தினத்தந்தியின் கன்னித்தீவை படித்துக் கொண்டிருக்கும் போது சிறுவர்மலரின் அதிமேதாவி அங்குராசு கதைக்கு தாவியாரா? ஹாய் மதனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அரசு பதிலுக்கு சிரித்ததுண்டா? தினமணியின் தலையங்கத்தைப் படிக்கையில் தினமலரின் டீ கடை பெஞ்சுக்கு போனதுண்டா? அடுத்தவர் அந்த பேப்பரை படித்து முடிக்கும் வரை இந்த பேப்பரில் உள்ள கண்ணீர் அஞ்சலில் படத்தையே மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களை படிப்பகங்களின் பார்த்திருக்கலாம். ஒரே நேரத்தில் உலகமே உங்களுக்கு லெட்டர் போட்ட பிரமையை உருவாக்குவது படிப்பகங்கள். திருவிழாக்காலத்திலும் திருகு குழாய் பிரச்சனை காலத்திலும் எல்லா பத்திரிகை செய்திகளையும் ஒரே இடத்திலிருந்தவாறு படிக்கும் சுகமே தனி. பெரும்பாலோர் நூலகங்களில் அனுபவித்திருக்கலாம், சிலர் மரத்தடி பதிப்பகங்களில் அனுபவித்திருக்கலாம். அத்தகைய ஒரு அனுபவத்தை இணையத்தில் தரமுடியாது இருப்பினும் ஓரளவு அதன் பயனை விரும்புகிறவர்களுக்காக இணைய பத்திரிகைகள் பலவற்றை ஒரே இடத்தில் தொகுக்கப் பட்டுள்ளது.
11000 தமிழ்த் தளங்களிலிருந்து இணையத்தில் இலவசமாகவுள்ள தமிழ் பத்திரிகைகள் மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிருந்தவாறே செய்தி ஊடகங்கள் மற்றும் சஞ்சிகைகள் படிக்கலாம். தெரியாத புதிய தமிழ் செய்தித் தளங்களை அறிந்து கொள்ளலாம்.
இணையத்தில் செய்தி ஊடகமாக பிகடனப் படுத்திய பிரபலத் தளங்கள் இணைய செய்தி ஊடங்கள் பிரிவில் தொகுக்கப்பட்டுள்ளது. அச்சு ஊடகங்களின் செய்தி வலைதளங்கள் மற்றும் இ-பேப்பர் தளங்ககளாக தொகுக்கப்பட்டுள்ளது. அதுபோல இணைய மற்றும் அச்சு சஞ்சிகைகளின் தளங்களும் பதிக்கப்பட்டுள்ளது.
சில தளங்களில் பதிவு செய்து கொண்டு எல்லா பக்கங்களையும் இலவசமாகப் படிக்கும் படியுள்ளது. சில தளங்களின் பதிவு செய்துகொண்டு குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் இலவசமாகப் படிக்கும் படியும் உள்ளது. முழுதும் கட்டணத் தளங்களாக உள்ளவைகள் சேகரிக்கப்படவில்லை. புதிய தளங்கள் காணப்பட்டால் இணைத்தும் செயல் படாத தளங்கள் தவிர்க்கப்பட்டும் இப்படிப்பகம் செயல்படும்.
பயன்படுமானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நமது தளத்தின் வெளியீடான தமிழ் செய்திகளுக்கான க்ரோம் நீட்சி. செய்திப் பிரியர்கள் இதையும் பயன்படுத்தலாம். கூகிள் இணைய அங்காடி
அருமையான பதிவு.... நன்றி.. என்னுடைய வளதலைதை படிக்கவும்... www.rishvan.com
ReplyDeleteஅருமையான பதிவு.... நன்றி.. என்னுடைய வளதலைதை படிக்கவும்... www.rishvan.com
ReplyDeleteபகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
ReplyDeleteஆஹா அருமையான தகவலுக்கு நன்றி நீச்சல்காரரே!
ReplyDeleteOne more Great work. Thanks
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
[@]c7636602799363088235[/@]நன்றிண்ணே
ReplyDelete[@]c6522530689549929844[/@] நன்றி அக்கா
ReplyDelete[@]c8933900664775804775[/@]நன்றி நண்பா
ReplyDelete[@]c2080744076091472543[/@]நன்றி நண்பா
ReplyDelete[@]c157843309490609073[/@]நன்றி நண்பா! படித்துவிட்டேன்.
ReplyDeleteகுட் அற்புதமான செயலாக்கம் அப்படி இப்படி சீரமிகு வடிவம்
ReplyDeleteகுட் அற்புதமான செயலாக்கம் அப்படி இப்படி சீரமிகு வடிவம்
ReplyDelete[@]c6522530689549929844[/@] நன்றி அக்கா
ReplyDeleteஅண்ணாச்சி நாலு பேருக்கு உதவுற மாதிரி நல்ல காரியம் செஞ்சுகிட்டு இருக்கிய.பொறாமை புடிச்சவனுக அத இத சொல்லி ஒங்கள அமுக்கி போட நெனைப்பானுவ.அதையெல்லாம் தாண்டி நல்லது செஞ்சுகிட்டே இருங்க.சண்டைக்கு ஏதும் வந்தானுவன்னா "தம்பி இதெல்லாம் நல்லாவாடே இருக்கு" அப்படின்னு ஒரு சத்தம் மட்டும் குடுங்க. அப்புறம் மத்தத நான் பாத்துக்கறேன்.பெறவு இதையெல்லாம் நேர்ல சொன்னா நல்லாத்தான் இருக்கும்.என்ன செய்ய பாழாப்போன பொழப்ப தேடி தொலைவா வந்துட்டேன்.பரவாயில்ல பட்டன தட்டுனா படக்குன்னு தொடர்பு வச்சுக்குற மாதிரிதான் வாய்ப்பும் வசதியும் இருக்கே அப்டின்னு மனச தேத்திக்கிட்டு உத்தரவு வாங்கிக்கறேன்.
ReplyDelete@சேக்காளி,
ReplyDeleteஉங்க மெசேஜுக்கு தேங்க்ஸ்பா. பெறவு நாலுபேரு நல்லதுக்குத்தான் சொல்றாங்க. அண்ணாச்சிய யாரும் மெர்சல் செய்யல. அப்படி ஏதாவது வந்தா ஒரு சவுண்டு விடுறேன். இப்பால ஜகா வாங்கிக்கிறேன்.
வணக்கம். தமிழப் படிப்பகத்தை எனது வலைப்பூக்களில் இணைக்க இயலவில்லை. தயவு செய்து உதவுக. -சங்கர இராமசாமி
ReplyDelete@Sankara RamaSamy
ReplyDeleteப்ளாக்கர் வடிவமைப்பு தற்போது மாறிவிட்டது. அதனால் அப்பெட்டியில் உள்ள நிரலை(HTML) எடுத்து layout -> Add a Gadget -> HTML/Javascript என்று முறையே சென்று அங்கே இட்டுச் சேமித்துக் கொள்ளவும்.