Pages - Menu

Wednesday, June 23, 2010

தமிழ் அகராதிகள் / அகரமுதலிகள் [Tamil Dictionary]

இன்று தமிழ்ச் சொற்களுக்கும் மற்றும் பிற மொழி சொற்களுக்கும் இணையான தமிழ்ச் சொற்கள் அறிய இணைய ஊடகங்களால சாத்தியப்படும் வசதிகளைப் பார்ப்போம். 

ஒரு மொழிக்கு அகராதி என்பது இன்றியமையாதவொன்று அவ்வகையில் பரந்த தமிழுக்கு இணையவுலகில் அகராதிகளுக்குப் பஞ்சமில்லை எனலாம். ஆனால் நம் மக்கள் அனைவரிடத்திலும் அது போய்ச் சேர்ந்துள்ளதா? என்கிற கேள்விகள் செயலிழந்து போக இந்தப்பதிவைப் பதிவு செய்கிறேன். தெரிந்தவர்களுக்கெல்லாம் தெரியப்படுத்துங்கள்.

பீட்டா வடிவமைப்புடன் அழகு தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் விளக்கம் கொடுக்கிறது. புதியவர்களுக்காக உச்சரிப்பு குறிப்பையும் கொடுத்து பயனளிக்கிறது.
திறந்த உள்ளடக்க அகரமுதலி. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழி விளக்கமும் அதனுடைய இணைப்புச் சுட்டியும் தருவதால் மிகுந்த தெளிவு பெறலாம்.


தெற்காசிய மின்னணு நூலகம் என்கிற அமைப்பின் கீழ் மொத்தம் ஐந்து வகையான அகராதிகளைத் தருகிறது. 
இந்த தளத்தின் மூலம் சரியான தமிழ் பதத்தை அறியலாம். ஆங்கிலச் சொற்களும் தமிழ்ச் சொற்களும்  தமிழ்ப் பதத்தைத் தேடலாம். இவை தெளிவாக ஒரு சொல்லைப் பற்றிய அறியவும் அது சார்ந்த மற்றச் சொற்களை அறியவும் செய்வதால் ஆராய்ச்சி மாணக்களுக்கும் மிகுந்த பயன் தரும்.

அகராதி உலகின் தனி சாம்ராஜ்யம் நடத்தும் லிப்கோ பதிப்பகமும் இணைய வழியில் தமிழ் அகராதி சேவையைத் தருகிறது. மிகவும் தெளிந்த விளக்கமாக திரட்டித் தருகிறது, பழமையானச் சொற்களுக்கும்  விளக்கம் இங்கே கிடைக்கும்.

தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் இணைப்பாக உள்ள இந்த தளம் நான்கு வகை தமிழ் அகராதி வசதிகளைத் தருகிறது. இதன் எழுத்துருக்கள் யுனிக் கோட்டில் இல்லாததால் பெரும்பான்மையான கணினியில்  எழுத்துருக்களைத் தரவிறக்கிப் பயன்படுத்தும்மாறு உள்ளது. தமிழ் தட்டச்சு செய்யும் வசதியுள்ளதால் இதைப் பயன்படுத்த மற்ற மொழியாக்கக் கருவிகள் தேவையில்லை.

http://www.tamildict.com/ [அங்கிலம்-தமிழ்]
http://www.tamildict.com/tamilsearch.php?language=tamil [தமிழ்-ஆங்கிலம்] 
ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மொழிகளிலிருந்து தமிழ் சொற்களுக்கானப் பொருளைத் தேடலாம் மற்றும் தமிழுக்கு இணையான அம்மொழிச் சொற்களையும் பெறலாம். குறிப்பிடும் படியாக இந்த தளத்தில் பயனர்களும் அகராதியில் இல்லாத சொற்களுக்கு தகுந்த விளக்கம் கொடுக்கலாம், அதனால் இத்தளம் நாளும் வளர்வது கண்கூடு.

http://www.searchko.in/tamil-english-dictionary.jsp
தேடிக்கோ என்கிற பொருள் பதத்தில் அமைந்துள்ள இந்த தளம் ஆங்கிலம் மற்றும் தமிழ் சொற்களுக்கு விளக்கம் தருகிறது. நேரடியாகவே தமிழில் தட்டச்சு செய்து வேண்டிய சொற்களை சர்வ சாதாரணமாகத் தேடிக்கொள்ளலாம். கூடுதலாக சில செய்தி வசதியும், இலக்கியத் தேடல் வசதியும் தருகிறது. குறிப்பாக எழுத்து பிழைகளை திருத்தும் சோதிப்பு வசதியையும் தருகிறது.

இதுவொரு அற்புதமான தளம். உலகிலுள்ள பிரதான மொழிகள் பலவற்றிற்கு இணையான தமிழ்ச் சொற்களை தருகிறது. ஏறக்குறைய 80 மொழிகள் மட்டும் கொண்டுள்ள இந்த தளத்தில் தமிழும் உள்ளது. தமிழ்ச் சொற்களுக்கு இணையான வேற்று மொழிச் சொற்களும் நமக்குத் தருகிறது. புதியதாக தமிழ் கற்பவர்கள் இந்த அகராதியைக் கையோடு எடுத்துச் செல்லவேண்டும்.

ஆங்கிலம்-தமிழ் மற்றும் தமிழ்-ஆங்கிலம் என இரண்டு வசதிகளையும் தருவதால் சிறப்பாக உள்ள தளம். அகராதியைப் பொருத்திக் கொள்ளும் வசதியையும் தருகிறது.

உச்சரிப்புச் சுத்தத்தோடு உங்களுக்கு ஒரு விளக்கம் வேண்டுமானால் இந்த அகராதி பயன்தரும். ஆங்கிலச் சொற்களுக்கு தமிழ் மற்றும் சிங்களத்தில் விளக்கம் தருகிறது.

ஒரு எளிமையான ஆங்கில-தமிழ் அகராதி. ஏறத்தாழ 50,000 உள்ளீடுகள் கொண்ட இது தமிழ் வழியில் ஆங்கில அறிவு சுத்தம் பெற உதவும்.

http://agarathi.com/index.php
தமிழ்ச் சொற்களுக்கு விரிவான ஆங்கிலம் மற்றும் தமிழ் விளக்கம் தரும் எளிய அகராதி.

http://www.agaraathi.com/
புதுமையான வகையில் நாமே சொற்களை உள்ளீடு செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. விரைவாக வளர்ந்துவரும் இந்த அகராதிக்கு நாமும் கை கொடுப்பது விரும்பத்தக்கதாகும்.

எனக்குத் தமிழ்ப் படிக்கத் தெரியாது ஆனால் பேசுவேன் என்பவர்களுக்கான ஒரு தளம் இதில் ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ப் பதத்தை ஆங்கில எழுத்துக்காளால் தருகிறது. தரவிறக்கும் வசதியையும் தருகிறது. புதியவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய தளம்.

முக்கியமான மற்றும் பிரதான ஆங்கிலச் சொற்களுக்கு ஒத்த தமிழ்ச் சொற்களைக் கொண்ட விளக்க பட்டியலாகக் கொண்டுள்ளது. தரவிறக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

ஆங்கிலச் சொற்களுக்கு எளிமையாக பதிலளிக்கும் ஒரு அகராதி, மற்றும் சில இந்தியா மொழிகளிலும் இவ்வசதியைத் தருகிறது. 

இதர அகராதி சேவை

தரவிறக்கும் வகையான மென்பொருள் அகராதிகள் [இலவச]
தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிக்கும் விளக்கம் தரும் இது பழனியப்பா சகோதரர்களால தொகுக்கப்பட்ட அகராதி - பால்ஸ் அகராதி. இந்த தொகுப்பு அதிகமானோரின் கணினியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விளக்கங்களும் தரவிறக்க குறிப்பும் இந்த தளத்திலேயே உள்ளது.  

இது தரவிறக்கிப் பயன்படும் படியான மென்பொருளைத் தருகிறது. ஆங்கிலம்-தமிழ் மற்றும் தமிழ்-ஆங்கிலம் என இருவகையிலும் உள்ளது.

இது தரவிறக்கிப் பயன்படும் படியான மென்பொருளைத் தருகிறது. விண்டோஸ் கணினிகளுக்கான இருமொழி அகராதி. விளக்கங்களும், படங்களும் உள்ளன.


[மேலும் தளங்கள் விடுபட்டாலும், புதிய தளங்கள் உருவானாலும் கண்டிப்பாக இங்கே தெரிவியுங்கள்]

நமது தளம் சார்பாகத் தயாரிக்கப்பட்ட http://dev.neechalkaran.com/p/dictionary.html என்ற ஒருங்கிணைந்த அகராதியும் உள்ளது புக்மார்க்/சேமிக்க மறக்காதீர்கள்

மேலும் தொடர்புடைய இடுகை:
தமிழ் மென்பொருட்கள்
வலைதளத்தில் அகராதிகளை இணைத்துக்கொள்ள கட்ஜெட்கள்

28 comments:

  1. மேலும் இரண்டு உபயோகமான அகராதிகள்:

    http://www.agaraadhi.com/

    http://crea.in/dictionary.html

    ReplyDelete
  2. @ வீ.புஷ்பராஜ்,
    அற்புதமான இரண்டு தளத்தை காட்டியுள்ளதற்கு மிக்க நன்றிகள்.
    இந்த தளங்களை இணைத்துவிட்டேன்.

    ReplyDelete
  3. Good collections

    ReplyDelete
  4. மிக மிக உபயோகமான தகவல்கள் நன்றி ...

    ReplyDelete
  5. எனக்கு மிகவும் பயனுள்ள ஒன்று சகோதரா.
    mathisutha.blogspot.com

    ReplyDelete
  6. கே.ஆர்.பி.செந்தில்,
    soundr,
    sutha
    உங்கள் ஊக்கத்திற்கு நன்றிகள் தொடந்து வாருங்கள்.

    ReplyDelete
  7. nandri
    Thanakku nalladai adutthavanukkum ninaippavan thaan manidhan
    Proceed with theese kind of information to all
    Once again thanks and regards
    Maricar,Nagore

    ReplyDelete
  8. Thanks for sharing your useful informations with us. If there is any English to English downloadable dictionary with example sentences (like Advanced Deluxe Dictionary, then pls inform to us. It would be very useful.

    ReplyDelete
  9. @இராஜகிரியார்,
    Here you can find plenty of downloadable dictionaries http://www.dicts.info/offline2.php
    and http://wordweb.info/free/ is the best of my knowledge

    ReplyDelete
  10. Thank you so much sir. GOD may bless you for your help and social service.

    ReplyDelete
  11. மேலுமொரு புதிய அகராதி புதுமையான முறைலில்.
    http://www.agaraathi.com
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. மிகவும் அருமையான முயற்சி பாராட்டுக்கள்

    ReplyDelete
  13. @தனா //மேலுமொரு புதிய அகராதி புதுமையான முறைலில்.
    http://www.agaraathi.com
    வாழ்த்துக்கள்//
    நன்றி தளத்தையும் இணைத்துவிட்டேன்.

    @தமிழ்த்தோட்டம் வாங்க, மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  14. சார் மேலும் ஒரு தளம் உள்ளது
    http://www.dictionary.tamilcube.com/
    தங்கள் இந்த முயற்சி அருமை.

    ReplyDelete
  15. @எஸ்.கே உங்கள் ஆர்வத்திற்கு நன்றிகள் நண்பரே! அந்த தளத்தை முன்பே இணைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  16. மிக மிக நன்றி நண்பரே
    P.Sermuga pandian

    ReplyDelete
  17. நல்ல பதிவு. தேவையான தகவல்களைத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  18. ம்ம் உண்மைதாங்க தமிழ் நாட்டுல தமிழ்ல பேச வெக்க படுறாங்க இதவிட தை மொழி தமிழ் அத பேசுங்கன அதும் தெரில வேதனையா இருக்கு நாம தமிழர் தான

    ReplyDelete
  19. ம்ம் உண்மைதாங்க தமிழ் நாட்டுல தமிழ்ல பேச வெக்க படுறாங்க இதவிட தை மொழி தமிழ் அத பேசுங்கன அதும் தெரில வேதனையா இருக்கு நாம தமிழர் தான

    ReplyDelete
  20. ம்ம் உண்மைதாங்க தமிழ் நாட்டுல தமிழ்ல பேச வெக்க படுறாங்க இதவிட தை மொழி தமிழ் அத பேசுங்கன அதும் தெரில வேதனையா இருக்கு நாம தமிழர் தான

    ReplyDelete
  21. ம்ம் உண்மைதாங்க தமிழ் நாட்டுல தமிழ்ல பேச வெக்க படுறாங்க இதவிட தாய் மொழி தமிழ் அத பேசுங்கன அதும் தெரில வேதனையா இருக்கு நாம தமிழர் தான

    ReplyDelete
  22. பழனியப்பா அகராதியினை விண்டோஸ் 7 ல் நிறுவ முடியவில்லை. எழுத்துரு பிரச்சனை என்று பிழைச் செய்தி வருகின்றதே!

    நன்றி

    ReplyDelete
  23. ரொம்ப நல்ல வேலை செய்தீர்கள்! அருமை! எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

    ReplyDelete
  24. மிக பயனுள்ள தகவல் நன்றி

    ReplyDelete
  25. நல்ல முயற்சி

    ReplyDelete
  26. http://www.viruba.com/Nigandu/Chintamani_Nigandu.aspx

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete

"கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
உங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது