Pages - Menu
Saturday, September 4, 2010
பிளாக்கர் தமிழ் மறுமொழிப்பெட்டி அறிமுகம்
இனி தனியாக தமிழில் தட்டச்சு செய்து காப்பி அடிக்கதேவையில்லை என்று இதைப் பயன்படுத்திய ஒருவர் சொல்லிச்சென்றார்.
கூகுளின் மொழிமாற்றி சேவையையும் பிளாக்கரின் மறுமொழி சேவையையும் விளையாட்டாக இணைக்க முனைகையில் எஞ்சியது தமிழ் மறுமொழிப் பெட்டி. வேர்ட்பிரஸ் தளங்களைப் போல நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யும் விதத்தில் உருவாகியுள்ளது. தமிழ் தட்டச்சுக்கென்று தனியான பெட்டி வைக்காமல் இந்த பெட்டியை வைப்பதன் மூலம் நேரடியாக தமிழில் அடிக்கலாம் அதுஅப்படியே பிளாக்கர் மறுமொழிப் பெட்டிக்கே சென்றுவிடும். அங்கே வாசகரின் கணக்கு சரிபார்க்கப்பட்டு கருத்துக்களை பிளாக்கர் வாங்க சம்மதம் தெரிவித்துவிட்டது.
கூகிள் மொழி மாற்றி என்பதால் ctrl+g கொடுத்து ஆங்கிலம் தமிழ் என இரண்டையும் தொடர்ந்து அடிக்கலாம். எளியராக HTML கோடும் கொடுத்துக்கொள்ளலாம்.
இதை ப்ளாக்கரில் இணைப்பதற்கு இரண்டு படிகள் உள்ளது.
முதலில் comment Settings சென்று Embedded below post என்பதை தேர்வு செய்யாமல் விடவேண்டும். அல்லது full page
/pop up window ஆகிய வசதியை தேர்வு செய்துக் கொள்ளவும். இதன் மூலம் பிளாக்கர் தரும் கமெண்ட் பெட்டி உங்கள் பக்கத்தில் இருக்காது.
அடுத்து Edit HTML சென்று, Expand Widget Templates செய்து
</b:includable>
<b:includable id='status-message'> என்கிற வரிகளைத் தேடவும், சரியாக அதன் மேலே நமது மொத்த நிரலியை இடவும்.
[அந்த வரிகள் இல்லாவிட்டால் ]
என்கிற வரியைத் தேடவும் அதற்குச் சரியாக மேலே இந்த நிரலிகளைப் போடவும். [அல்லது]
<data:post.body/> என்ற வரியைத் தேடி அதற்கு கீழே போட்டுவிடவும்.
இனி சாதரணமாக இந்த மறுமொழிப் பெட்டி உங்கள் பக்கத்திற்கு வந்துவிடும் இனி தனியாக தமிழில் தட்டச்சு செய்து காப்பி அடிக்கதேவையில்லை என்பது உண்மையா என்று புரியும்.
வழக்கம் போல இந்த நிரலியும் வலைப்பூவிற்குத் தகுந்த மாதிரி மாற்றிக் கொண்டால் நன்குயிருக்கும் என நிரலி வழங்கியைத் தனியாக வைத்துள்ளேன். வேண்டிய தலைப்பு, மற்றும் கருத்துச் செய்தி மற்றும் பெட்டியின் நீளத்தைக் கொடுத்து நிரலியை எடுத்துக் கொள்ளலாம்.
ப்ளாக்கருக்கான தமிழ் மறுமொழிப்பெட்டி வழங்கி
28 comments:
1. இந்த தமிழ் மறுமொழி பெட்டியை நம் வலைப்பதிவில் கொண்டுவர எந்த நிரலியை இடவேண்டும் என்று கொஞ்சம் விளக்கமாக சொல்லவும் நண்பரே.............
ReplyDelete
2. நல்ல மேட்டர்
ReplyDelete
3. @anonymous,
தெளிவாக இல்லாததற்கு மன்னிக்கவும், இந்த பக்கத்திலுள்ள சுட்டி இந்தப் பக்கத்திற்கு வாருங்கள்.
அடுத்து அனுப்பு என்ற பொத்தானை அழுத்தினாலே உங்களுக்கு நிரலி கிடைக்கும். அதை எடுத்து மேற்கூறிய இடத்திளிடவும்.
வேண்டுமானால் உங்களுக்கு பிடித்த தலைப்பு, செய்தி, மற்றும் அளவு ஆகியவற்றைக் கொடுத்தது அனுப்பு என்ற பொத்தானை அழுத்தவும்.
ReplyDelete
4. பயனுள்ள இடுகை.வாழ்த்துக்கள்.
ReplyDelete
5. நல்ல விஷயம். ஒண்ணொண்ணா புதுசு புதுசா வந்திட்டே இருக்குல்ல!
ReplyDelete
6. //நீங்க பாட்டுக்கு குத்துங்க நான்பாட்டுக்கு எண்ணுறேன்//வாய்விட்டு சிரிச்சேன்
ReplyDelete
7. அந்த‌ கோடில் உங்க‌ள் வ‌லைப்ப‌க்க‌ முக‌வ‌ரி இருக்கே நாளை உங்க‌ள் ப‌திவில் ஏதேனும் குழ‌ப்ப‌ம் ஏற்ப‌ட்டால் எங்க‌ள் ப‌திவும் பாதிக்க‌ப்ப‌டுமா?
உதார‌ண‌த்துக்கு ச‌மீப‌த்தில் த‌மிழ்ம‌ண‌ ப‌ட்டை உள்ள‌வ‌ர்க‌ள் ப‌திவை திற‌க்க‌ முடியாம‌ல் போன‌ மாதிரி...
என்னுடைய‌ லின‌க்ஸ் ப‌திவில் போட்டு பார்த்தேன்,ச‌ரியாக‌ வேலை செய்கிற‌து.
ReplyDelete
8. அட இது நல்லாயிருக்கே.. [ஒண்ணுமில்ல செக் பண்ணிப் பார்த்தேன்.]
ReplyDelete
9. நன்று , மிக மிக உபயோகமான செய்தி. நான் பார்க்கும் வலை தளங்களில் தமிழில் என் கருத்தை வெளியிட வேண்டும் என்ற என் ஆவல் நிறைவேறியது . நன்றி . நான் வலை தளங்களுக்கு மிகவும் புதியவன்.
ReplyDelete
10. தேவையான சேவை..
அருமயான பகிர்வு..
ReplyDelete
11. //அடுத்து Edit HTML சென்று, Expand Widget Templates செய்து என்கிற வரிகளைத் தேடவும், சரியாக அதன் மேலே நமது மொத்த நிரலியை இடவும்.//எந்த நிரலி?
ReplyDelete
12. @வடுவூர் குமார்,
நீங்க சொல்வது போல எனது தளத்திற்கும் அந்த கோடிங்கிற்கும் சுத்தமாக சம்மந்தமில்லை. இந்த கோடிங் கூகிள் மொழிப் பெயர்ப்புடன் மற்றும் பிளாக்கர் பெட்டியுடன் மட்டுமே தொடர்புடையது.
காப்புரிமைப் பிரச்சனைக்காகவே கோடிங்கின் மாறிலிகளில் தளத்தின் பெயரைப் பயன்படுத்தியுள்ளேன்.
ReplyDelete
13. கோட் எங்கே தலைவரே இருக்குது? கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லா இருக்கும். எந்த கோடும் தரபடவில்லையே!உங்களின் பதிலுக்காக காத்திருக்கின்றேன்.
ReplyDelete
14. என் ஈமெயிலுக்கு நீங்கள் எழுதியதற்கு நன்றி நண்பரே!
உங்களின் பதிலுக்கு நன்றி! ஆனால் அங்கே ஏற்கனவே சென்று பார்த்தேனே. கீழே இருக்கும் விவரம் மட்டும் தானே இருக்கிறது.
செயல்முறை விளக்கம்:
என்கிற வரிகளின் மேலே நமது மொத்த நிரலியை இடவும்.
[அந்த வரிகளை இல்லாவிட்டால் ]
2. என்கிற வரியைத் தேடவும் அதற்குச் சரியாக மேலே இந்த நிரலிகளைப் போடவும். [அல்லது] என்ற வரியைத் தேடி அதற்கு கீழே போட்டுவிடவும்.
// என்கிற வரிகளின் மேலே நமது மொத்த நிரலியை இடவும்.//
மொத்த நிரலியை இடவும் என்று இருக்கிறது. ஆனால் நிரலி எங்கு இருக்கிறது நண்பரே? தயவு செய்து அந்த நிரலியை என் ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்.
உங்களின் பதிவு எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளது. ஆனால் முழுமையான தகவல்கள் கொடுக்கபடாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. இதை சரிசெய்ய வேண்டும் என்று உங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றேன்.
மிக்க அன்புடன்
வசந்த்
என்னுடைய ஈமெயில் முகவரி n.vasanthakumar@gmail.com
ReplyDelete
15. நீங்கள் குறிப்பிட்டது போல நானும் வைத்து விட்டேன். ஆனால் pop up window or full page கொடுத்தால் மறுமொழி பெட்டி வரவில்லை. blogger இன் விண்டோ தான் வருகிறது. இப்போது என் blog இல் இரண்டு பெட்டிகளும் வருகிறது. என்ன செய்ய?
ReplyDelete
16. நல்ல கருத்து. பகிர்வுக்கு நன்றி.........
ReplyDelete
17. நண்பா மொத்த நிரலி என்றால் என்ன ?
அது எங்கே இருக்கிறது ?
கொஞ்சம் விளக்கமாக கூறவும்
ReplyDelete
18. @சாதாரணமானவள்,
உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய அதே செய்தி மற்றவர்களுக்காக
உங்களுக்கு 5 ஆலோசனைகள்.
1. இந்தப் படத்திலுள்ளது போல embedded below post தேர்வு செய்யாவிட்டால் கட்டாயம் பிளாக்கரின் சாதாரண மறுமொழிப் பெட்டித் தெரியாது. அப்போது இந்த தமிழ்ப்பெட்டி அந்த இடத்திலிருந்து செயல்படும். நீங்கள் popup தேர்வு செய்து கீழேவுள்ள save செய்தீர்களா? என்று தெரியவில்லை. மீண்டும் முயற்சித்துப் பாருங்கள்
2. உங்கள் ப்ளாக் templateல் கட்டாயம் இந்த </b:includable><b:includable id='status-message'> என்கிற வரியிருக்கும் அதற்கு மேலதான் இந்த கோடைப் போட்டீர்களா? என்பதையும் கவனிக்கவும்.
3. மீண்டும் அதே நிலை நீடித்தால் விருப்பமிருந்தால் தளத்தின் tempelateஐ மாற்றிப் பார்க்கவும்.
4. கடைசியாக நீங்கள் காபி செய்து பெஸ்ட் செய்த நமது நிரலியில் type='button' என்பதற்குப் பதிலாக type='hidden' என்று மாற்றிக் கொண்டால் இந்த பெட்டியை வெறும் தமிழாக்க கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. எதுவும் முடியாவிட்டால் விருப்பமிருந்தால் உங்கள் தள நிரலிகள் அனைத்தையும் காபி செய்து எனக்கனுபபினால் பொருத்தித் தரப்படும்.
கடைசியாக ஒரு டிப்ஸ், நீங்கள் பொருத்தியுள்ள பெட்டி உங்கள் தளத்திற்கு சிறியதாக உள்ளது விரும்பினால் பெட்டியின் நீளத்தை மாற்றிக் கொள்ளலாம். http://ethirneechal-lab.blogspot.com/2010/09/tamil-comment-form-for-blogger.html
நன்றி,
நீச்சல்காரன்
ReplyDelete
19. @நா.மணிவண்ணன்,உங்களுக்கு அப்பக்கம் தெரியவில்லை என்றால் இந்த கோடுகளைப் பயன்படுத்துங்கள்
<b:if cond='data:blog.pageType != "index"'>
மறுமொழிப்பெட்டி:
Loading...
</b:if>
ReplyDelete
20. @நா.மணிவண்ணன்,
இந்தப் பக்கத்தில் உங்களுக்கு வேண்டிய அகலத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.
http://ethirneechal-lab.blogspot.com/2010/09/tamil-comment-form-for-blogger.html
ReplyDelete
21. நல்ல பதிவு
ReplyDelete
22. நன்றி பயனுள்ளதாக இருந்தது இதை அனைத்து பதிவர்களும் பயன்படுத்தினால் கருத்துக்களை தெரிவிக்க ஏதுவாக இருக்கும் ...
ReplyDelete
23. i am sorry to say that well i dont know what is நிரலி...? can u tell me what it is?
ReplyDelete
24. "நிரலி" is nothing but snippet of codes. you can avail it from here or scratch it from one of my previous comment
ReplyDelete
25. நன்றி தோழரே .பயன் உள்ள பகுதி இது .
ReplyDelete
26. அடடா.. அற்புதமான விஷயம். நான் எனது வலைப்பூவில் பயன் படுத்தி விட்டேன்.நன்றி நண்பரே.
ReplyDelete
"கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
உங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது