Mobile version | RSS Feed |
புதியவை
Loading...Wednesday, February 1, 2012

பிளாக்கர் அண்மையின் தனது பிளாக்கர் சேவை வலைப் பூக்களின் மேல் நிலைக் களப்பெயர்களை[top level domain] சில நாடுகளுக்கு ஏற்றார்போல மாற்ற ஆரம்பித்துள்ளது. முக்கியமாக இந்தியாவும் இருப்பதால் இந்திய எல்லைக்குட்பட்ட இணையத்தின் வழியாக வருபவர்களுக்கு வலைப்பூக்கள் .in என்ற இறுதியொற்றுடன் வலைப்பூக்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. அமைப்பு ரீதியாகப் பார்த்தால் உண்மையில் பிளாக்கர் தளம் இத்தகைய டொமைன் மாற்றத்தை வழிமாற்றியின்[Redirect] மூலமே செய்கிறது. அதாவது .com என்பதுதான் வழங்கியின் மூலப் பெயர் உதாரணத்திற்கு உங்கள் செய்தியோடைகள்{RSS feeds} எல்லாம் .comலிருந்தே செயல்படுகிறது. ஆனால் வெளிப்புறத்தில் மட்டுமே .in செயல்படுகிறது. இதனால் பழைய இணைப்புகளோ பழைய முகவரியோ தவறாகாது அதுவும் செயல்படும். அதற்காகத்தான் /ncr என்ற பதமும் உள்ளது. http://neechalkaran.blogspot.com/ncr என்று வருவதன் மூலம் இந்த நாட்டு பின் ஒட்டுகளைத் தவிர்க்கலாம். ஆனால் நடைமுறையில் தமிழ்த் திரட்டிகளின் இணைப்புகளை பெற எல்லா வாசகரும் பயன்படுத்துவதென்பது எளிதல்ல. அலெக்சா மதிப்பு நாடுகள் வாரியாக பிரிக்கப்படலாம். உண்மையில் அப்படி குறைந்தாலும் இதனால் சராசரி தமிழ்ப் பதிவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. முன் கூறியது போல அலெக்சா என்பது அக்கருவிப் பட்டை பொருத்திய பயனர்களின் எண்ணிக்கைதான் என்பதால் கூகுளோ அல்லது இதர தேடு தளங்களோ பார்வையாளர்வரத்தை[visitors traffic] கணிக்க அலெக்சாவைப் பயன்படுத்துவதில்லை.

இதன் விளைவுகள்:
இதனால் சில நல்ல விளைவுகளும் உள்ளது. blogspot.com தடைசெய்யப்பட்டுள்ள நிறுவனங்களில் இனி .in மூலம் படிக்கலாம்.அதாவது இந்திய மென்பொருள்[IT], மென்பொருள் சேவை[ITES] மற்றும் இதர நிறுவனங்களில் பிளாக்கர் டாட் காம் தான் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய மாற்றத்தால் .in முகவரியுடன் அவ்வூழியர்கள் படிக்கலாம்.


தமிழ்மணத்தை பொறுத்தமட்டில் நாம் பதிவு செய்த பெயரைத் தவிர மற்ற பெயரில் வலைப்பூ இருந்தால் இணைத்துக் கொள்ளாது. .com என்றே அநேக பயனர்கள் இணைத்திருப்பார்கள் ஆனால் .in என்ற பெயருடன் புதிதாக இணைக்க முனைந்தால் பிழை காட்டும். மீறி வம்பாக இணைத்தால் RSS feeds வழியாக பதிவுகளை உள்ளிழுப்பதால் தமிழ் மணத்தில் .com டொமைனே பதிவுக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதனால் உங்கள் பதிவுக்கு .in கொண்ட இந்தியப் பயனர் ஓட்டிட முடியாது.

இன்டிலி, தமிழ்10 போன்ற இதர திரட்டிகளில் இணைப்பு RSS feeds வழியாக இல்லாததால் நாம் கொடுக்கும் முகவரியே இறுதியானது. .in என்று பதிவு செய்தால் அதை .com வழியாகப் பார்க்கும் வேறு நாட்டினர் பயன்படுத்தமுடியாது. அதேப்போல .com என்று பதிவு செய்தால் .in வழியாக பார்க்கும் இந்தியப் பயனர் பயன்படுத்த முடியாது. .com என்று இணைக்கப்பட்டிருக்கும் பழைய பதிவுகளையும் இந்தியப் பயனர்கள் ஓட்டிட முடியாது.

தீர்வு ஒன்று:
அடிப்படையில் பிளாக்கர் வழங்கியின் பெயர் .com என்று பொதுவாகயிருப்பதால் அதனையே திரட்டியிலும் பயன்படுத்துங்கள். ஓட்டுப் பட்டைகளை மட்டும் சரி செய்ய கீழ் கண்ட நிரலியை <body/> என்ற வரிக்கு மேல் போட்டு சேமிக்கவும். தமிழ் மணத்தில் இணைக்கலாம் ஓட்டிட முடியாது மற்ற திரட்டிகள் எல்லாம் சரியாக வேலை செய்யும்.
<script type='text/javascript'>
document.body.innerHTML = document.body.innerHTML.replace(/blogspot\.in/gi, "blogspot.com");
</script> 

அல்லதுதீர்வு இரண்டு:
பிளாக்கரின் வழிமாற்றி .in என்று தள்ளி விடும் போது நீங்கள் ஜாவாஸ்கிரிட் மூலம் மீண்டும் அதை வழி மாற்றி விட முடியும். உங்கள் ப்ளாகர் டெம்லட்டில் <head> என்ற சொல்லுக்கு கீழே கீழ்க்கண்ட இரண்டு வரிகளைப் போட்டு சேமிக்கவும். இன்டிலி & தமிழ் மணத்தில் இணைக்கலாம்(ஓட்டிடலாம்) மற்ற அனைத்து திரட்டிகளிலும் சரியாக வேலை செய்யும்.
<script type='text/javascript'>
var puthuidam=  &quot;<data:blog.url/>&quot;;
var checker = puthuidam.split(/blogspot\.in/i)
if(checker[1])
{puthuidam = puthuidam.replace(/blogspot\.in/gi, &quot;blogspot.com/ncr&quot;);
window.location =puthuidam;
}
</script>

இரண்டு நிரல்களும்[code] இந்தியவலைப் பயனர்களுக்கு மட்டுமே. பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியல் தெரியாததால், அறிந்தவுடன் இந்நிரலியில் சேர்க்கப்படும்.
திரட்டிகளில் எப்போதும் blogspot.com என்றே பதிவு செய்யுங்கள், .in செய்வதால் மற்ற நாட்டினரால் பயன்படுத்தமுடியாது.
மேல்கண்ட நிரல் கூகிள் வழிமாற்றிக்கு ஒரு எதிர் மாற்றி அனேகமாக எல்லா பழைய வசதிகளும்{அலெக்சா உட்பட} கிடைக்கும் என்பது நமது வியூகம்

உபதகவல்கள்:
கூகிளாரின் ப்ளஸ்ஒன் பட்டன்கள் மட்டும் பெயர் மாற்றத்தால் பாதிக்கப்படுவதில்லை
இந்தியாவின் மூலம் பிளாக்கரிடம் கோரப்பட்ட பதிவு நீக்க கோரிக்கைகள் transparencyreport
மேல்கண்ட நிரல் தமிழ்த் திரட்டிகள் மட்டுமின்றி பேஸ்புக் டிவிட்டர் போன்ற எல்லா சமூகதளங்ககளுக்கும் உதவும்.
பிழைகள் இருந்தால் கருத்திடமும் திருத்தப்படும்.

11 comments:

Lakshmi said...

என்னாலும் தமிழ் மணத்தில் என் பதிவை இணைக்கவே முடியல்லே.

துரைடேனியல் said...

Romba Thanks Sir.

தமிழ்வாசி பிரகாஷ் said...

விளக்க பகிர்வுக்கு நன்றி...

veedu said...

மிக்க நன்றிங்க....பயனுள்ள தகவல்!

விக்கியுலகம் said...

பகிர்வுக்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள தகவல் ! நன்றி நண்பரே !

veedu said...

"அன்புள்ள நண்பரே, அவர்களே உங்கள் வலைதளத்தின் அருமைகளை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி!

veedu said...

"அன்புள்ள நண்பர், அவர்களே உங்கள் வலைதளத்தின் அருமைகளை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி!

கண்மணி/kanmani said...

அடடா காந்தியை சுட்டுட்டாங்களா கதை போல ஒரு வருஷத்துக்கும் மேல தமிழ்மணம் வராமல் இருந்து நடப்பு ஏதும் புரியாமல் மண்டை காய்ந்து பதிவு இணைக்க முடியாமல் தவித்தேன்
நன்றி உங்க தீர்வு இரண்டு கை கொடுத்தது
அப்படியே ஓட்டு பட்டை தெரிய வழி சொல்லுங்க எதிஎ நீச்சல்காரரே
நன்றி

செயபால் said...

மிக்க நன்றி . ஒரு திருத்தம்: தீர்வு இரண்டில், ஒரு முக்காற்புள்ளியை விட்டு விட்டீர்கள். இறுதியில் சேர்க்கவும். var checker = puthuidam.split(/blogspot\.in/i)

அன்பை தேடி,,அன்பு said...

பயனுள்ள தகவல்,thanks brother