Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Tuesday, July 23, 2013

இரண்டு பொது செயலிகளும், மூன்று துறைசார்ந்த செயலிகளும் அறிமுகம்

 ல அலுவலகக் கணினிகளில் வலைப்பதிவுகள் பொதுவாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. தினமும் புதிய புதிய பிரதி தளங்கள்(Proxy site) வந்து கொண்டிருந்தாலும் பிரதி தளங்களும் அவ்வப்போது தடைசெய்யப்படுகிறது. மேலும் ப்ராக்சி தளங்களைத் திறப்பதும் நல்ல ஆரோக்கியமானதாக அலுவலகங்களில் கருதப்படுவதில்லை. இதற்கெல்லாம் கொஞ்சம் தீர்வாக கூகிள் ரீடர் என்றொரு சேவை இருந்தது. ஆனால் சமீபத்தில் கூகிளின் மூடுவிழாக்களுள் அதுவும் ஒன்றானது. இந்நிலையில் புதிதாக எந்தவித இணைய தள உரைகளைப் படிக்கும் ஒரு தளம் அறிமுகமாகியுள்ளது. இதனை உரை பிரதி தளம்(text proxy) என்றுகூட சொல்லலாம். இத்தளம் யாரையும் எத்தளத்திற்கும் மாற்றிவிடாது, அதற்குப் பதில் கொடுக்கப்படும் இணைய முகவரியை கூகிள் தானியங்கிகளின் துணையுடன் படித்து அதன் எழுத்துக்ககளை நமக்குக் காட்சிப்படுத்தும். அரசியல் ரீதியாகச் சொல்வதென்றால், அயல்நாட்டு தகவல்களை யாருக்கும் தெரியாமல் திரட்டிவரும் ஒற்றன் எனலாம். இங்கிருந்தவாறே ஏறக்குறைய அனைத்து தளங்களின் உரைகளைப் படிக்கலாம். அத்தளங்களின் விளம்பரத் தொல்லையோ, தரவிரக்கத் தொல்லையோ இருக்காது. உரைகளும், இணைப்புகளும் தவிர ஒளிப்படங்கள், காணொளிகள் மற்றும் வடிவமைப்புகள் முதலியவைப் பொதுவாகக் காட்டப்படாது. முக்கியமாக, தமிழ்த் திரட்டிகளின் முகவரியை இட்டு அதில் காட்டப்படும் வலைப்பதிவு முகவரிகளைக் கண்டு, ஒரு சொடுக்கின்(on click) மூலம் வலைப்பதிவுகளையும் படிக்கலாம். அதில் அனுகூலமான விசயம் யாதெனில், வெவ்வேறு பக்கங்களை உலாவில்(Browser) திறந்து படிப்பதைவிட இதன் மூலம் உரைகளை மட்டும் எடுத்துப் படிப்பதால் இணையப் பயன்பாடும் அதனைச் சார்ந்த கட்டணங்களும் குறையும்.
  http://apps.neechalkaran.com/ottran
மிழ்ப் பதிவுகளில் பிரதான சேவை தளம் பிளாக்கர்.காம் தான். அத்தகைய ப்ளாக்கர் வலைப்பதிவுகளுக்கென பிரத்தியேக ஒரு செயலி அறிமுகமாகியுள்ளது. blogspot.com ஆகயிருந்தாலும் சரி, custom domain ஆக இருந்தாலும் சரி இச்செயலி எந்தவொரு பிளாக்கர் தளத்தின் புள்ளிவிபரங்களையும் பட்டியலிடும். scan என்ற பித்தானை அழுத்தியவுடன் அத்தளத்தின் ஜாதகத்தை அலசி உங்கள் திரையில் பூசும். அதன் வயது, மொத்தப்பதிவுகள், மொத்த மறுமொழிகள், இன்னபிறவும் பட்டியலிடும். மேலும் பிளாக்கர் பதிவுகளைப் படிக்க மட்டும் பயன்படும் ஒரு read பித்தானும் உள்ளது. இதன் மூலம் ஒரு பிளாக்கர் தளத்தின் பிற விசயங்களை நீக்கி வெறும் பதிவை மட்டும் மறுமொழி இணைப்புடன் காட்டும். படிப்பதற்கு எளிதாகும்.
  http://apps.neechalkaran.com/blogger

துறைசார்ந்த செயலிகள்: 
ரு வலைத்தளத்தில் எந்ததெந்தத் தளங்களுக்கெல்லாம் நேரடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என கண்டுபிடிக்க இச்செயலி உதவும். அகயிணைப்பு மற்றும் புறயிணைப்பு என்று இருவிதமாகப் பிரிக்கலாம். வெளித்தள இணைப்புகளைப் பார்க்க புறயிணைப்பு(External) என்றும் அதே தளயிணைப்புகளைப் பார்க்க அகயிணைப்பு(Internal) என்றும் தேர்வு செய்து கொள்ளலாம்.
http://apps.neechalkaran.com/link-finder

விக்கிப்பீடியாவில் நீங்கள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் எழுதுகிறீர்கள் என்றால் உங்களுக்கான செயலி விக்கிமாற்றி. இங்கு எந்தவொரு மொழியைச் சேர்ந்த விக்கி நிரல்களை இட்டு மற்ற வேண்டிய மொழியில் உள்ள அகயிணைப்புகளை மொழி மாற்றிக்கொள்ளலாம்.

http://apps.neechalkaran.com/wikiconverter
விக்கிப்பீடியாவில் எந்த எந்தப் பக்கங்கள் அதிகம் பார்க்கப்பட்டுள்ளது என அறிந்து கொள்ள விக்கிக் கணிப்பான் என்ற செயலி உதவுகிறது. எம்மொழி விக்கிப்பீடியாவாகினும், அம்மொழிக் குறியீட்டை இட்டு அதன் பக்கங்களைக் கொடுத்தால் அதிகம் பார்க்கப்பட்ட மதிப்பின் படி பட்டியல் இடும். பதிவர் மொழியில், கடந்த மாதத்தில் அதிகம் ஹிட் வாங்கிய ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள் பின்வருமாறு,
 
http://apps.neechalkaran.com/wikicalculator

 

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

http://apps.neechalkaran.com/link-finder

http://apps.neechalkaran.com/link-finder

இரண்டும் ஜாதகத்தை சரியாக சொல்கிறது...! நன்றிகள்... வாழ்த்துக்கள்...

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

மிக பயனுள்ள புதிய தகவல் திரட்டு .இப்படி புது விசயங்களை சொல்லுவது இணைய பக்கங்களுக்கு காசு கொடுத்து வந்து போவோர்களுக்கு மிகவும் பயனாக இருக்கும் .தொடருங்கள் இப்படியே ...வாழ்த்துக்கள்

SNR.தேவதாஸ் said...

சிறப்பான ஒரு பதிவு.தொடரவேண்டும்.வாழ்க வளமுடன்கொச்சின் தேவதாஸ்