Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Monday, March 11, 2024

Info Post

 சொல்லாய்வுக் கருவியான சுளகில், எழுத்து எண்ணிக்கை, சொல் எண்ணிக்கை, சீர் எண்ணிக்கை, மாத்திரை உள்ளிட்ட பல புள்ளிவிவரங்களை எடுத்துத் தருகிறது. அதில் புதியதாக இன எழுத்துக்களையும், நெடுங்கணக்கினையும் கணக்கிட்டு, அழகிய வரைபடமாக வரைந்து காட்டும் வசதி அறிமுகமாகியுள்ளது.

https://apps.neechalkaran.com/sulaku

ஒரு தமிழ் கட்டுரையைக் கொடுத்தால் அதனைக் கூராய்ந்து மொழியியல் தரவுகளை இக்கருவி கணக்கிட்டுக் கொடுக்கும். அதாவது எத்தனை ஓரெழுத்து, ஈரெழுத்து, மூவெழுத்து, நாலெழுத்து, ஐயெழுத்துக் கூட்டல்கள் உள்ளன என்று வரிசைப்படுத்திக் காட்டும். எத்தனை சொற்கள் உள்ளன, அந்தச் சொற்களின் நிகழ்வெண், இரு சொற்களின் நிகழ்வெண், அடிச்சொல், சீர் எனச் சொல்லளவிலும் காட்டும். தற்போது கூடுதலாக எத்தனை அசை என்றும், இன எழுத்துக்களின் விகிதாசாரத்தையும் காட்டுகிறது. குறில் எத்தனை நெடில் எத்தனை, வல்லினம், மெல்லினம், இடையினம் என்று பிரித்து எண்ணிக் காட்டுகிறது.


ஏற்கனவே தமிழ் முறைப்படியான அகரவரிசைப்படுத்தல் வசதி இருந்தது. தற்போது நீளத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது. எதாவது தமிழ்ச் சொற்பட்டியலை அதன் நீளத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்த விரும்பினால் இங்கே செய்து கொள்ளலாம்.

மேலும் ஒரு கட்டுரையில் உள்ள நெடுங்கணக்கைப் பிரித்து அதன் நிகழ்வெண்ணைக் காட்டும். அதாவது ஒவ்வொரு உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும் எண்ணி எத்தனை முறை அவை பயன்பட்டுள்ளன எனக் கணக்கிடுகிறது. இதன் மூலம் ஒரு படைப்பில் எந்த எழுத்து அதிக முறை பயன்படுத்தப்பட்டுள்ளது அதன் பாங்கினை ஆய்வு செய்யலாம். மேலும் பல எழுத்தாளர்களின் படைப்புகளை ஒப்பிட்டும் ஆய்வுகளை மேற்கொள்ள இது உதவும். சில நூல்களின் உள்ளடக்கத்தை இட்டு உருவாக்கிய விகிதப்படத்தைக் கீழே பார்க்கலாம்.

சில உதாரணப் படங்கள்





சுளகு கருவியின் வசதிகளை காட்டும் செயல்முறை விளக்கக் காணொளி இங்கே உள்ளது. ஆர்வமுள்ளோர் பயன்படுத்திப் பார்த்து நிறை குறைகளைச் சொல்லலாம்.



0 comments: