Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Saturday, February 10, 2018

Info Post

அகரவரிசை என்பது ஒரு மொழியின் பல சொற்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி ஒழுங்குப்படுத்தும் முறையாகும். இது மொழி இலக்கணத்திற்கு நேரடி தொடர்பில்லை என்றாலும் மொழியினைப் படிப்பவருக்கு எளிதாக்கவே அகரவரிசை பயன்படுகிறது. தற்காலத்தில் குறிப்பாகக் கணினி பயன்பாட்டுச் சூழலில் அகரவரிசைப் படுத்தலுக்குப் பல கருவிகள் உள்ளன. பொத்தானை அழுத்தினால் அகர  வரிசையில் சொற்களை ஒழுங்குப்படுத்த முடியும். பெரும்பாலும் மைக்ரோசாப்ட் போன்ற சொல்லாளர்களில் sort செய்து கொள்கிறோம். ஆனால் தமிழில் அகரவரிசைப்படுத்தி எழுதுதல் என்பது பொதுவாக ஒரே மாதிரி இருந்தாலும் இரண்டு முக்கிய குழப்பங்கள் நிகழ்கின்றன. மேலும் கிரந்த எழுத்தும், நகர, னகர, லகர,ளகர, ழகர ஒழுங்கும் மாற்றுகின்றன.




இந்த மூன்று குழப்பங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். ஆயுத எழுத்தான "ஃ" என்பது சில இடங்களில் "அ"விற்கு முன்னும் "ஔ" விற்குப் பின்னும் வருகிறது. அடுத்து ஒற்றெழுத்துக்கள் உயிர்மெய் எழுத்திற்கு முன்னும்  பின்னும் வருகின்றன. அதாவது "க"க்கு முன் "க்" அல்லது "கௌ"க்குப் பின் "க்". இவ்விரண்டு குழப்பங்களும் பல பரவலாகப் புழக்கத்தில் உள்ளன.  இறுதியான குழப்பமான ஒழுங்கு மாறுதல் என்பது ஒருங்குறி வரிசையில் ஏற்பட்ட வரிசைமுறையே காரணம். ஒருங்குறியில் நுட்பக் காரணங்களால் ஃ, அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, க, ங, ச, ஜ, ஞ, ட, ண, த, ந, ன, ப, ம, ய, ர, ற, ல, ள, ழ, வ, ஶ, ஷ, ஸ, ஹ என்றே வரிசைப்படுத்தியுள்ளனர். இதனால் சராசரி கணினி மென்பொருள் சகரத்திற்குப் பின் ஜகரம் என்றே தமிழில் வரிசைப்படுத்தும். இது நுட்பப் பிழை என்பதால் முறையாகத் திருத்தி எழுதிவிடலாம்; அதுசரி என்று நமக்கு விளங்குகிறது. மைக்ரோசாஃப்ட் 2010 பதிப்பிற்குப் பின் அதன் வரிசைப்படுத்தலில் இச்சிக்கலை நீக்கியுள்ளது. அதே போல சில மென்பொருட்களும் இந்தச் சிக்கலைச் சீர் செய்தாலும் மேலே சுட்டியுள்ள இரு குழப்பம் இன்னும் நீடிக்கின்றன. 


முதலில் எது சிறப்பான வரிசைப்படுத்தல்? அகர முதல எழுத்தெல்லாம் என்றே வழங்குவதால் ஃ என்பது ஔ'விற்குப் பின்னே வருதல் சிறப்பெனலாம். அகரம் தாம் மொழியின் முதல் எழுத்து. ஒரு அகராதியில்  "கல்வி" முதலில் வருமா அல்லது "கலை" முதலில் வருமா? "வெறுப்பு" முதலில் வருமா அல்லது "வெற்றி" முதலில் வருமா? என்று பார்க்க வேண்டும். திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக அகராதி, கோனார் தமிழ்க் கையகராதி, வீரமாமுனிவரின் சதுரகராதி, இலங்கை அகராதிகள் போன்ற பல நூல்களின் அகரவரிசைப்படுத்தலில் உயிர்மெய்க்குப் பின்னே மெய் எழுத்து வருகிறது.   ஆனால் ஞா. தேவநேயப் பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் நூல், த.இ.க. அகராதிகள் போன்றவற்றில் ஒற்றுக்குப் பின்னரே உயர்மெய் வருகிறது. எவ்வாறு ஃ என்பது ஔ'விற்குப் பின்னே வருதல் சிறப்பென்கிறோமோ அதுபோல "கௌ"விற்குப் பின்னே "க்" வருதல் சிறப்பு எனக் கொள்ளலாம். கீழ்க்கண்ட வரிசையே சீரானது அதையே பயன்படுத்துவோம்.
கா
கீ
கீ
கு
கூ
கெ
கே
கை
கொ
கோ
கௌ
க்
ங்
சா
சி
சீ
சு
சூ
செ
சே
சை
சொ
சோ
சௌ
ச்
ஞ்
ட்
ண்
த்
ந்
ப்
ம்
ய்
ர்
ல்
வ்
ழ்
ள்
ற்
ன்
ஜ்
ஷ்
ஸ்
ஸ்ரீ
ஹ்

கூகிள் விரிதாளில்(google spreadsheet) அகரவரிசையில் ஔ'விற்குப் பின் "ஃ". கௌ'விற்குப்பின் "க்" வருகின்றன.
லிபரல்ஆபீஸ் கால்க் (Libre calc) அகரவரிசையில் ஔ'விற்குப் பின் "ஃ". கௌ'விற்குப்பின் "க்" என்று சரியாக வருகின்றன.
மைக்ரோசாப்ட் விரிதாளில் (MS Excel) அகரவரிசையில் அ'விற்கு முன் "ஃ", கௌ'விற்குப்பின் "க்" என்று மாறி வருகின்றன. இதனைச் சரிசெய்ய முயற்சி எடுக்கப் பட்டுள்ளது.
மீடியாவிக்கி மென்பொருள் பயன்படுத்தும் விக்கிப்பீடியா, விக்சனரி, நூலகம்.ஆர்க் போன்றவற்றிலும் சில வரிசைகளில் சீரில்லை. அவையும் மாற்றப் படவேண்டும். இனி தமிழ்க் கணினியில் உருவாகும் கருவிகளில் இதனை உறுதி செய்ய வேண்டியது ஒவ்வொரு பயனரின் பொறுப்பு. அதற்கான அடிப்படை அல்லது மாதிரி நிரலும் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. PHP மொழியில் இந்த வரிசைப்படுத்தலுக்குத் தேவைப்படும் நிரல் இங்கே பகிரப்பட்டுள்ளது.
http://sandbox.onlinephpfunctions.com/code/32877f8ed3b48928451bca1de9e23b0c99123114

ஜாவாஸ்கிரிப்ட்டில் செய்யும் நிரல் இங்கே

இதுபோல அனைத்து கணினி மொழியிலும் தமிழுக்கு ஏற்ப வரிசைப்படுத்த முடியும். சாதாரணப் பயனர்கள் தங்கள் சொற்களை இணையத்தில் அகரவரிசைப்படுத்த சுளகு (http://dev.neechalkaran.com/p/sulaku.html) கருவியைப் பயன்படுத்தலாம்.

3 comments:

Muthu said...

பகிர்வுக்கு மிக்க நன்றி. சிறப்பான தமிழ்/தமிழர்க்குத் தொண்டு. எனக்கு மிகவும் உதவும் பல செயலிகள் கண்டேன். கட்டாயம் பயன் செய்து மகிழ்வேன். பாராட்டுகளுடன், மேலும் தொடர வாழ்த்துகள்! -- http://muthuputhir.blogspot.com/

நவரத்தினங்கள் said...

நவரத்தினங்கள் அகரவரிசை

முனைவர் கு. பத்மநாபன் முனைவர் க. கதிரவன் said...

ஆய்த எழுத்து உயிர் எழுத்துக்குப் பின் வருவது சரி. ஆனால் அதனைக் காரணம் காட்டி மெய்யெழுத்துக்களை உயிர்மெய்யெழுத்துக்களுக்குப் பின் வரவேண்டும் என்று கூறுதல் பிழை. க என்னும் உயிர்மெய் எழுத்து க்+அ எனப் பிரியும். முதலில் மெய் எழுத்தும் பின்னர் உயிரெழுத்தும் கொண்டிருப்பதே உயிர்மெய் எழுத்து. எனவே வரிசைப்படுத்தும்போது மெய் எழுத்துக்குப் பின்னரே மெய்யும் உயிருமாய் அமையும் உயிர்மெய்யெழுத்து இடம்பெற வேண்டும். அந்த வரிசையே சிறப்புடையது.அறிஞர்கள் இன்று முன்வைப்பது.