Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Wednesday, September 15, 2010

என்னதான் தமிழ் பதிவரானாலும் ஆதியில் அவரும் ஒரு வாசகரே அதற்கேற்றார் போல பதிவுகளும், மறுமொழிகளும் பெருகுகிறது. பதிவுகள் தவிர்த்து வலைப் பூக்களில் உரையாடப்படும் மறுமொழிகள் பதிவுகள் திரட்டப் படும்மளவு சேகரிக்கமுடிவதில்லை காரணம் நமது மறுமொழி பல தளங்களில் இருப்பதால் அவற்றை மட்டும் எடுப்பதென்பது சிக்கலான ஒன்று. கவனிக்க, தனி ஒருவர் பல தளங்களில் இடும் மறுமொழியை மட்டும் திரட்ட முடிவதில்லை.


அவ்வகையில் தமிழ் பதிவுலகில் கணிசமான மறுமொழியைத் திரட்டுவது, தமிழ்மணத்தின் மா திரட்டி. இதில் பதிவு செய்யப்பட்ட தளங்களில் நாமிடும் மறுமொழிகள் திரட்டப்படுகிறது. அதை வாசிக்கலாம் ஆனால் குறிப்பிட்ட கால நேரத்திற்குப் பிறகு அவற்றை பார்க்கமுடிவதில்லை மற்றும் எந்த வகை செய்தியோடையும்[feeds] இல்லாததால் நமது தளத்தில் அவற்றை பொருத்தமுடிவதில்லை.

அடுத்ததாகப் பார்த்தால் http://intensedebate.com என்கிற தளம் இந்த வித சேவையைத் தருகிறது. ஆனால் அந்த தளத்தில் இணைக்கப்பட்ட தளங்களில் மட்டுமே முடியும். எல்லா தமிழ் பதிவுகளில் இனி இது சாத்தியப்படுவது சிரமமாக இருக்கலாம்.

ஒருவர் மற்ற தளங்களில் இடும் மறுமொழிகளை எப்படி சேகரிப்பது என்கிற முயற்சியில் சில வேலைகள் கடந்து ஒரு  செய்தியோடையை உருவாக்கியுள்ளேன்.
சோதனை முயற்சி:
இது எப்படி செயல் படுகிறது?

இந்த மறுமொழிகள் அனைத்தும் நான் சமீபகாலங்களில் அந்தப் பட்டியலில் உள்ள தளங்களில் இட்டவை. இவை நாளொரு வீதம் மாறிக்கொண்டே இருக்கும். செய்தியோடையாக கூகிள் ரீடர் அல்லது ஏதாவது ஒன்றில் சந்தாதாரராகிவிட்டால் உங்கள் மறுமொழிகள் பத்திரமாக சேமித்துக் கொள்ளலாம்.


இதுவரை தமிழில் பல தளங்கள் இருப்பதால் அனைத்தையும் தனியாகத் திரட்ட கணிசமான நேரம் செலவாகுவதால் பதிவர் மெனக்கட்டு தயாரித்த இந்த பட்டியலை நன்றியுடன் பயன்படுத்தியுள்ளேன்.

இதில் ப்ளாக்கரைச் சேர்ந்த 953 தளங்கள் உள்ளன. மறுமொழியாளரின் நம்பகத்தன்மை குறைபாடால் வேர்ட்பிரஸ் தளங்களை தவிர்த்துள்ளேன். அவற்றை மட்டும் இந்த சோதனை முயற்சிக்காக இணைத்துள்ளேன். அந்தப் பட்டியல் இங்கே உள்ளது, அந்தப் பட்டியலில் இல்லாத தமிழ் தளங்கள் பல உள்ளன அவற்றையும் சேகரிக்க தொடங்கியுள்ளேன். உங்களின் தளங்கள் அல்லது உங்கள் நண்பர்களின் தளங்கள் ஏதேனும் விடுபட்டிருந்தால் தயவு கூர்ந்து அந்த தளத்தைத் தெரியப்படுத்துங்கள்.


எப்படி பயன்படுத்துவது?

உங்கள் கூகிள் ரீடர் அல்லது எந்தவொரு யோடை படிப்பானுக்கும் பயன் படும் செய்தியோடை இது தான்
http://pipes.yahoo.com/pipes/pipe.run?_id=7efc1466a3096cc31ee34beda8ab0e73&_render=rss&commentator=http://www.blogger.com/profile/12133782203492631856
இதில் எனது முகவரிக்குப் பதில் வேண்டியவரின் முகவரியை இட்டால் போதும்.
கூகிள் ரீடரில் எப்படி இணைப்பது என்று மட்டும் சொல்கிறேன். கூகிள் கணக்கிற்குள் நுழைந்த பிறகு http://www.google.com/reader இந்தப் பக்கம் செல்லவும்

அம்புக்குறி காட்டிய இடத்தில் சொடுக்கி உங்கள் செய்தியோடையை[மேலே உள்ள உரலியில் உங்கள் ப்ளாக்கர் முகவரியை இடவும்] கொடுக்கவும் (உள் படம் பார்க்க)
இப்படி உங்கள் மறுமொழிகள் சேகரிக்கத் தொடங்கிவிடும்.

இது சோதனைக் கட்ட முயற்சியாதலால் உங்கள் தளங்களில் இதை தற்போதைக்கு நிரந்தரமாக இணைக்க வேண்டாம். நீங்களும் ஒரு சோதனைக்கு தற்காலிகமாக இணைத்துப்பார்க்கலாம்.
அதற்கான நிரலி

<script src="http://l.yimg.com/a/i/us/pps/listbadge_1.4.js">
{"pipe_id":"7efc1466a3096cc31ee34beda8ab0e73","_btype":"list","pipe_params":{"commentator":"http:\/\/www.blogger.com\/profile\/12133782203492631856"}}</script>
இங்கே முக்கியமாக அந்த பிளாக்கர் அடையாள இலக்கத்தை மட்டும் மாற்றவும்.

இந்த திரட்டியின் செயல்பாடு குறைகள் மற்றும் விடுபட்ட தமிழ் தளங்கள் ஆகியவற்றை எனக்குத் மறுமொழியிலோ அல்லது மின்னஞ்சலிலோ தெரிவிக்கலாம்.
விரைவில் மறுமொழித் திரட்டி அறிமுகமாகும்.

Update:மறுமொழித் திரட்டி released
இது சோதனைப்பதிவு என்றாலும் உங்கள் ஓட்டுக்கள் செல்லும்

6 comments:

சசிகுமார் said...

நன்றி

நீச்சல்காரன் said...

@ சசிகுமார்
மிக்க நன்றி சகோதரரே

Anonymous said...

என்ன தலைவரே கடும் உழைப்பு போல இருக்கு..ரொம்ப ந ல்ல முயற்சி பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்

நீச்சல்காரன் said...

@ஆர்.கே.சதீஷ்குமார் [im]http://greetings.webdunia.com/cards/tm/thank_you/thaks02.jpg[/im]

pichaikaaran said...

சரியா புரியல

நீச்சல்காரன் said...

@பார்வையாளன்
அன்பு நண்பருக்கு,
கருத்தைக் கேட்டதற்கு நன்றிகள். தற்போது இந்த பதிவின் பொது செய்த சோதனை வெற்றிப் பெற்றதால் மறுமொழித் திரட்டி உதயமாகிவிட்டது.
இது எப்படி செயல் படுகிறது என்றால்,
நீங்கள் இப்போது எனக்கு மறுமொழியிடுகிறீர்கள் அடுத்து மற்றவருக்கும் இடுகிறீர்கள் இப்படியாக ஒரு நாளைக்கு பத்து பதிவுகளுக்கு மறுமொழியிடுகிறீர்கள்.
அடுத்த நாள் திடீர் என்று அந்த பத்து மறுமொழிகளையும் பார்க்க ஆசைப் படுகிறீர்கள் ஆனால் எந்த பதிவுகளுக்குப் போட்டீர்கள் என்று தெரியவில்லை. இந்த சூழலில் இந்த மறுமொழித் திரட்டி என்ன செய்யும் என்றால், உங்கள் பிளாக்கர் முகவரியைக் கொடுத்தால் நீங்கள் கடைசியாக மறுமொழியிட்ட அந்தப் பதிவுகளைக் காட்டும்.
வேண்டுமென்றால் அதை உங்கள் ரீடரில் இணைத்துவிட்டால் தொடர்ந்து நீங்கள் போடும் எல்லா மறுமொழிகளும் அங்கே சேமிக்கப் படும் எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம்.

உங்கள் எல்லா பின்னுட்டத்தையும் நான் பார்க்கமுடியும் அதுபோல எனது முகவரியைக் கொடுத்தால் எனது பின்னுட்டத்தையும் நீங்க பார்க்கலாம்.