ஒரு க்ளிக் அரிசித் திட்டம்-ஒன்றாகப் பொட்டித்தட்டலாம்-படங்கள் விரும்பும் பேஸ்புக் பயனாரா?-லேட்டெஸ்ட் கூகிள் துளிகள் |
ஒரு க்ளிக் அரிசித் திட்டம்
ஒரு ரூபாய் அரிசியைவிட ஒரு க்ளிக் அரிசித் திட்டம் உள்ளது தெரியுமா? ப்ரீரைஸ் எனப்படும் அறிவுசார் இணைய விளையாட்டை ஆடுவதன் மூலம் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் பத்து கிராம் அரிசி வறுமையில் உள்ளவர்களுக்கு தானமாக வழங்கப்படுகிறதாம். எப்படிச் சாத்தியம் என வினாவையில் வந்துவிழுந்த பதில் விளம்பர வருவாய் எனக் கூறுகிறது. மேலும் இந்ததளத்தை பிரபல பத்திரிக்கைகளும் விமர்சித்துள்ளதால் நம்பலாம். உலகில் அறியாமையும் வறுமையும் போக்க வேண்டும் என்ற உன்னத சிந்தனையில் விளைந்ததாம் இந்த தளம். இதில் விளையாடுவதன் மூலம் நமது ஆங்கில/சில மொழிகள்/கணித அறிவை வளர்க்கலாம்.
விளையாடிப் பாருங்கள்.
http://www.freerice.com/
ஒன்றாகப் பொட்டித்தட்டலாம்
ஒரே நேரத்தில் உங்கள் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு கட்டுரை தயாரிக்க வேண்டுமா? மேலும் அந்தப்பக்கத்தை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டுமா? உங்களுக்கான சேவைகள் இங்குள்ளது.சேவைகள் அனைத்து ஒரே நேரத்தில் உலகில் எந்த மூலையிலிருந்தாலும் ஒன்றாக தட்டச்சு செய்யும் வகையில் உள்ளது. முதலாவது நபர் ஒருப் பக்கத்தைத் திறந்து அதன் முகவரியை மற்றவருடன் பகிர்ந்துக் கொண்டால் போதும் இனி யாவரும் இணைந்து தயாரிக்கலாம்.
சேமித்தும் கொள்ளலாம். ஒரே நேரத்தில் பெரிய அசைன்மெண்ட் தயாரிக்கும் பொது பலர் சேர்ந்து ஒரே கட்டுரையை வடிவமைக்கலாம். உருவாக்கிய பக்கத்தை விரும்பிய வடிவில் தரவிரக்க்கவும் பகிர்ந்துக் கொள்ளவும் முடியும். தமிழில் தட்டச்சு செய்யமுடியாது ஆனால் தனியாக தட்டச்சிட்டு இணைத்துக்கொள்ளலாம்.
http://etherpad.org/etherpadsites.html
படங்கள் விரும்பும் பேஸ்புக் பயனாரா?
நீங்கள் பேஸ்புக் பயனாரா? அதில் உள்ள உங்கள் படங்களை எளிதில் தரவிறக்க வேண்டுமா? அப்படிஎன்றால் இந்த தளம் கைக்கொடுக்கும். இதில் பேஸ்புக் கணக்குடன் உள்நுழைந்து கணக்குக்குள் அனுமதிக்கவும் அடுத்து உங்கள் படங்கள் தானாக ஒரு ஆல்பம்போல வந்து நிற்கும் வேண்டிய படங்களை தேர்வு செய்து ஒரே சொடுக்கில் பி.டி.எப் ஆகவோ அல்லது ஜிப் கோப்பாகவோ தரவிறக்கிக் கொள்ளலாம்.
http://www.picknzip.com/
லேட்டெஸ்ட் கூகிள் துளிகள்
- https://google.com என்று பாதுகாப்புத் தேடலை கொடுத்துவந்த கூகிள் https://encrypted.google.com என்று பெயர் மாற்றிக் கொண்டுள்ளது. பாதுகாப்புத் தேடல் என்பது நீங்கள் கொடுக்கும் தகவல்களை உங்கள் உலவிக்கும் கூகிள் சர்வருக்கும் இடையே யாரும் ஊடுருவமுடியாதபடி பாதுகாப்பு அளிப்பதாகும்.
- ஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளை திறக்கப்பயன்படுத்தும் Multisignin வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கியமாக மின்னஞ்சல், ரீடர், ஆகியவற்றில் இதைப் பயன்படுத்தலாம்.பிளாக்கர்.காமிற்கு பொருந்தாது.
- கூகிள் எர்த் எனப்படும் முப்பரிமாண வரைபடங்களின் புதிய வெர்சனை அறிமுகப்படுத்தியுள்ளது. தரவிறக்கிப் பயன்படுத்தினால் எளிதாக புதிய புதிய இடங்களை சுற்றிப்பார்க்கலாம்.
- இதுவரை 5 நொடிகள் மட்டும் இருந்த undo வசதி அதிகபட்சமாக 30 நொடிகள் ஆக்கியுள்ளனர். ஜிமெயிலின் செட்டிங் ஜெனரல் பகுதியில் உள்ள undo send வரியில் நாமே இந்த நொடிகளை தேர்வு செய்துக் கொள்ளும்படி வந்துள்ளது. தெரியாமல் அளிக்கப்பட்ட அஞ்சல்கள் இனி 30 நொடிகள் வரை மீண்டும் உயிர்பிக்கலாம்.
- வார்த்தையை செலுத்தும் முன்னரே விடைகளை கொடுக்கும் முயற்சியில் நேற்று அறிமுகமான துரிததேடல்[instant search] ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை செயல்படுகிறது. தற்போதைக்கு google.com மற்றும் google.ru தளத்தில் மட்டும் இந்த செவையுள்ளது மற்ற co.in போன்றவைகளில் இல்லை. அதே நேரத்தில் இந்த தேடலை தடை செய்வதும் எளிது search பட்டனுக்கு அருகிலுள்ள வசதியை அப் செய்யலாம் அல்லது http://www.google.com/preferences?hl=en சென்று கடைசி வரியிலிருக்கும் இன்ஸ்டன்ட் தேடலை எடுத்துவிடலாம். தேடுவோரின் கவனத்தை சிதைப்பதில் இது படுசுட்டியாக இருப்பதால் வேண்டியதை மட்டும் பட்டென்று கொடுங்கள்
சின்ன ரக தமிழ் அகராதி கட்ஜெட்டின் மீது கூகிள் மொழிமாற்றியை இணைத்துவிட்டேன். ஒவ்வொரு வார்த்தை முடியும் போது தமிழ்ப்படுத்தும்
No comments:
Post a Comment
"கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
உங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது