Pages - Menu

Sunday, February 26, 2023

தமிழ் இலக்கண உரையாடி

 முறையான விதி நுணுக்கங்களைக் கற்றுத் தராததாலேயே தமிழ் இலக்கணம் பல மாணவர்களுக்குக் கடினமாக இருக்கிறது. அந்த இலக்கணத்தை முறைப்படுத்தி, கற்பதற்கு எளிதாக ஒரு வழிகாட்டி மரமாக(Decision Tree) விதிகளை உருவாக்கமுடியும். அதாவது இலக்கணத்தைக் கற்பதற்காகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். அந்த வகையில் சாட்பாட் எனப்படும் உரையாடிகள் கற்றலுக்ககாக உலக அளவில் பிரபலமாகி வருகின்றன. அந்த அளவில் செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்குவதற்கு மாறாக விதியடிப்படையிலும் உரையாடிகளை உருவாக்கலாம். தமிழில் ஏற்கனவே ஆயிதழ் அவினி, இ-சேவை போன்ற உரையாடிகள் உள்ளன. கடந்த ஆண்டு சாட்விக்கி என்ற பொது அறிவு கேள்விகளுக்கான ஒரு தமிழ் உரையாடி அறிமுகமானது. அது போல இன்று தமிழ் இலக்கணங்களைக் கற்றுத் தரும் ஒரு உரையாடி அறிமுகமாகியுள்ளது.

செயல்முறை விளக்கம்:


    

உரையாடி உரலி: 

https://vaanieditor.com/chatbot

முழு இலக்கணத்தையும் மொத்தமாகப் பாடநூலில் படிப்பதைவிட ஊடாடக்கூடிய அளவில் கொடுக்கும் போது நினைவு வரைபடத்தில் எளிதில் நிற்கும். அந்த வகையில் இந்த உரையாடல் தெளிவினைத் தரலாம்.  #நற்றமிழ்பழகு என்ற தொடருக்காக லட்சத்திற்கும் மேற்பட்ட பிழைகளை அலசிய எடுத்துவரும் குறிப்புகளை அப்படியே இந்த உரையாடிக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் மெருகேற்றவேண்டிய பகுதிகள் உள்ளன. ஆனால் இந்த நிலையிலும் நல்ல விளக்கங்களைத் தருகிறது. இது Menu based Chat என்பதால் அனைத்து விதமாக வழியிலும் தற்போதைக்கு உரையாட இயலாது. எதிர்வரும் காலங்களில் இயற்கை மொழிப் பகுப்பாய்வு நுட்பங்களைக் கொண்டு உரையாடும் நிலை ஏற்படும். இதில் இணைக்க வேண்டிய  இலக்கண நுட்பங்களைச் காட்டலாம். தேவைப்படும் மாணவர்களிடம் பகிரலாம். படவடிவில் குறிப்புகளைப் பெற https://www.instagram.com/tamilgrammar/ பக்கத்தைப் பயன்படுத்தலாம்.


மேலும் இந்த உரையாடி கட்டமைப்பானது(framework) தெளிவான நோக்கத்தைக்(intent) கொண்டு எல்லாத் துறைக்கும் அமல்படுத்த முடியும். தற்போதைக்கு திருக்குறள், விவசாயம், கல்வித்துறையில் மேலும் சில உரையாடிகள் உருவாக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் உங்கள் துறை சார்ந்த தெளிவான வழிகாட்டி மரம் இருந்தால் அதற்கான உரையாடிகளை உருவாக்கலாம். ஏற்கனவே சமூகம் சார்ந்து பல்வேறு தலைப்புகளில் உருவான சில வழிகாட்டி மரங்கள் இங்கே உள்ளன. இவற்றை மாதிரியாகக் கொண்டு நோக்க மரத்தை(Intent Tree) உருவாக்கி அதை உரையாடியாக மாற்றிக் கொள்ளலாம்.

இந்த இலக்கண உரையாடியைப் பயன்படுத்தலாம். நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டலாம்.

1 comment:

  1. அவசியம் பயன்படுத்துகிறேன்... திருக்குறள் கணக்கியல் ஆய்விற்கு சுளகு உதவுவது போல் இதுவும் உதவும்... நன்றி...

    வாழ்த்து...

    ReplyDelete

"கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
உங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது