமிழ்க் கீச்சு)
  • அவை குறைந்தது நான்கு வெவ்வேறு நபர்களால் விரும்பப்பட்டிருக்க வேண்டும்.
  • பொதுவாகவே பிரபலங்கள் எது கீச்சினாலும் உடனே பலரால் மறுகீச்சப்படும் என்கிற காரணத்தால் அரசியல், சினிமா பிரபலங்களின் அத்துறைச் சார்ந்த கீச்சுகளைத் தவிற்க முயல்கிறது.
  • இணைய செய்தி ஊடகங்கள், இணையத்தள விளம்பரக் கீச்சுகள் போன்றவை பொதுவாக வணிகரீதியானவையாகையால் அவையும் தவிற்க முயல்கிறது
  • நச்சுக் கணக்குகள்(spam), பொதுவில் வைக்கமுடியாத கணக்குகள் போன்றவை நீக்கப்படுகிறது.
  • பலருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டியும், சொந்தக் கீச்சுகளுக்கு முன்னுரிமை வழங்கவும், தானியக்கத்தில் முடிந்த சில சோதனைகளும் உண்டு

மேல்கொண்ட விதிகளின் நோக்கம் சிறந்த, சுவாரசிய, சூடான, ரசிக்கும் படியான கீச்சுகளைப் எச்சார்புமின்றி தொகுப்பதேயன்றி யாரையும் புறக்கணிக்கும் நோக்கமல்ல. ஆனால் எல்லையில்லாத டிவிட்களை அலசும் போது சில நல்ல கீச்சுகள் விடுபடவும் வாய்ப்புள்ளது.


எப்படி படிப்பது?
நேரடியாக http://twitter.com/RT_tamil என்ற முகவரிக்குச் சென்று டிவிட்டர் கணக்கே இல்லாமலும் படிக்கலாம். அல்லது உங்கள் டிவிட் கணக்கில் இருந்து பின்தொடர்ந்து படிக்கலாம். அல்லது கீழ்கண்ட நிரல்களை உங்கள் இணையத்தளத்தில் இணைத்துப் படிக்கலாம்.


<a class="twitter-timeline" href="https://twitter.com/RT_tamil" data-widget-id="362866475784089600">Tweets by @RT_tamil</a> <script>!function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0],p=/^http:/.test(d.location)?'http':'https';if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=p+"://platform.twitter.com/widgets.js";fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,"script","twitter-wjs");</script>

மேலும் தினமும் பிரபலமான பத்து கீச்சுகளைப் படிக்க இங்கு செல்லலாம். http://twit.neechalkaran.com
எப்படி புது டிவிட்டர் கணக்கை இணைப்பது?
பொதுவாக பிரபலமான கீச்சு என்று சொல்லப்படுவதால் நீங்கள் இணைய வேண்டியது கட்டாயமில்லை. உங்கள் கீச்சுகள் மற்றவர்கள் மூலமும் இத்தானியங்கிக்கு வந்து சேரும். உங்கள் கீச்சு கணக்கை இணைக்க RT_tamil என்ற கணக்கைப் பின்தொடரலாம், சில மணிநேரத்தில் உங்கள் கணக்கு தானியக்கதில் சேர்த்துக் கொள்ளப்படும். அல்லது எனக்கு மின்னஞ்சல் செய்யலாம் சில நாட்களில் உங்கள் கணக்கு தானியக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படும். அல்லது தொடர்ந்து தமிழில் எழுதிவந்தால் இதன் தானியக்கத் தேடலிலும் கண்டுபிடிக்கப்பட்டு சில மாதங்களில் சேர்க்கப்படலாம்.

உதவி:
உங்களுக்குப் பிடிக்காத சில விஷயங்கள் இதில் இருக்கலாம், மிகவும் பிடித்த விஷயங்கள் இருக்கலாம், புதிய யோசனைகளாகவும் இருக்கலாம், தானியக்கத்தின் பிழையாகவும் இருக்கலாம் அனைத்தும் தானியக்கத்தில் சாத்தியமில்லாவிட்டாலும் கவனத்திற்குக் கொண்டுவர நிறை, குறை ஆலோசனைகளை வலைத்தளத்திலோ, டிவிட்டரிலோ அல்லது மின்னஞ்சலிலோ வழங்கி உதவுங்கள்.

பொறுப்புத் துறப்பு:
RT_tamil என்ற கணக்கில் வெளிவரும் மறுகீச்சுகள் அனைத்தும் அந்தந்தக் கீச்சாளருக்கே சொந்தம்; RT_tamil போட நினைப்பது வாசகருக்கும் கீச்சாளருக்கும் பந்தம்.

அன்புடன்,
@neechalkaran

0 comments: