Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Thursday, April 12, 2012

பாரதத்தின் எண்ணெற்ற கலாச்சாரக் கண்டுபிடிப்புகளுள் ஒன்று கோலம். முக்கியமாக தென்னிந்தியாவில் பிரசித்திப் பெற்ற கலாச்சாரமாகும். கோலங்கள் வாசலுக்கு மட்டும் விருந்தாளியல்ல, கூரை ஓவியமாக கோவில்களிலும் மண்டபங்களிலும் விருந்தாளியாகக் காணலாம். வாசல் கோலங்கள் இடுவதென்பது ஒரு கலையே அதுவும் பண்டிகைக் காலங்களில் நம்மூர் பெண்கள் பட்டையைக் கிளப்புவார்கள். ஓவியம் என்பது தனியொரு கலையாகயில்லாமல் அன்றாட வாழ்வில் கலந்தவொன்றாவிட்டது. அம்மாதிரி கலை மரபு வழியே வந்ததாலோ என்னவோ திராவிடக் கட்டிடக் கலையில் தனி முத்திரை கொண்டுள்ளோம்.
கோலசுரபி 


இத்தகைய கோலங்கள் இணைய வெளிகளில் பரவலாக படங்கள் வடிவில் பகிரப்படுகிறது. கோலம் சம்மந்தமான மென்பொருட்கள் எதிர்காலத்தில் அதிகம் வரலாம். தற்போதைக்கு கோலம் வடிவமைக்கும் மென்பொருட்கள் அதிகமில்லை ஆனால் இதுவரை இணையத்திலிருந்து செயல்படும் ஒரே ஒரு செயலி இங்கேவுள்ளது. அந்தவரிசையில் கோலசுரபி என்ற ஒரு புதிய செயலி தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழ்ப்புள்ளியின் மூன்றாமாண்டு பிறந்த நாளன்று அறிமுகமாகும் இச்செயலியின் மூலம் தான்தோன்றித்தனமாக பல கோலங்கள் உருவாக்கி பயன்படுத்திக் கொள்ளமுடியும். 3X3 முதல் 20X20 புள்ளிகள் வரை இதில் உருவாக்கிக் கொள்ளலாம். இதன்மூலம் வளை கோடுகள் மற்றும் கம்பிக் கோடுகள் கொண்ட கோலங்களை வேண்டிய அளவுகளில் பெற்றுக் கொள்ளலாம். சதுரம் அல்லது சாய்சதுர வடிவிலும் உருவாக்கிக் கொள்ளலாம். தான்தோன்றித்தனமான கோலங்கள் என்பதால் ஒருமுறை வந்த கோலங்கள் மறுமுறை வருவதறிது அதனால் ரசனையுள்ள கோலங்களை Screenshot மூலம் படங்களாகவும் சேமித்துக் கொள்ளலாம்.

கோலம் அறியாத "பேதை"களுக்கும் , கோலம் பழகும் "பெதும்பை"களுக்கும், கோலம் தேடும் "மங்கை"களுக்கும், கோலம் வரையும் "மடந்தை"களுக்கும், கோலமிட்டுக் கலக்கும் "அரிவை"களுக்கும் இச்செயலி மேலும் உதவும்.


கோல சுரபியின் நிறைகுறைகளும், அபிவிருத்தி ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது
அனைவருக்கும் நந்தன தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

16 comments:

Anonymous said...

நல்ல படைப்பு

நன்றி

குறையொன்றுமில்லை. said...

அனைவருக்கும் நந்தன தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

rajamelaiyur said...

பெண்களை கவரும் செயலி .. அருமை

rajamelaiyur said...

இன்று

கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை ..(புத்தாண்டு ஸ்பெஷல் )

மாசிலா said...

அற்புதம், ஆச்சரியம்! நீங்கள் கொடுத்திருக்கும் தள தொடர்புகளில் சென்று கொஞ்சம் அலசி பார்த்தேன். மிக மிக அற்புதமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. நல்ல உழைப்பு. பாராட்டுக்கள். (அங்கு எனது கருத்துக்களை பதிக்க இயலவில்லை.)பகிர்வுக்கு மிக்க நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள பதிவு ! நன்றி !

Anonymous said...

தி கோலம் கேநேரடோர் இஸ் வொந்டெர்புல். குலத் யு தேடேர்மின் ஹொவ் மனி லிங்ஸ் இட் உசெஸ்? இ மேதான் புட் இன் புட்டோன்ஸ் டு சூசே ௧ லைன் ௨ லிங்ஸ் ௩ ஓச மோர் லிங்ஸ்.

T Senthil Durai said...

அருமை

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உங்கள் பதிவைப் பற்றி இன்றைய வலைசரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருப்பின் வருகை தரவும்
http://blogintamil.blogspot.in/

சிவம் said...

அன்புள்ள நண்பரே பெண்களுக்கு மிகவும் பிடித்ததொரு செயலியைத்தான் கொடுத்துள்ளீர்கள். இதை அப்படியே இமேஜாக சேமிப்பதற்கு ஏதேனும் வழியுள்ளதா? இணையத்தில் ரங்கோலி டிசைன் வரைவதற்கு ஏதேனும் செயலி உள்ளதா? தெரிநத்தால் தெரிவிக்கவும். நன்றி

சிவம் said...

அன்புள்ள நண்பரே பெண்களுக்கு மிகவும் பிடித்ததொரு செயலியைத்தான் கொடுத்துள்ளீர்கள். இதை அப்படியே இமேஜாக சேமிப்பதற்கு ஏதேனும் வழியுள்ளதா? இணையத்தில் ரங்கோலி டிசைன் வரைவதற்கு ஏதேனும் செயலி உள்ளதா? தெரிநத்தால் தெரிவிக்கவும். நன்றி

நீச்சல்காரன் said...

நான் தேடியவரை ரங்கோலிக்கு எந்தச் செயலியும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தக் கோலங்களைப் படமாக சேமிக்க printscr [திரையச்சு] பித்தானை மூலமே தற்போது எடுக்கமுடியும். முடியுமானால் அவ்வசதியைத் தரமுயல்கிறேன்.

சிவம் said...

நன்றி நண்பரே

ADHI VENKAT said...

அன்புடையீர்,

உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.

http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_10.html

தங்கள் தகவலுக்காக!

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கம்

கோமதி அரசு said...

வாசல் கோலங்கள் இடுவதென்பது ஒரு கலையே //
உண்மை.கோலசுரபி அறிமுகம் அருமை.வாழ்த்துக்கள்.

Anonymous said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-