Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Tuesday, June 22, 2010

[For Non-Tamil please follow the latter part of this article]
தமிழ் கற்க பலர் விரும்பி வாய்ப்புக்களை அறியாமல் இருக்கின்றனரோ என்ற எண்ணம். அதனால் புதிதாக செம்மொழி தமிழைக் கற்பவர்களுக்காக இந்த பதிவை பதிவு செய்கிறேன். விரும்புபவர்களுக்கு இதை அறிமுகப் படுத்தி விருந்தாக்குங்கள்.
http://www.thetamillanguage.com/
இந்த தளமும் பென்னிசுலேவினியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்படுள்ளது. இதில் தமிழுக்கு மிகவும் புதியவர்கள் பயன்படுத்தும் வண்ணம் எழுத்துப் பூர்வமாகவும் ஒலி ஒளி வடிவமாகவும் பாடங்கள் நடத்துகிறார்கள். புதியவர்களுக்கு சிறந்த தளம்.

முந்தய இணைய மாநாட்டின் விளைவாக உருவான தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தளம். தமிழ் கற்றவர் மற்றவருக்கு கையைப் பிடித்து கற்றுக்கொடுக்க உதவும் நல்ல தளம். பாட புத்தகங்களை  தரவிறக்கலாம். மேலும் தமிழுக்கு உதவும் மற்ற வசதியான் அகராதி வசதியும் தருகிறது. மேலும் பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளும் கட்டணங்களின் கீழ் வழங்கப்படுகிறது.

பென்னிசுலேவினியா பல்கலைக் கழகத்தின் தமிழ்க் குழு சார்பாக அமைக்கப்பட்ட இந்த தளத்தில் முதல், இடை, கடை நிலை வாரியாக பாடங்கள் தொகுக்கப்பட்டு ஒரு அமைப்புசார் கற்றலைத் தருகிறது.

தமிழ் பாட நூல் தளத்தை வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது. ஆங்கில வழியில் விளக்கங்கள் அமைந்துள்ளதால் புதியவர்களுக்கு பயனுள்ளதாகும். பி.டி.எப். கோப்புகளாகவும் தரவிறக்க உதவுகிறது. முப்பது நாளில் தமிழ் கற்க நினைப்பவர்கள் இந்த தளத்தை அணுகலாம்.

இது இலவசமாக சிறு சிறு பி.டி.எப். கோப்புகளாக தொடக்க நிலை மாணவர்களுக்கும்[வயது பொருட்டல்ல] புரியும் படி தருகிறது.  

http://tamilkalam.in/
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் உருவான இத்தளம், கேட்க,பேச,எழுத உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எழுத்துருக்கள் எல்லாம் TABபாடவாரியாக வகைப்படுத்தி கற்றுத் தருகிறது. வடிவில் உள்ளதால் சில கணினிகளில் எழுத்துருவை[font] தரவிறக்க வேண்டிவரும்

பேச்சுத் தமிழை கொஞ்சம் கற்க நினைப்பவர்கள் இந்த தளத்தை நம்பலாம். சிறு சிறு வாக்கியங்களாக ஆங்கிலம் முதல் பல இந்தியா மொழிகள் மூலமாக தமிழ் வாக்கியங்களை கற்றுத் தருகிறது.

http://www.tamil-online.info/Introduction/learning.htm
கட்டண வழியில் கற்றுத்தரும் ஒரு தளம்

இந்த சுட்டிகளில் எண்ணற்ற தமிழ் கற்பிக்கும் படக்கோப்புகள் உள்ளன. விரும்பியவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் உதவும் சில இடங்கள்
ஆறுப் பக்கம் கொண்ட இந்தத் தொகுப்பு தமிழ் எழுத்து உச்சரிப்பை புதியவர்களுக்கு கற்றுத்தருகிறது.[கொஞ்சம் பழைய எழுத்து உருவங்களைக் கொண்டது]

352 பக்கம் கொண்ட ஆங்கில வழி தமிழ் கற்பிக்கும் புத்தகம் இலவசமாக இந்தப் பக்கத்தில் உள்ளது வேண்டியவர்கள் செல்லலாம்.
முப்பது நாளில் தமிழ் கற்க என்ற புத்தகத்தை கூகிள் புக் இலவசமாக 18 பகுதிகள் வெளியிட்டுள்ளது.


மொழி வங்கி சேவை தரும் தளங்களில் பலர் தமிழ் கற்க பதிவு செய்கிறார்கள். அதில் எத்தனை பேர் உண்மையில் தொடர்கிறார்கள் என்பதைத் தவிர எத்தனை பேர் ஆர்வமாக உள்ளார்கள் என்று பார்க்கையில் நமது மொழியின் சிறப்புக்கு இது உயிரோட்டமான ஆதாரம் 
மேலும் சில தளங்கள்
இந்த தளங்களில் விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்து தமிழை மற்றவர்களுக்கு கற்றும் தரலாம் நாமுள் பல மொழிகளை கற்கலாம்.

குழந்தை தமிழில் குழந்தைகள் கற்கும் விதத்தில் வடிவமைக்கப் பட்டுள்ள தளங்கள் 

ஒரு மொழியை  எளிதில் கற்கவேண்டுமானால் அம்மொழித் திரைப் படங்களைப் பார்ப்பது என்பது மிகவும் நடை முறையில் உள்ள பழக்கம். அவற்றின் மூலம் அம்மொழி மிகுந்த வேகத்தில் வேற்று மொழியினருக்குப் புரியும் சாத்தியமுண்டு.
அடுத்த வழி முறை என்றால்  தமிழறிந்தோருடன் பேசிப் பழகுவது. நிறைவாக, தமிழைக் கற்க எனது வாழ்த்துகள்   
[[ஆரம்பலாகத்தில் இருந்த கல்வி, தமிழ் வகுப்பறை போன்ற தளங்கள் தற்போது இயங்காததால் இந்த பதிவில் குறிப்பிடவில்லை. அதைத் தவிர வேறு பயனுள்ள தளங்களிருந்தால் நீங்களும் இங்கே கட்டாயம் பகிர்ந்துக் கொள்ளுங்கள்]]


This post is to guide the non tamil speakers who are willing to learn Tamil. Initially I would like to appreciate your curiosity to learn Tamil as it is one of the living ancient language in the world. Here I listed few sites which provide you to learn more better, yes of course medium is in English.  
http://www.thetamillanguage.com/  - This site provides you the visual and audio environment to learn tamil with three types of practices. For better understanding Don't miss it.
http://www.unc.edu/~echeran/paadanool/home.html   -The site with brief explanation part in academical format 
http://www.learntamil.com/  one more good resource to fetch more vocabulary
http://learning-tamil.blogspot.com/
If you need to have blogging service, Here is the preeminent blog which provide you the frequent updates and solution for your queries. subscribe it soon.
http://www.tamil-online.info
This is a paid basis service to learn Tamil

for Quick words please follow the below sites

12 comments:

Praveenkumar said...

மிக அருமை நண்பரே..! தமிழ்மீது ஆர்வமள்ள வெளிநாட்டு மக்கள் இதை படித்தால் நிச்சயம் நம் செம்மொமி இன்னும் வளர்ச்சியடையும்..! இணைப்புகள் அனைத்தும் பயனுள்ளவை..! பாராட்டுகள்..!

நீச்சல்காரன் said...

@பிரவின்குமார்
உங்கள் கருத்து என்னை இன்னும் எழுதவைக்கிறது. நன்றிகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல தொகுப்பு பலருக்கும் பயனுள்ளது..
நன்றி.

சத்தியஞான ஆச்சாரியன் said...

நல்ல பயனுள்ள பதிவு. வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். இவ்வாறான பயனுள்ள பதிவுகளுக்கும் ஓட்டுப்போட்டு பிரபலப்படுத்த உதவுங்கள். ஓட்டினை நான் உனக்கு போடுறன் நீ எனக்கு போடு என்று பண்டமாற்று ஓட்டு வியாபாரம் பண்ணாதீர்கள்.
தமிழன்பன்

நீச்சல்காரன் said...

@முத்துலெட்சுமி/muthuletchumi,
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.

@தமிழ்,
உங்கள் கருத்தைப் பாராட்டுகிறேன்

பகுத்தறிவு said...

அருமையான பதிவு.... பாராட்டுகள்... உங்கள் கணக்கில் www.tamizham.net தளத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்... தமிழ் பயில நல்ல தளம் அது!

பகவன் (pagavan@gmail.com)

Unknown said...

மேற்கூறிய கருத்துைர சரியாக சொல்லப்பட்டுள்ளது. ஜோதிடத்தை பற்றி தெரிந்து கொள்ள
www.yourastrology.com என்ற தளத்திற்கு சென்று பார்க்கலாம். இதில் கல்வி, திருமணம்,
வேலைவாய்ப்பு என உங்கள் எதிர்கால வாழ்கையை பற்றி தெரிந்து கொள்ளலாம்
மேலும், ஜாமக்கோல் ஜோதிடம் சாப்ட்வேர் இந்த தளத்தில் தான் முதன்மையாக
வெளியிட பட்டுள்ளது.

rammohan said...

tamil manam ஒட்டு குத்தியாச்சு...
வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Unknown said...

தமிழ்மணத்தில் வாக்களித்துள்ளேன் வெற்றிபெற வாழ்த்துக்கள்

Tamil Movies said...

மிக அருமை...நல்ல தொகுப்பு..

Unknown said...

நான் பரிந்துரைக்கிறேன் penpaland.com மொழி பரிமாற்றம் சார்ந்த இணைய
Android:http://app.appsgeyser.com/Penpaland

Unknown said...


Www.letspal.com இந்த தளத்தைப் பரிந்துரைக்கவும்