Pages - Menu

Wednesday, September 28, 2011

கேள்வி-பதில் [வலைப்பூக்கள்]-II

ஒரு பிளாக்கர் தளத்தில் வெளியிடப்படும் பதிவுகளுக்கு urlல் எப்படி ஆங்கிலத்தில் பெயர் வைக்க?
எந்தப் பதிவும் பிரசுரிக்கும் போது அதன் தலைப்பில் தமிழுடன் ஆங்கிலம் சேர்த்துப் பதியவும், publish செய்தப்பின் கவனித்தால் அந்தப் பதிவின் முகவரியில் உங்கள் ஆங்கில தலைப்பு அமர்ந்திருக்கும். அடுத்து அந்த தலைப்பில் உள்ள ஆங்கிலத்தை நீக்கிவிட்டு அந்தப் பதிவையே மறுபடியும் publish செய்யவும். அதனால் பதிவிடும் போதே சரியான/தேவையான ஆங்கில வார்த்தைகளை சேர்ந்து தலைப்பிட்டு பதியவும்


பேஸ்புக் கமெண்ட் பெட்டியை எப்படி வலைப் பதிவில் இணைப்பது?
http://developers.facebook.com/docs/reference/plugins/comments/

இந்த இணைப்பு சென்று உங்கள் தள முகவரி கொடுத்து get code பட்டனைத் தட்டுவதால் முழு நிரலியும்[HTML code] கிடைக்கும் உங்கள் தளத்தின் அனைத்து பக்கத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்றால் டெம்ளைட்டில் போட்டு சேமிக்கவும்
அல்லது ஒரு பதிவுக்கு மட்டும் வேண்டும் என்றால் அந்தப் பதிவின் HTML modeல் கடைசியாக இந்த கோடை போட்டு பதிவிடவும் இதன் மூலம் அந்தப் பதிவில் மட்டும் பயன்படுத்த முடியும்
டெமோ பார்க்க விரும்புகிறவர்கள் இங்கு பார்க்கலாம்-> ascii tamil


சில வலைபூக்களில் விளம்பர தொல்லை இருந்தாலோ அல்லது பிளாஷ் விஜெட்கள் அதிகம் இருந்தாலோ திறக்க அதிக நேரம் எடுக்கிறது; இவற்றை எளிதில் படிக்க முடியுமா?
blogger.com தளங்களைப் பொறுத்தவரை .blogspot.com/view அல்லது blogspot.com/?m=1 என பின்னிணைப்புக் கொடுப்பது மூலம் எளிதாகப் படிக்கலாம். இந்த வழியில் படிக்கும்போது தேவையில்லாத கட்ஜெட்கள், ஓட்டுப்பட்டைகள், நேரத்தைக் குடிக்கும் மென் நிரல்கள் தவிர்த்து வேகமாகத் திறக்க முடியும். மற்ற வேர்ட் பிரஸ் இன்ன பிறவில் தேவையில்லாத விளம்பரங்களை தடை செய்ய இந்த www.nomoreads.adout.org/ தளத்தைப் பயன்படுத்தலாம்.


பதிவு திருடப்பட்டுள்ளதா என கண்டுபிடிக்கமுடியுமா?
எளியவழி உங்கள் பதிவின் ஏதாவது வாக்கியத்தை கூகிளில் போட்டு தேடவும், அதுவே துல்லியமாக காட்டிக் கொடுக்கும். படங்கள் திருடப்பட்டுள்ளதா என கண்டுபிடிக்க அந்தப் படத்தின் முகவரியை அல்லது அந்தப் படத்தையே கூகிள் இமேஜ்சில் போட்டுத் தேடலாம் கண்டுபிடிக்கமுடியும்
கூகுளின் இந்த அம்சத்தில் நீங்கள் படத்தை வலையேற்றி தேடலாம் அல்லது படத்தின் முகவரியைக் கொடுத்தும் தேடலாம்.


ஒரு பதிவை மட்டும் எப்போதும் முதல் பதிவாக வைக்கமுடியுமா?
பிளாக்ஸ்பாட்டை பொறுத்தவரை அது சாத்தியமே, விரும்பினால் உங்கள் அத்தனைப் பதிவையும் விரும்பிய படி வரிசைப் படுத்தமுடியும். என்றோ போட்ட ஒரு பதிவை மீள் பிரசுரம் செய்யாமல் அந்தப் பதிவை முகப்பு பக்கத்தில் கொண்டு வர அந்தப் பதிவின் தேதியை மாற்றினால் போதும். படத்தில் உள்ளது போல இன்றைய தேதி அல்லது latest தேதியைக் கொடுத்தால் அதன் படி பதிவு தளத்தில் தெரியும்.இதனால் புதிய பதிவு போடாமலே முதல் பக்கத்தில் வேறுபட்ட பதிவுகளைப் பார்க்கலாம்.
இவ்வழியில் தமிழ்மணத்தை ஒரு காலத்தில் ஏமாற்றலாம் இப்போது முடியாது என்பதால் இச்செய்தியிங்கே
****


இக்கேள்விகளுக்கு வேறு பதில்கள் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளலாம்.
கடந்த முறை பதிலளிக்கப்பட்ட கேள்விகள் கேள்வி-பதில் [வலைப்பூக்கள்] பகுதி -1
இணையம் மற்றும் வலைப்பூக்கள் சார்ந்த கேள்விகளை இப்பகுதியில் நீங்கள் கேட்கலாம். இப்பகுதி தொடரும்...

23 comments:

  1. நல்ல பதிவு நண்பரே

    ReplyDelete
  2. அருமையான தகவல் நண்பரே தமிழ் மணம் முதல் ஒட்டு

    ReplyDelete
  3. பல தகவல்கள்...
    நன்றி...பல தகவல்கள்...
    நன்றி...

    ReplyDelete
  4. கேள்வி - பதில் பகுதி மூலம் வலைப்பதிவர்களுக்கு பயனுள்ள தகவல்களை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் அருமை... தொடரட்டும்....

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. உபயோகமான பதிவு நன்றி...

    ReplyDelete
  6. பயனுள்ள தகவல்கள்..
    நன்றி...

    ReplyDelete
  7. புதியவர்களுக்கு பல பயனுள்ள தகவலை அள்ளி தெளிச்சிருக்கீங்க நண்பா. நன்றி

    ReplyDelete
  8. பயனுள்ள பகிர்வு நண்பா... மிக்க நன்றி

    ReplyDelete
  9. புதியவர்களுக்கு பல [co="red"]பயனுள்ள தகவலை[/co] அள்ளி தெளிச்சிருக்கீங்க நண்பா. நன்றி

    ReplyDelete
  10. வணக்கம்!தங்கள் வலைப் பதிவில் பல தகவல்கள்.எல்லாம் பயனுள்ளவை.நன்றி.

    ReplyDelete
  11. [im]http://www.freedesktopwallpapers.net/flowers/flowerst.jpg[/im]








    வலைப்பதிவர்களுக்கு பயனுள்ள தகவல்களை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் அருமை...
    பிடியுங்க பூங்கொத்து.

    ReplyDelete
  12. அருமையான தகவல் நன்றி

    ReplyDelete
  13. பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய நீச்சல்காரர் அவர்களே!

    நம் பதிவுகள் எங்கெங்கே திருடப்பட்டுள்ளன என்பதைக் காட்டுவதற்கெனவே தனித்தேடுபொறிகள் உள்ளன. உங்களைப் போலவே முன்னணித் தொழில்நுட்ப வலைப்பதிவரான பொன்மலர் அவர்கள் இது பற்றி எழுதியுள்ளார். பார்க்க http://ponmalars.blogspot.com/2011/05/blog-post.html. ஆனால், நீங்கள் மேற்சொன்னபடி, கூகுளில் தேடுவது சிறப்பானதா அல்லது இது சிறப்பானதா என்பது பயன்படுத்திப் பார்த்தால்தான் தெரியும். நான் இன்னும் பயன்படுத்திப் பார்க்கவில்லை. நன்றி! வணக்கம்!

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள ஞானப்பிரகாசன் அவர்களே,
      பொன்மலரின் பதிவைக் குறை சொல்லும் அளவிற்கு கில்லாடி அல்ல நான். இருந்து எனக்குத் தெரிந்து எந்தத் தளமும் நேரடியாகத் தேடித் தருவதில்லை, மற்றும் தேடித் தரவும் முடியாது. எல்லாத் தளமும் கூகிளிலிருந்து தேடித் தான் அவர்களின் விடையாகக் கூறுகிறார்கள். ஆகவே மொத்தமாகப் பஞ்சு வாங்க ஜவுளிக் கடைக்குச் செய்வதை விட பஞ்சு ஆலைக்கே சென்றுவிடுவது நல்லதுதானே

      Delete
  14. நான் ஒரு வலை பதிவு (பூ)வைத்திருக்கிறேன். அதை அழகாக வடிவமைத்து கொடுப்பார்களா?நான் சென்னையில் வசிக்கிறேன்.சில விஷயங்கள் புரிய வில்லை.பணம் தருகிறேன்.என் வலை பூவை வடிவமைப்பு செய்து கொடுக்க யாராவது நண்பர்கள் உண்டோ ?

    ReplyDelete
  15. நான் ஒரு வலை பூவை வைத்திருக்கிறேன்.அதை அழகாக வடிவமைத்து தர யாராவது நண்பர்கள் உண்டோ?இலவசமாக வேண்டாம் . நான் சென்னையில் உள்ளேன்.

    ReplyDelete
  16. @பாரதி தமிழன், வலைப்பூ முகவரியுடன் neechalkaran@gmail.com என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்ளுங்கள். நண்பர்கள் யாராவது அமையுமா என்று பார்க்கிறேன்.

    ReplyDelete
  17. மறு மொழி சொன்னமையக்கு தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  18. மறு மொழி சொன்னமையக்கு தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  19. பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய நீச்சல்காரர் அவர்களே!

    தங்கள் பதிலை நான் இப்பொழுதுதான் பார்த்தேன். தெளிவுறுத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  20. சிறந்த வழிகாட்டல்
    பாராட்டுகள்

    ReplyDelete

"கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
உங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது