Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Monday, April 19, 2010

வேகம் என்றுமே விரும்பப்படுவது. அதுவும் விரும்பிப் படிக்கும் இணைய தளங்கள் வேகமாக இல்லாவிட்டால் அந்த விருப்பமே விரக்தியைத் தருவது உறுதி. வேகமாக நமது இணையப் பக்கங்கள் திறக்க விவேகமான யோசனைகளை இந்த இடுகையில் பார்க்கலாம்.
  1. முதலில் அதிகமாக நேரத்தை குடிக்கும் இலவச அழகூட்டும் நிரலிகளை தவிர்ப்பது நலம். உதாரணமாக உங்கள் பக்கத்தை கண்காணிக்க பயன்படுத்தும் டிராக்கர் வகை நிரலிகளும், தரவரிசைப் போடும் நிரலிகளும், பொழுதுபோக்கு விட்கேட்களும்  எனலாம். இவற்றில் முக்கியமான சில வற்றைமட்டும் வைத்துக்கொண்டு மீதியை தூக்கிவிடுவது நல்லது.

  2. உங்கள் முகப்பு பக்கத்தின் இடுகையின் அளவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். மேலும் இடுகையை சுருக்கி காட்டும் படி முகப்புப்பக்கம் அமையட்டும். (எப்படி சுருக்குவது? இங்கே
  3. நீங்கள் பயன்படுத்தும் படங்கள் GIF மற்றும்  BMP போன்ற அதிக கனமான கோப்புகளாக பயன்படுத்துவதை தவித்து jpg jpeg  போன்ற எளிய வகை கோப்புகளாக பயன்படுத்துங்கள்.
  4. பக்கத்தினுள் ஜாவா நிரலியை பயன்படுத்தும் வேளையில் அதனை சுருக்கி(compress) பயன்படுத்தலாம்.  இணையத்திலேயே சுருக்கிக்கொள்ள இங்கு செல்லலாம்.,
    http://dean.edwards.name/packer/
  5. அதுபோல CSS நிரல்களை சுருக்க இந்த சேவையைப் பயன்படுத்தலாம்.
    http://www.cssdrive.com/index.php/main/csscompressor/
  6. உங்கள் மொத்த நிரலியில் உள்ள ஒவ்வொரு இடைவேளையும் சில பைட்டுகளை(byte) தின்னும் அதனால் இடைவேளையில்லாத நிரலியை பயன் படுத்துவது மிகுந்த பயன் தரும். HTML தொடர்பில்லாத இணைய வாசிகளும் தங்கள் நிரலியை சுருக்கிக் கொள்ளவுதவும் தளம்
    http://www.textfixer.com/html/compress-html-compression.php-
    உ.தா) பிளாக்கர்களுக்கு: Dashboard->Layout->Edit HTML சென்று மொத்த நிரலிகளையும் எடுத்து இங்கே போட்டு அதில் வரும் சுருக்கப்பட்ட நிரலியை எடுத்து அதே பொட்டியில் போட்டுக்கொள்ளவும் 
  7. பொதுவாக படங்களை பகிரும் பொது உங்கள் பிளாக்கில் ஏற்றப்பட்ட படங்களாகயிருந்தால் நல்லது.(copyright கொள்கைகளை கவனித்துச் செய்யவும்)  நீங்கள் ஏற்றிய படமானால் அது http://2.bp.blogspot.com... என்று முகவரிகள் தொடங்கும் இதன் மூலம் எளிதில் திறக்கவும் செய்யும். மாறாக வேறு தள படமானால் அந்த தளத்திலிருந்து  கட்டளைகளை அனுப்பித் திறக்க கொஞ்சம் நேரம் எடுக்கும். அதனால் அவரவர் சொந்த தளத்துப் படங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும்.
  8. இப்போது உங்கள் தளம் திறக்கும் நேரத்தை மதிப்பீடு செய்ய வேண்டுமா?  
இந்த தளங்களின் மூலம் நமது தளம் திறக்கும் நேரத்தை கணிக்கமுடியும் இப்போது அந்த நேரம் திருப்திகரமாக இல்லாவிட்டால் நம்பர் ஒன்றாவது வழியைத் திரும்ப முயற்சிக்கவும்.

மேலும் கொஞ்சம் தொழிற்நுட்பம் சார்ந்த யோசனைகளை அடுத்த இடுகையில் வேகமான தளங்களுக்கு விவேகமான வழிகள்-II

14 comments:

கண்மணி/kanmani said...

informative guidelines.good

ஸ்ரீராம். said...

மிக உபயோகமான டிப்ஸ். நன்றி.

SUMAN said...

நன்றி

இன்னும் இன்னும் இந்தக் கத்துக்குட்டி எதிர்பார்க்கிறது... :)

இப்னு அப்துல் ரஜாக் said...

நல்ல விளக்கம்

சுடுதண்ணி said...

அருமையான மற்றும் தேவையானப் பகிர்வு, முக்கியமாக compressing scripts :). மிக்க நன்றி நீச்சல்காரன்.

cheena (சீனா) said...

தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி - முயல்வோம்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Anonymous said...

Is it possible for you to move non-tech posts to a separate blog or tech posts to a separate blog so that you can get into top ten computer blogs?

நீச்சல்காரன் said...

கருத்துப் பகிர்ந்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள் பல

நீச்சல்காரன் said...

@Menporul.co.cc,
Its my pleasure to get my site listed in Top ten. Though this blog is dedicated to share my knowledge, I do post only the informative posts. As of my knowledge non-tech posts are not here.

Thanks

நீச்சல்காரன் said...
This comment has been removed by the author.
Anonymous said...

Nice Info....

www.onedayonline.co.cc

RAJENDRAN said...

வேகமான தளமகளுக்கு விவேகமான வழிகள் I மிகவும் பயனுள்ளதாக இருந்த்தது. நன்றி

மாய உலகம் said...

அவசியமான தகவல் நண்பரே நன்றி

David said...

உங்கள் உதவிக்குறிப்புகள் மற்றும் இணைப்புகள் அருமை. உங்கள் பட்டியலுக்கான மற்றொரு கருவி இங்கே.
https://url-decode.com/cat/
இங்கே, உங்கள் வலைத்தளத்தின் எஸ்சிஓ தரவரிசையை மேம்படுத்துவதற்கான பல்வேறு கருவிகளை நீங்கள் காணலாம், இதில் மினிஃபிகேஷன், பட மேம்படுத்தல் மற்றும் பல.