எப்படித் தேடுவதென்ற சில யோசனைகளைப் பகிர்கிறேன்.
- ஆங்கிலத்தில் தேடும் பொழுது "a", "the", "an" போன்ற எழுத்துக்கள் தவிர்க்கவும்
- எழுத்துப் பிழையற்ற சரியானச் சொற்களைப் போட்டுத்தேடவும்
- தேடும் பொழுது +,|,-," போன்ற கணினி குறிகளைப் பயன்படுத்துங்கள்.
- தேடுதலை செழுமைபடுத்த filetype, site, info போன்ற கட்டளைகளுடன் கொடுத்து கூர்மையான பதிலை பெறலாம்.
இப்போது விளக்கம்:
இரண்டு சொற்களை ஒரே நேரத்தில் தேட வேண்டுமா!
+ இரண்டு சொற்களுக்கிடையே இந்த கூட்டல் குறியைப் போட்டுத்தேடினால் இரண்டு சொற்களும் கொண்ட விடையைத்தான் முதலில் தரும் .
ஆசியாவை தேடவேண்டும் ஆனால் பாகிஸ்தான் பற்றி தேடக்கூடாதா!
- இரண்டு சொற்களுக்கிடையே இந்த கழித்தல் குறியைப் போட்டுத்தேடினால் அந்த சொல்லைத்தவிர்த்து விடைகளைத் தரும்
கவிதைகள் அல்லது கதைகள் மட்டும் தேடவேண்டுமா!
| என்ற அல்லது குறியை {பொதுவாக என்டர் பட்டனுக்கு மேலேயிருக்கும்} இரண்டு சொற்களு க்கிடையே பயன்படுத்தினால் இரண்டில் ஏதேனும் ஒரு சொல் இருந்தாலும் அந்த பக்கத்தை விடையாகத்ததரும்.
ஒரு வாக்கியத்தை அப்படியே தேட வேண்டுமா?
"" என்ற மேற்குறிகளுக்குள் நாம் சில சொற்களையிட்டுத் தேடினால் அந்தசொற்களை அப்படியே தேடும்
//intitle:பழைய டைரி// என்று போட்டால் இந்த வாசகம் தலைப்புக்களில் இருக்கிறதாவென்று தேடும்.
//allintitle:// என்பது இதன் பன்மைக் கட்டளை அதிகமான சொற்கள் தேடும் பொழுது இதைபயன்படுத்தலாம்
//intext:பழைய டைரி// என்று போட்டால் இந்த வாசகம் செய்திகளில் இருக்கிறதாவென்றும் தேடும்.
//allintext:// என்பது இதன் பன்மைக் கட்டளை எனக்கொள்ளலாம்.
//inurl:பழைய டைரி// இவை தளத்தின் முகவரியில் மட்டும் தேட
//allinurl:// என்பது இதன் பன்மைக் கட்டளை எனக்கொள்ளலாம்.
site: என்பது தேவையான ஒரு கட்டளை. ஒரு குறிப்பிட்ட தளத்தில் மட்டும் தேட இதை பயன்படுத்தலாம். 'site:தளமுகவரி' என்று போட்டு அதன் பிறகு கேள்வியைப் போட்டால் அந்த தளத்தை மட்டும் தேடும்
உதா: //site:vannitec.blogspot.com மென்பொருட்கள்// இது மென்பொருட்கள் பற்றி அந்த தளத்தில் மட்டும் தேடும்
link: என்பது அந்த தளத்திற்கு யாரெல்லாம் இணைப்பு கொடுத்துள்ளனர் என கண்டுபிடிக்கலாம்
உதா: //link:suduthanni.blogspot. com// என்றால் அந்த தளத்திற்கு இணைப்பு கொடுத்த தளங்களை விடையாகத் தரும்
related: என்பதைப் பயன் படுத்தினால் அந்த தளத்திற்கு இணையான வேறு தளங்களைக் காட்டும்
உதா: //related:vikatan.com// என்றுயிட்டால் குமுதம், தினமலர், நக்கீரன் போன்ற தளங்களைக்காட்டும்
filetype: என்பதைப்பயன்படுத்தி நாம் நமக்குத் தேவையான கோப்புக்களை தேடலாம்
உதா: jpeg கோப்பாக தேட //filetype:jpeg// என்று உங்கள் கேள்வியுடன் கொடுத்தால் பதில்களெல்லாம் jpeg தான்
info: என்று கொடுத்து ஒரு தளத்தைக்கொடுத்தால் அதனுடைய பலதகவல்களைத்தரும்
உதா: //info:tvs50.blogspot.com// என்றால் அந்த தளம் பற்றி கூகிள் சேமித்துவைத்துள்ள cache, கூகிள் கொண்டுள்ள அனைத்து லிங்க், மற்றும் பல தகவலை மொத்தமாகத்தரும்
மேலும் சில கட்டளைகள் கொஞ்சம் தொழிற்நுட்பம் சார்ந்தவை
cache: என்பதை பயன் படுத்தி அழிந்த பக்கங்களின் தகவல்களை குறிப்பிட்ட காலம் வரை பெறலாம்.
inanchor:
linlink:
datarange:
author:
group:
போன்றவைகளை பயன்படுத்தி இன்னும் சிறப்பாக தேடலாம்.
இப்பொது சில கேள்விகள்:
ஒரு தளத்தில் உள்ள jpg படக்கோப்புகளை மட்டும் தேடவேண்டுமானால் என்ன செய்வது?
//site:neechalkaran.blogspot.com filetype:jpg// (உங்கள் தளமுகவரியை இட்டுக்கொள்ளவும்) என்று கூகிள் இமேஜில் போட்டால் போதும்.
ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு இனைப்பு கொடுக்கப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?
//site:ethirneechal.blogspot.com "google.com"// (உங்கள் தளமுகவரியை இட்டுக்கொள்ளவும்) என்று போட்டால் கூகிள் இணைப்பு எங்கெல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது என அறியலாம்.
ஒரு நபரைப்பற்றி ஒரு சில தளங்கள் நீங்கலாக தேடுவது எப்படி?
//abdul kalam -site:twitter.com -site:wikipedia.org// என்று இட்டால் அந்த தளங்களிலிருந்து விடைகள் வராது.
உங்கள் கேள்விகளிருந்தால் கேளுங்கள் முடிந்த வரை முயலுகிறேன்.
பயனுள்ள குறிப்புகள். தேடுபொறிகளைத் திறம்பட பயன்படுத்துவது குறித்த பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தபடும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று தோன்றுகிறது :).
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் :)
நல்ல தகவல் நன்றி
ReplyDeleteசுடுதண்ணி,
ReplyDeleteவரவுக்கு நன்றி
தோழி,
வரவுக்கு நன்றி
மிக மிக பயனுள்ள தகவல்கள்!
ReplyDeleteவால்பையன்,
ReplyDeleteஊக்கம்தரும் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்