Pages - Menu

Friday, October 14, 2011

கூகிளும் மூடுவிழாக்களும்


கூகிள் அடிக்கடி தனது வலைக்கட்டமைப்பை [Design]/ இடைமுகத்தை[interface] மாற்றி அமைக்கும் என்பது தெரிந்த விஷயம் தான் ஆனால் தற்போதெல்லாம் சில முக்கிய சேவைகளையே மூடிவிடுகிறது. மாற்றங்கள் என்பது மவுசை பிடித்து ஆனா போட்ட காலம் தொட்டே இருக்கிறது ஆனால் அவை மேம்படுத்தப் பட்டே வந்ததேயென்றி கைவிடப்படவில்லை. இங்கு கூகிள் கைவிடப்படும் சேவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நான் அதிகரிக்கவும் செய்கிறது. சில மாதங்களுக்கு முன் இணைய பயனர்கள் குறிப்பாக தமிழர்களும் மிகவும் கவலைப்படும்படியாக கூகிள் அகராதியை மூடியது. அதற்கு மாற்றாக கைகாட்டப்பட்ட கூகிள் மொழிமாற்றி[google translate] இன்னும் மொக்கையாகவே உள்ளது. கொடுக்கும் வார்த்தைகளுக்கு பொருள் கூட சரியா காட்டுவதில்லை. அதனுடன் கூகிளின் translate சேவைக்கான API அதாவது developer/பயனர்கள் அபிவிருத்தி செய்யவுதவும் வசதியையும் நிறுத்திவைத்துள்ளது. அதனால் தமிழில் மொழிமாற்றும் உபகரணங்களை யாரும் மேம்படுத்தவும் அல்லது எளிமைப்படுத்திக் கொள்ளவும் முடிவதில்லை. உதவும் என்ற அடிப்படையில் கூகிள் அகராதியை இணைத்துக்கொண்ட நம்ம அகராதி நீட்சியிலும் கூகிள் காலியிடம் விட்டதுதான் மிச்சம்.

சற்று காலண்டரை பின்னோக்கி திருப்புங்கள், கூகிள் பவர்மீட்டர், வலைத் தளங்களின் டிரெக்டரி, டெக்ஸ்டாப் கட்ஜெட், ஜிடிரைவ், ஸ்லைட் app, கூகிள் பேக், கூகிள் sets மற்றும் சில என மாற்று சேவைகள் இல்லாமல் மூடப்பட்டு போனவை இவைகள். பல சேவைகள் மூடப்பட்டாலும் மாற்று சேவையில் இணைத்துவிட்டதுண்டு உதாரணமாக ஸ்பிரட்ஷீட், page creator[2009 வாக்கில்] என்று சொல்லலாம். இந்தப்பட்டியல் நீண்டு தற்போது கூகிள் buzzம் 'அடக்கம்' என்பது புதிய செய்தி -கூகிள்+ க்கு வலுசேர்க்க இந்த முடிவு. நம்ம அம்பானி கம்பெனிகாரர்கள் முதலில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி பங்குகளை உயர்த்தி மற்றவொன்றுடன் சேர்க்கும் டெக்னிக்கே. இதுவரை buzzல் போட்டவை பாதுகாக்கப்ப்படுமாம் புதியவைகள்தான் இனி சில வாரங்களில் போடமுடியாதாம். வேண்டியவர்கள் இதன் https://www.google.com/takeout/ மூலம் பேக்கப் எடுக்கலாம் என்று சொல்கிறது.

சரி, இம்மாதிரி சேவைகளை மூடுவதால் என்னயென்ன பின்னடைவுகள்?
  • முதலில் எல்லாருக்கும் மூடப்படும் சேவை பிடிக்காமல் இருப்பதில்லை, விரும்புபவர்களுக்கு இழப்பாக அமையும். 
  • அந்நிறுவனத்தின் மற்ற பொருட்கள் மீது அதிகம் சார்ந்துயிருக்க முடியாது; எப்போது வேண்டமானாலும் நிறுத்தப் படலாம் என்கிற நினைப்பு வரும். 
  • அபிவிருத்தியாளர்களின் developmentகள் குறையும்.
  • கூகிள் தமிழ் அகராதி போன்றவைகள் மூடப்படும் போது பிராந்திய மொழி வளங்கள் குறையும்.
  • கூகிள் பஸ் போன்றவை மூடப்படும் போது கருத்துக் குழுக்கள்[நல்லதோ/கெட்டாதோ] சிதைய நேரிடும்
  • Google Mashup போன்ற சேவைகள் மூடப்படும் போது yahoo pipes போல மற்ற நிறுவனங்களின் கிளை தயாரிப்புகள் மார்கெட்டை பிடிக்கும் 
  • புதிய பொருட்களின் அணிவகுப்பாகயிருக்கும் google labs போன்றவை மூடப்படும் போது  புதுமைகள் காணமுடியாதா என்று தனித்தன்மை இழக்க நேரும்.


இம்மாதிரியான மூடு விழாக்கள் யாகூ, மைக்ரோசாப்ட் என பல இடங்களில் நடந்தாலும் அவை போனியாகவில்லை என்று கொள்ளலாம், ஆனால் கூகிள் போன்ற பரந்த பயனர்கள் கொண்டுள்ள நிறுவனம் செய்வது பாதிக்கக்கூடியவொன்று. இவ்விசயங்களை மீண்டு பரிசீலிக்கலாம் என்று சொல்லமுடியாது ஆனால் இவ்வசதிகளை பெற மாற்று சேவைகளை அறிமுகப்படுத்தலாம்.

இதற்கு தங்கள் நிதிபற்றாக்குறை அல்லது வேறு சேவையுடன் இணைக்கிறோம் என்ற காரணங்கள் அவர்களிடம் உள்ளது ஆனால் பயனர் என்கிற அடிப்படையில் நாம் பல சேவைகள் இழந்துவிட்டோம் என்ற எண்ணம் நம்மிடம் உள்ளது. கூகிளுக்கு இதுவொன்றும் புதிசுயில்லை; பழையன கழிதலும் புதியன புகுதலும் என ஆறுதல் படுத்திக் கொள்ளவேண்டியதுதான்.கூகிள் buzz ஆரம்பத்தில் கோணலாகத்தான் என்ட்ரி கொடுத்தது இருந்தாலும் பழகியப்பின் சட்டென்று பிரிவதற்கு மனம் வருவதில்லை.

இந்தப்பட்டியலில் நாளை ப்ளாக்கரும் சேர்ந்தாலும் சேரலாம் [என்பது நமது தளம் சார்பாக அடித்துவிடப்படும் புரளி]

11 comments:

  1. வலைபூக்களுக்கு அந்த நிலை வராது என்று ஆணித்தரமாய் அடித்து சொல்லுவேன்... மார்க்கெட் இல்லாத பொருட்கள் பின்வாங்கப் படுவது உண்டு, மார்க்கெட் உள்ள பொருட்கள் பின் வாங்கப்பட்டால் கம்பனி திவால் என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம்... கூகுளே நிறுவனம் திவாலாகுமா என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்

    ReplyDelete
  2. @Suryajeeva
    உங்கள் எண்ணமே என்னதும் கூட!

    ஆனால் பிளாக்கரால் அதிக விளம்பர லாபம் இல்லை என்று கூகிள் தலைகள் முடிவு எடுத்தாலும் எடுக்கலாம்[என்பது நமது தளம் சார்பாக அடித்துவிடப்படும் மற்றுமொரு [hi="yellow"]புரளி[/hi]]

    ReplyDelete
  3. @Tallykarthik,
    மஞ்சள் கமெண்ட்கள் தவிர மற்றவையெல்லாம் உண்மைதான் நண்பரே
    http://googleblog.blogspot.com/2011/10/fall-sweep.html

    ReplyDelete
  4. //
    முதலில் எல்லாருக்கும் மூடப்படும் சேவை பிடிக்காமல் இருப்பதில்லை, விரும்புபவர்களுக்கு இழப்பாக அமையும்.

    //
    உண்மை

    ReplyDelete
  5. தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்உங்கள் தளம் தரமானதா..?இணையுங்கள் எங்களுடன்.. http://cpedelive.blogspot.com

    ReplyDelete
  6. கூகுளாண்டவர் பக்தர்களை கைவிட மாட்டார் என்று நம்புவோமாக!

    ReplyDelete
  7. அருமையான பதிவு

    ReplyDelete

"கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
உங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது