Mobile version | RSS Feed |
புதியவை
Loading...Monday, September 20, 2010

இந்தியாவின் உயரியப் பதவிகளுக்கு தேர்வு நடத்தும் UPSC இணைய தளத்தில் சீன இணைய தளங்களுக்கு மறைமுகமாக இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

செப் 18 2010 இரவு http://upsc.gov.in இணையதளத்தில் உலவிக் கொண்டிருக்கையில் அதன் தளக் கட்டுமானம் பழைய வடிவத்தில் இருப்பதால் தற்செயலாக அதன் மூல நிரலிகளை[source code] எடுத்துப் பார்த்தேன். அதில் சற்றும் எதிர்பாராதவிதமாக சீன இணைய தளங்களுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை சாரதாரணக் கண்களுக்குப் புலப்படாதவாறு நிரலியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 36 முறை அந்நிய இணையத்திற்கு இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது, மீண்டும் இன்றும்[sep 20] அந்த நிரலிகள் அங்கேயே உள்ளது.


பொதுவாக இந்தியா அரசு தளங்கள் தனிநபர் விளம்பரமே கொடுக்காத நிலையில் அந்நிய நாட்டு தளத்திற்கு அதுவும் மறைமுகமாக கொடுக்கப்பட்டிருப்பது புதிராகவுள்ளது. சீனாவின் இணைய ஹாக்கிங் இதில் தலையிட்டுள்ளதா? அல்லது இந்தியா பொறியாளர்களின் கவனக் குறைவாக? வேறு இந்திய இணைய தளங்களிலும் இப்படி உள்ளதா? என்கிற கேள்விகள் எனக்கு எழுகிறது.

இதனால் எனக்குத் தெரிந்து இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ள தளங்களுக்கு தர ரேங்குகள் அதிகரிக்கும். மற்றும் சில நிரலிகள் எழுதி வேண்டிய இடங்களில் இந்த இணைய தளத்தை தடை செய்யவும் முடியும். அதுதவிர வேறு எதற்கு என்று யூகிக்க முடியவில்லை.

எதுவாகயிருந்தாலும் நமது அரசு தளத்தில் மாற்று நிரலிகள் இருப்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

1. upsc தளத்தின் மூல நிரலியின் படம் இது.
2. ஒரு தனியார் நிறுவன தளத்திற்கு 30 முறை இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
3. மற்றும் இரு தளத்திற்கு[புதிரான] இணைப்புக் கொடுக்கும் ஜாவா நிரலியுள்ளது.

upsc தளம் upsc தகவல் தொழிற்நுட்ப பிரிவின் மூலமாக பராமரிப்பட்டு, Mahanagar Telephone Nigam Limited மூலமாக வழங்கப்படுகிறது.

உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் முகவரிகள் ஏதும் என்னிடமில்லாததால் தகவல் அறிந்தவர்கள் தெரியப்படுத்தலாம்.

சீனாவின் சைபர் போர்குறித்த கட்டுரை உங்கள் கவனத்திற்கு.

பிற்சேர்க்கை:
மகிழ்ச்சிகரமாக அந்த கோடுகளை UPSC தளம் தற்போது[செப் 27] நீக்கிவிட்டது.விழிப்புணர்வுகரமாக இப்பதிவு நீக்கப்படாது.

13 comments:

Anonymous said...

ஆமாம் , நிறைய இணைப்புகள் உள்ளன. சரியான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லை என்றே நினைக்கிறேன். -- ஜெயகோபால் , கொலம்பஸ் , ஓஹயோ usa

நீச்சல்காரன் said...

ஜெயகோபால் , கொலம்பஸ் , ஓஹயோ usa கருத்துக்கு நன்றி

Anonymous said...

ஒரு fwd mail போடுங்க உங்க எல்லா friend க்கும்

JASS said...

ஆமாம் , இந்திய அரசு பாதுகாப்பு கவனம் செலுத்தவில்லை . இந்திய வின் பாதுகாப்பு தொடர்பான அனைத்துலும் சீனா ஊடுருவிவிட்டது. முதலில் சீனா வில் தயாராகும் அனைத்து தொலை தொடர்பு கருவிகள் நீக்கப்பட வேண்டும் .

Anonymous said...

இந்தியா வில் சீனா தொடர்பான கருவிகள் தடை விதிக்க வேண்டும் . பாதுக்கப்பு விஷயத்தில் சமரசம் கூடாது . இதை இந்திய அரசு தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும் . மேலும் இந்தியா உஷராக வேண்டும் ...

Anonymous said...

அப்ப இந்திய சீனாவுக்கும் அடிமையா? நான் அமெரிக்காவுக்கு மட்டும்தான்னு தப்ப நினச்சிட்டேன் (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)

RENGA

நீச்சல்காரன் said...

@JASS கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே!//ஒரு fwd mail போடுங்க உங்க எல்லா friend க்கும்//நீங்கள் fwd mail போட்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் நன்றிகள்.

smart said...

மிகவும் பெரியப் பிரச்சனை
பகிர்வுக்கு நன்றி
இந்தக் கட்டுரையைப் படிக்கவும்
சைபர்.. போர்

smart said...

அந்த கோடுகளைப் எப்படிப் போட்டார்களோ அந்த முறையில் டேட்டபேசிலிருந்து தகவல்களை திருடும் கோடுகளையும் போடமுடியும்
அரசு என்ன செய்கிறது பாதுகாப்பேயில்லையா?

நீச்சல்காரன் said...

வாங்க ஸ்மார்ட், உங்க கருத்துக்கும் கட்டுரைக்கும் நன்றிகள்.

Unknown said...

நான் இதை இந்திய அரசின் கவனத்திற்கு என்னால் முடிந்த வரை எடுத்துச் சென்றுள்ளேன் தோழரே.

--ஞெலிநரி வெய்யோன்

http://twitter.com/FirefoxSurya
http://FirefoxSurya.blogspot.com

SueJo said...

இப்ப வெப் சைட்டு ஒழுங்கா இருக்கு.

நீச்சல்காரன் said...

@SueJo ஆமாம், நண்பரே அதையும் பிற்சேர்க்கையில் குறிப்பிட்டுள்ளேன்.உங்கள் கருத்துக்கு நன்றி @ஞெலிநரி வெய்யோன் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்