Pages - Menu

Friday, July 2, 2010

டாட் டிப்ஸ் (ஆனி 19)

டாக்ஸின் புது வசதி
பி.டி.எப். கோப்புக்களை எளிதில் டெக்ஸ்ட் வடிவில் மாற்றும் வசதியை கூகிள் டாக்ஸ் கடந்த வாரம் அறிமுகப் படுத்தியுள்ளது. தரவேற்றிய பி.டி.எப். கோப்பை அப்படியே சில நொடிகளில் எழுத்துக்களாக பிரித்து தனது பெட்டகத்திலே சேமித்து வைக்கிறது. வேண்டுமானால் எடுத்தும் அல்லது மற்றவருடன் பகிர்ந்தும் கொள்ளலாம். OCR தொழிற்நுட்பத்தில் இந்த வசதியைத் தருவதால் ஆங்கிலக் கோப்புகளை சிறப்பாக மாற்றுகிறது ஆனால் தமிழ் கோப்புக்களை பிழையுடன் மாற்றியமைக்கிறது. முக்கியமாக படங்கள் உள்ள பகுதியைத் தவிர மற்ற பி.டி.எப் வரிகளை எழுத்து வடிவமாக்குகிறது. கூகிள் டாக்ஸ் சென்று ,upload மற்றும் file செலக்ட் செய்யவும்.



பிறகு மறக்காமல் convert text from pdf என்ற இடத்தை தேர்வு செய்து பிறகு தரவேற்றவும். உங்கள் பக்கம் தானாக டாக்ஸில் text வடிவில் சேமிக்கப்பட்டுவிடும்


அடையாள இலக்கம்
உங்கள் கைபேசியின் அடையாள இலக்கம் தெரியுமா? எப்படி சிம் கார்டுக்கென IMSI எண்வுள்ளதோ அதைப் போல உங்கள் கைபேசி சாதனத்திற்கும் IMEI (International Mobile Equipment Identity சுருக்கமாக IMEI)  என்ற பிரதேக எண் உள்ளது இந்த எண் மூலமாக உங்கள் கைபேசி தொலைந்தால் உடனே தடுக்க முடியும் முடிந்தால் மீட்கவும் முடியும். கட்டாயம் இதை குறித்துவையுங்கள். பொதுவாக நோக்கிய முதற்கொண்டு சாதனங்களின் எண்ணைப் பெற *#06# என்ற குறியீடைத் தட்டினால் எளிதில் பெறலாம். மேலும் சில ரகசிய உபரி தகவல்களைப் பெற தகுந்த எண்கள் சாதனங்கள் வாரியாக இங்கே உள்ளது. 

பதிவர்களுக்கு

நேற்றுயிருந்து வேர்ட்பிரஸ் போல ப்ளாக்கரும் தளத்தின் புள்ளிவிவரக் கணக்கை இலவசமாக கணக்கிட்டுத் தருகிறது. அனேகமாக நுழையும் http://www.blogger.com/ தளத்திற்குப் பதில் http://draft.blogger.com/ல் நுழையுங்கள். தேவைப் பட்டால் இந்த முகவரியை நிரந்தரமாக்க படத்தில் உள்ளது போல இதை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். stats இணைப்பில் சென்றால் உங்கள் தளத்தின் போக்குவரத்துத் தெரியும் பதிவுவாரியாகவும், பரிந்துரைவாரியாகவும், வாசகர்வாரியாகவும் செம்மையாக காட்டுகிறது. இதைப் பெற எந்தவிதக் கூடுதல் நிரலிகளைச் சேர்க்க வேண்டியில்லாததாலும், இதற்கு முன கூகிள் தந்த ஆமை வேக  http://www.google.com/analytics/ கிற்கு மாற்றாகவும் இது அமைவதால் மகிழ்ச்சியே!

கடவுச்சொல் துலாபாரம் 
உங்கள் கடவுச் சொல்[password] எவ்வளவு வலிமையானது என்று கணித்ததுண்டா? அது வலிமையானது என்று மட்டும் தெரியும் ஆனால் எவ்வளவு வலிமை என்று தெரியாது என்பவர்கள் இந்த தளத்தில் சோதித்துப் பார்க்கலாம். உங்கள் பயனர் பெயர் போன்ற எந்த வித குறிப்பும் கேட்காததால் நம்பிப் பயன்படுத்திச் சோதிக்கலாம். மேலும் எப்படியெல்லாம் கடினமாக கடவுச் சொல்லை வைக்கலாம் என்றும் ஒரு வியாக்கியானமே தந்துள்ளது. சில சமயம் நாம் தரும் சொற்கள் மிகவும் பரவால பயன்படுத்தப்படுகிறது எனவும் சுட்டிக் காட்டத் தவறுவதில்லை உ.தா.1234 . எல்லா இடத்திலும் பயன்படுத்தாவிட்டாலும் முக்கியமான கணக்குகளுக்காவது கடினமான கடவுச்சொற்கள் வைப்பது அவசியம் தானே!

4 comments:

  1. உபயோகமாக இருந்தது..

    ReplyDelete
  2. hi,
    see the link

    http://alturl.com/rwty

    ReplyDelete
  3. நன்றி... எப்புடி இதெல்லாம்???

    ReplyDelete
  4. கூகுள் ஸ்டேட்ஸ் அறிமுகத்துக்கு நன்றி தல...

    ReplyDelete

"கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
உங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது