ஒவ்வொருவரும் இணையத்தில் தாய்மொழிக்குச் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. அவரவர் விருப்பமான இடங்களில் பங்களித்து வருவீர்கள். கணினியிலும் கைப்பேசியிலும் ஆங்கில எழுத்தில்லாமல் தமிழ் எழுத்தில் தமிழில் எழுதுவதே பெரிய பங்களிப்பாக இருக்கிறது. பொதுவாக சமுகத்தளங்களில் தமிழில் எழுதுதல், வலைப்பதிவு, மின்னூல்கள், வலையொளி போன்று தமிழ் வளங்களை அதிகப்படுத்துதல் முக்கியப் பங்களிப்பு. இருந்தாலும் பொது நோக்கில் தன்னார்வமாகப் பங்களிக்கக் கூடிய இடங்கள் பல உள்ளன. அதைத் தொகுத்துப் புதியவர்களுக்கு உதவும் வகையில் இணையத்தில் பங்களிக்கக் கூடிய ஒரு பட்டியல் கீழே தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பிடிஎப் நூல்களை மெய்ப்புப் பார்த்து மின்னூலாக விக்கிமூலத்தில் மாற்றலாம். பொதுவுரிமையில் உள்ள தமிழ் அச்சு நூல்களை எல்லாம் கணினிமயப்படுத்தும் பெரிய முயற்சி.
https://crowdsource.google.com/ கூகிள் தகவல் திரட்டலில் தமிழ்த் தரவுகளைச் சரிபார்த்து உதவலாம்
இந்திய மொழிகளில் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளுக்கு உதவும் தரவுகளைச் சேகரிக்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட பாஷினி என்ற தளமுள்ளது. அதில் தமிழ்த் தரவுகளைப் பங்களித்து உதவலாம்.
https://bhashini.gov.in/bhashadaan/ta/
https://commonvoice.mozilla.org/ta/languages மொசில்லா பொதுக் குரல் திட்டத்தில் தமிழில் பேசிப் பங்களிக்கலாம்
தமிழர் வரலாற்று நூல்களைமின்னாக்கம் செய்யலாம். https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:மின்னியம்_திட்டம் https://t.me/minniyamkuzhu என்ற டெலக்ராம் குழுவில் இணைந்து. மின்னூல் உருவாக்க உதவலாம்.
தமிழில் கலைச்சொல்லாக்கம் வளர இணையத்தில் உள்ள கட்டற்ற அகரமுதலியான விக்சனரியில் சொற்களை மேம்படுத்தலாம், சேர்க்கலாம்.
இயந்திரங்களும் தமிழ் படிக்க உதவும் விக்கித்தரவு போன்ற தளங்களில் தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் கொடுத்துத் தரவுகளை அதிகரிக்கலாம். உலக மொழிகளுக்காக உருவாக்கப்பட்ட லேக்சிம் பகுதியும் உள்ளது.
https://www.wikidata.org/wiki/Wikidata:Main_Page
உலகின் முதன்மையான கலைக் களஞ்சியத்தில் தமிழில் கட்டுரை எழுதலாம், உள்ள கட்டுரையை விரிவுபடுத்தலாம், படங்களைக் கொடையளிக்கலாம்.
தற்போது மொழிகளுக்கிடையே ஒரு கட்டுரைப் போட்டியும் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு தமிழ் விக்கிப்பீடியாவை வெற்றி பெற வைக்கலாம்.
பல கட்டற்ற அமைப்புகளின் தளங்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் தேவை உள்ளது. அவற்றினை மொழிபெயர்க்கலாம்.
https://wiki.hyperledger.org/display/I18N/Tamil+Documentation+Working+Group
சிறுவர் படக்கதைகளைத் தமிழில் மொழிபெயர்க்கலாம்.
https://storyweaver.org.in/stories?language=Tamil&sort=Ratings
ஆர்வமிருந்தால் கீழ்க்கண்ட முகநூல் குழுக்களில் இணைந்து மொழிசார்ந்த உரையாடலில் கலந்து கொள்ளலாம்.
https://www.facebook.com/groups/col.aayvu
https://www.facebook.com/groups/tamilsol
https://www.facebook.com/groups/vaanieditor
மேலும் ஆர்வமிருந்தால் கணினித் தமிழ் சார்ந்த கூகிள் குழுக்களில் இணைந்து புதிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
kanittamiz@googlegroups.com
freetamilcomputing@googlegroups.com
kanitamizhjobs@googlegroups.com
பின் குறிப்பு:
- விடுபட்டத்தை நீங்களும் மறுமொழியில் சுட்டிக் காட்டலாம்.
நன்று... நன்றி...
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDelete