ப்ளாக்கரையும் வேர்ட்பிரசையும் ஒப்பிட்டு பார்க்கும் எந்தவொரு கணத்திலும் பிளாக்கர் மறுமொழிப் பகுதி என்றுமே பின்னாலிருப்பதை உணரமுடியும். காரணம் வேர்ட்பிரசில் யாருக்கு பதில் அளிக்கின்றோமோ அவருக்கு நேரடியாக கீழே நமது கருத்தைச் சொல்லமுடியும் ஆனால் இதுவரை ப்ளாக்கரில் அந்த வசதியில்லை அதனால் தான் பலர் @ போட்டு அந்த நபரை குறித்து பதில் அளிப்பார்கள். இதற்கு மாற்றாக ஏன் பிளாக்கர் இவ்வசதியை ஏற்படுத்தவில்லை என்பது தெரியாது. விரைவில் அவ்வசதியை ஏற்படுத்தும் அதுவரை reply செய்ய உங்கள் கீ போர்ட்க்கு உதவ ஒரு பிளாக்கர் மறுமொழி நீட்சி அறிமுகம் செய்யப்படுகிறது.
இதனை நிறுவுவதன் மூலம் வேர்ட்பிரசுக்கு இணையான மறுமொழிப் பகுதியைப் பயன்படுத்தலாம். இரண்டு படிகள் உள்ளது
Design-> Edit HTML-> சென்று
1). <b:include data='comment' name='commentDeleteIcon'/> என்கிற வரிகளுக்குக் கீழ் இவ்வரிகளைப் போட்டு வண்ணமிட்ட இடத்தில் உங்கள் blogid யை கொடுக்கவும்.
<a class='neechalreply' expr:href='"http://www.blogger.com/comment.g?blogID=BLOGID&postID=" + data:post.id + "&isPopup=true&postBody="+ "[@]" +data:comment.anchorName + "[/@]#form"' onclick='javascript:window.open(this.href, "bloggerPopup", "toolbar=0,location=0,statusbar=1,menubar=0,scrollbars=yes,width=450,height=450"); return false;#form'>Reply</a>
2). </body> அல்லது </HTML> என்கிற வரிகளுக்குக் மேலே இவ்வரிகளைப் போட்டுச் சேமிக்கவும்.
இந்த வரியைக் கொடுத்தபின் மறுமொழிகள் தெரிந்து வேலை செய்தால், உங்களுக்கு வாழ்த்துகள். மறுமொழி தெரியாவிட்டால் இந்த </body>க்கு மேல் போட்ட வரிகளை தளத்திலிருந்து நீக்கிவிட்டு இங்கு கமெண்டுக, உங்கள் டெம்ளைட்டுக்கு ஏற்ற ஒரு சிறிய மாறுதலுக்கான ஆலோசனை வழங்கப்படும்
உபபடங்கள்:
உங்களது தளத்தின் முகப்புப் பக்கத்தில் தெரிவதே உங்களது BLOGID
மறுமொழிப் பெட்டியில் தெரியும் [@][/@]யை அழிக்கக் கூடாது அப்படியே உங்கள் பதில் மறுமொழியை கொடுக்கவும்.
உப தகவல்கள் ஸ்டாண்டர் டெம்பிளைட் அல்லாத தளங்களுக்கு:
- பழைய ரிப்ளை பட்டன் வைத்திருந்தால் அதனை நீக்க வேண்டிய அவசியமில்லை. நீக்கினால் குழப்பத்தை தவிர்க்கும் அவ்வளவே.
- மறுமொழிப் பகுதியில் ஏதாவது வண்ணங்கள், வடிவங்கள், எண்ணிக்கைகள் இருந்தால் அவற்றை பாதிக்காதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
- பழைய nccode ncsort ஆகிய மறுமொழி நீட்சிகள் உடன் இந்த ncreplyயும் இணக்கமாகவே செயல்
படும் - நீச்சல்காரன் இது போன்ற டெம்ளைட் என்றால் <b:loop values='data:post.comments' var='comment'> என்ற வரிகளுக்கு அடுத்து <dt/> என்று போடவேண்டும்
- சில டெம்ளைட்களில் முதல் படியில் <b:include data='comment' name='commentDeleteIcon'/> க்
கு பதில் <data:comment.body/> என்கிற வரிகளுக்கு கீழ் போட வேண்டும்
பிளாக்கர் ஸ்டாண்டர்ட் டெம்பிளைட் உள்ள எந்த தளத்திலும் இது வேலைசெய்யும். கூகிள் வழங்காத [தனிநபர்கள் வழங்கிய] டெம்பிளைட் என்றால் சில மாறுதல்கள் செய்ய வேண்டும் அவ்வளவே.
விரைவில் பல வடிவங்களில் மேம்படுத்தப் படலாம். விரும்பிய வசதிகளை பரிந்துரைக்கலாம். முடிந்தால் பொருத்தப்படும்
பிற்சேர்க்கை: firefox 3.5.6 க்கு கீழ் இவை செயல் படுவதில்லை.
இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்லமுடியுமா?
ReplyDelete[@]c4371461512627687183[/@]நீங்க அட்ரஸ் மாறி வந்திருக்கீங்க
ReplyDelete[@]c1356224088494647017[/@]அற்புதமான வசதி நன்றி -ன்னே
ReplyDelete[@]c4371461512627687183[/@] Testing
ReplyDeleteமுயற்சி செய்து பாக்கிறேன். பகிர்வுக்கு நன்றி...
ReplyDeletegud information
ReplyDelete[@]c8635419130647428363[/@]இன்னுமா பாக்குற சீக்கிரம் பார்த்து சொல்லுப்பா...
ReplyDeleteசார் சூப்பர் விஷயம் சார். ரொம்ப நாளா இந்த வசதிக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். இந்த நீட்சியை நானும் ட்ரை பண்ணி பாக்குறேன்...
ReplyDeleteஇங்கு மேலே ஒரு அனானி கமென்ட் போட்டு உள்ளார். அதில் அந்த REPLY ஆப்சன் வரல... அனானிகேல்லாம் எதுக்கு பதில் சொல்றதுன்னு விட்டுடீங்களா.. ஹா ஹா
[@]c949381242709832750[/@]அண்ணே,
ReplyDeleteஅப்படியில்லை, ரிப்ளையாக வந்த கமெண்ட்டுக்கு ரிப்ளை வைக்கவில்லை. தற்போதைக்கு புதிய கமெண்டுக்கு மட்டுமே ரிப்ளை. அடுத்த வெர்ஷனில் எல்லா கமெண்டுக்கும் ரிப்ளை வைக்க முயல்கிறேன்.