Pages - Menu

Tuesday, April 13, 2010

சித்திரை முதல் BUZZஷையும் ஒட்டலாம்



இணைய வளையத்தில் கூகிளின் பஷ்ஷும் ஒரு பகிர்ந்துக்கொள்ளக் கூடிய  தளமாக மாறியிருப்பது அதன் மேல் கொண்டுள்ள ஆர்வத்தைக்காட்டுகிறது. https://mail.google.com/mail/#settings/buzz  ஒரு கட்டுப்பாட்டை மேன்படுத்தியதிலிருந்து பஷ்ஷின் பாதுகாப்பு வளையம் அதிகரிக்கத் தொடங்கியது. வளர்ச்சியின் அடுத்தக்கட்டமாக இணையதளங்களுக்கும், வலைப்பூக்களுக்கும் தனது பகிர்வுப் பட்டையை (சித்திரை இன்று பிறக்கிறதால்)நேற்றிலிருந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை நமது வலைப்பூவிலும் இணைத்து ஒட்டிக்கொள்ளலாம். 


சரி இந்த பகிர்வுப்  பட்டை எதற்கு? பொதுவாக நமக்கு பிடித்தமான செய்திகளையோ பதிவையோ பஷ்ஷில் பகிர்ந்துக் கொள்கிறோம், எப்படி என்றால், அந்த தள முகவரியை நிரலெடுத்து நமது பஷ்ஷில் இட்டு பகிர்கிறோம். இந்தப் பகிர்வுப் பட்டையின் மூலம் அந்து தானாகவே அரங்கேறும், மேலும் பகிர்ந்தப்பக்கத்திலும் ஒரு மதிப்பும் கூடும். இதன் மூலம் எழுதியவருக்கும் ஒரு உற்சாகம். தற்போதுள்ள பல பகிர்வுப் பட்டைகளைப் போல இதுவும் கையாளுவது சுலபம் அதனால் பேஷ்புக், டிவிட்டரைப் போல பஷ்ஷும் சந்தைக்கு வந்துவிட்டது.


  Share this,  Add to any,  add this போன்றக் கூட்டுப் பகிர்வு பட்டையிலும் பஷ் இணைந்துவிட்டது. அதனால் அந்த கூட்டுப் பகிர்வு பட்டையுள்ள தளங்களில் தானாக பஷ் ஒட்டிவிட்டது. அந்த வகைப் பட்டைகளில்லாத தளங்களும் பஷ்ஷை மட்டும் இணைத்துக்கொள்ளவும் நிரலிகள் வழங்கப்பட்டுள்ளன.

தேவையானவர்கள் தங்கள் தளத்தில் இணைத்துக்கொள்ளலாம். தேவைபுரிந்தவர்கள் விருப்பமான பதிவுகளை பஷ்ஷில் எளிதாகப் பகிரலாம்.
இதில் முன்று வகைப் பட்டைகளைப் பெறலாம்.


என்று தானாக பஷ்ஷில் தேவையான தள முகவரியுடன் இணைப்பும் வந்துவிடும்.




அதனுடன் சித்திரை முதல் நாளிலிருந்து தமிழ்ப் புள்ளி திரட்டியும் நேரடி பயன்பாட்டுக்குவருகிறது.



கூடிய அளவு அனைத்து பிரதானத் திரட்டிகளும் இணைக்கப்பட்டுவிட்டது. ஜாவாநிரலியும், பிரேம் வசதியும் கொண்ட பிரதான உலாவிகளால் இதை முழுமையாகப் பயன்படுத்தலாம் எனற மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொண்டு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


3 comments:

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete

"கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
உங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது