Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Wednesday, March 24, 2010


ஜிமெயிலில் சமீபகாலமாக அதிகமாக புதுப்புது நவீனங்களை அறிமுகப்படுத்திவருகிறது.
ஐ-போன் மற்றும் ஆண்ட்ரோட் மூலம் ஜிமெயிலை திறக்க வசதிகளை அறிமுகப்படுத்தியது. பின் கூகுளின் நேசுஸ் வகை போன்களுக்கு ஜிமெயிலை பிரத்தேகமாக வழங்கியது. அதனுடன் ஜிமெயிலில் பல சின்ன சின்ன வசதிகளை புகுத்தியது மேலும் வணிகரீதியாகவும் கூகிள் அட்ஸ்களை சரியாக மேன்படுத்தியது. எல்லாவற்றையும் விட கூகிள் பஷ்ஷை அறிமுகப்படுத்தி மின்னஞ்சல் உலகில் புதிய பரிமாணத்தை விதைத்தது. ஆரம்பத்தில் சொதப்பினாலும் பின்னாள் பாதுகாப்பை உறுதி செய்து தனது பெருமையைத் தக்கவைத்துக் கொண்டது.



கடந்த வாரம் மற்றொரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, ஸ்மார்ட் ரீஸ்கேடியுளர் (Smart Rescheduler ). அது கூகிள் காலண்டரில் வைக்கப்படும் அலாரம் போன்றது. லாகின் செய்தபிறகு இங்கே செல்லவேண்டும் இந்த காலண்டரில் நீங்க தேவையான நேரத்தில் உங்கள் வேலைகளை குறித்துவைத்துக்கொள்ளலாம். சரியான நேரத்தில் அது உங்களுக்கு எச்சரிக்கைச் செய்யும்.

 இதிலுள்ள வசதிகள்:
உங்கள் காலண்டரை மற்றவருடன் அதாவது சக உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். மேலும் லேப் வசதியில் கூடுதல் மேன்படுகளை பெறலாம்.
அதற்கும் ஒரு படி மேலே உங்கள் மொபைலுக்கும் குறுந்தகவலாகவும் அந்த அலாரச் செய்தி வரவைக்கும் வசதியும் உள்ளது.





எல்லாம் வசதியை பெருக்கியது அதுபோல ஜிமெயிலை ஹாக் செய்பவர்களும் பெருகுகிறார்கள். அதிகமாக ஜிமெயில் கணக்குகள் திருடப்படுவதால் அதற்கு ஒரு எச்சரிக்கையாக நேற்று (24 /மார்ச்/2010) ஒரு புது அலர்ட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது -  "சந்தேக நடமாட்ட கண்காணிப்பு" (Detecting suspicious account activity)  இந்த வசதி நேற்று நள்ளிருள் யாமத்திலிருந்து செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இதன் நன்மைகள் என்ன?
ஹாக் செய்பவர்கள் இரண்டு விதமாக செய்வார்கள் ஒன்று உங்கள் கணக்கை அபகரித்து உங்களுக்குத் தெரியாமல் பின் தொடர்பவர்கள் மற்றொன்று அபகரித்தவுடன் கடவுச்சொல்லை மாற்றி முழு கட்டுப்பாட்டையும் பெறுவார்கள்.

கடவுச்சொல் மாற்றப் பட்டிருந்தாலே இந்த வசதி மூலம் உங்கள் மற்றொரு கணக்கின் வாயிலாக உங்கள் கணக்கை மீட்கலாம் என்பது இதுவரையிருந்தது. இன்று தெரியாமல் பின் தொடர்பவரை இந்த புது வகை அலர்ட்டினால் கண்காணிப்பதும் சாத்தியமாகியுள்ளது. பொதுவாக  //Last account activity: 15 minutes ago on this computer. // என்று உங்கள் ஜிமெயில் கணக்கின் கீழ்பகுதியில் பார்த்திருப்பீர்கள் அதில் கடைசியாக நீங்கள் நுழைந்த கணினியின் ஐ.பி. முகவரியை காட்டும். இப்போது அதில் சந்தேகமாக வேறு ஒரு முகவரியால் கணக்கு திறக்கப்பட்டிருந்தால் உங்கள் பக்கத்தில் இப்படி அலர்ட் கிடைக்கும்.

 அப்போது நீங்க அந்த கடைசி ரேக்கடை எடுத்துப் பார்த்தால் எந்த முகவரிஎன்று கண்டுபிடிக்கலாம். உடனே உங்கள் கடவுச்சொற்களை மீள்பதிவு செய்யலாம்.
இதன் மூலம் உங்களுக்குத் தெரியாமல் யாரும் உங்கள் கணக்கை பின் தொடரமுடியாது.


இந்த ஸ்மார்ட் அலர்ட் ஆரம்பக்கட்ட பஷ்ஷை போல இதுவும் ஒரு சோதனையோட்டம்தான் உங்கள் ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புக்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தலாம்


உங்கள் கணக்கின் பாதுகாப்பிற்கு அவர்களின் ஆலோசனைகள் இங்கே 

7 comments:

ஸ்ரீ.... said...

அருமையான, உபயோகமான இடுகை.

ஸ்ரீ....

Kandumany Veluppillai Rudra said...

தங்களின் தகவல்கள்,மின் அஞ்சல் பாவிப்பவர்களுக்கு பிரயோசனமானது,
தகவலுக்கு நன்றிகள்!

நீச்சல்காரன் said...

ஸ்ரீ, உருத்திரா
உங்கள் ஆதரவால் புது உற்சாகம் வருகிறது
உங்கள் அதரவுக்கு மிக்க நன்றி

smart said...

கூகிள் என் பெயரிலெல்லாம் அலர்ட்டுகள் செய்கிறது

தோழி said...

உங்கள் தகவல்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளவை உங்கள் சேவை மேலும் தொடரட்டும்...

நீச்சல்காரன் said...

தோழி Thanks for your comment
Smart, wishes for you

hai said...

very good website. Some words in Tamil i was unable to understand. But all the posts were written well and very useful. Keep it up.