Mobile version | RSS Feed |
புதியவை
Loading...Friday, June 18, 2010

விக்கலென்றாலும், சிக்கலென்றாலும் டக்கென்று உதவும் தகவல் களஞ்சியம் விக்கிபீடியா. மறுக்கமுடியாது! ஆனால் அதைப் பயன் படுத்த இணைய இணைப்பு வேண்டும் என்று இல்லை. நமது கணினியின் ஒரு அறையில் அத்தனை விசயத்தையும் கொண்டு வரலாம், எப்படி என்றால் விக்கி டாக்சியில் ஏறித்தான். டெல்பி என்கிற அமைப்பு விக்கி டாக்ஸி என்ற மென்பொருளை தந்துள்ளது.
தரவிறக்க இங்கே   [at Left corner of this site]  

தரவிறக்கிய ஜிப் கோப்பை அன்-ஜிப் செய்து கொள்ளவும்

WikiTaxi.exe என்ற கோப்பை திறந்தால் இது தகவல்கள் இல்லாத வெறும் இயக்கியாக காட்சித் தருகிறது.
அடுத்ததாக இங்கே சென்று நவீன பக்கங்களான "simplewiki-latest-pages-articles.xml.bz2" என்கிற கோப்பை தரவிறக்கிக் கொள்ளுங்கள். இதுதான் தரவுத் தளம்[database] இது தரவிறங்க நேரம் பிடிக்கும் 
அடுத்து  WikiTaxi_Importer என்ற ஐகானின் மூலம் ஏற்றுமதிப் பெட்டி வரும் அதில் தரவிறக்கிய தரவு தளத்தின் முகவரியைக் கொடுத்து செலுத்தவும். ஏற்கனவே நீங்கள் தரவிறக்கிய கோப்பென்றால் அதன் எக்ஸ்டன்சன் .taxi என்று முடியுமாறு இருக்க வேண்டும். தகவல் தளத்தைப் பொருத்தியவுடன் இப்படி காட்சிதரும்.

இதுவரை செய்தவற்றை ஒரு முறை செய்தாலே போதும். அடுத்து எப்போதெல்லாம் விக்கிப் பீடிய தேவையோ அப்போது WikiTaxi.exe என்ற கோப்பை திறந்து பயன் படுத்தத் தொடங்கலாம். இனி நீங்கள் விரும்பிய சொற்களை தேடலின் உதவியுடன் தேடிக்கொள்ளலாம். முடிந்த அளவு இணைய தேடலுக்கு இணையான தரத்தைத் தரும்.

அடுத்து முக்கியமானது, உங்கள் இணைய இணைப்பில்லா விக்கிப்பீடியாவை புனரமைப்பு செய்ய வேண்டுமென்றால் அதாவது நாளும் வளர்ந்துவரும் விக்கிப்பீடியாவின் புதியப் பக்கங்களை இணைக்க வேண்டுமென்றால் மீண்டும் "simplewiki-latest-pages-articles.xml.bz2" என்ற கோப்பை மேல் காட்டியுள்ள தளத்திலிருந்து தரவிறக்கி மீண்டும்  WikiTaxi_Importer மூலம் இணைத்துக் கொள்ளுங்கள்.
மாதத்திற்கு இரண்டு அல்லது ஒருமுறைதான் இந்த புதிய பக்கத்தின் தகவல்களை இந்த கோப்பில் இணைப்பதால், நாம் முன்று மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது தேவைப்படும் போதோ புதிது படுத்திக் கொள்ளலாம்.
இந்த தரவுகளில் தமிழ் விக்கி இல்லைதான் ஆனால் நாம் பயனாளர்களின் தேவை வருங்காலத்தில் பூர்த்தியாகலாம்

இதன் சிறப்பு:
இந்த விக்கியை பயன்படுத்த எந்த இன்ஸ்டலேசனும் இல்லை தரவிறக்கிய கருவியும் தகவல்தளமும்(database) இருந்தால் போதும். இதை சி.டியிலோ, அல்லது பென் டிரைவிலோ கூட பயன்படுத்தலாம். உங்களுக்கு இதை அழிக்க வேண்டுமென்றால் மொத்தமாக இந்த இரண்டையும் எளிதில் அழித்துக் கொள்ளலாம்.

அதன் அதிகாரப்பூர்வ தளம் இங்கே http://www.wikitaxi.org/ [இங்கே நமது பக்கத்தையும் பரிந்துரை செய்ததற்கு நன்றிகள்.}


13 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நல்லாருக்கே..

ஷர்புதீன் said...

USEFUL FRIEND

நீச்சல்காரன் said...

முனைவர்.இரா.குணசீலன்,
ஷர்புதீன்,
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்

Jayadev Das said...

ஐயா தெய்வமே, கவுரவமான அளவுக்குத் தகவல் வேணுமின்னா
3.5 GB அளவுக்கு தரவிறக்கம் செய்யனுமாமே, அது மட்டுமல்ல மாதா மாதம் அதை மேம்படுத்திக் கொண்டே [update] இருக்கணுமே, ஆகும் காரியமா இது? K. ஜெயதேவா தாஸ்.

நீச்சல்காரன் said...

@JEYADEVA
நல்ல கேள்வியை கேட்டதற்கு மிக்க நன்றி நண்பரே

இணைய தொடர்பில் அதிகம் இல்லாதவர்களுக்கும் குறைந்த நேரம் மட்டும் இணைய இணைப்பில் இருப்பவர்களுக்கும், அதிகமாக விக்கிபீடிய பயன்படுத்துபவர்களுக்கும் இந்த இணைய இணைப்பில்லா விக்கிபீடியா பயன்படும்.
இதை நீங்கள் மாத மாதம் அப்டேட் செய்ய வேண்டிய கட்டாயமில்லை. கடைக்குச் சென்று ஒருதகவல் களஞ்சியத்தை வாங்குவது போல இதை பார்க்கலாம். களஞ்சியம் அடிக்கடி மாறினாலும் அதிக பட்ச கொள்ளளவு மாறுவதில்லை. இதன் portablity மூலம் இணைய தொடர்பில்லா கணினியிலும் பென் டிரைவ் மூலம் விக்கிப்பீடியா அடைவது ஒரு சிறப்புதானே!

Anonymous said...

வாழ்த்துக்கள் ,
சிறந்த பதிவு
நன்றி

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

Thank you so much ...கற்றது கையளவு...

நீச்சல்காரன் said...

winmani,
தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை,
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்

Aadi said...

Thanks alot :)

aadimasam@gmail.com

செங்கோல் said...

மிக நல்ல பதிவு,அப்படியே மொபைல் gprs கனெக்ஷனை டெஸ்க்டாப்பில் இனைப்பது பற்றி ஒரு பதிவு போடலாமே

mathisutha said...

tits very help full article. thanks brother.

mathisutha.blogspot.com

முக்கோணம் said...

fantastic info..thanks

Ashley Ireland said...

winmani, தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்